சம்மாந்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
No edit summary
வரிசை 37: வரிசை 37:


[[படிமம்:Paddy field in Sammanthurai, Ampara, Sri Lanka.JPG|thumb|Paddy field in Sammanthurai, Ampara, Sri Lanka]]
[[படிமம்:Paddy field in Sammanthurai, Ampara, Sri Lanka.JPG|thumb|Paddy field in Sammanthurai, Ampara, Sri Lanka]]

===வரலாறு===


=== குடி வரலாறு ===
=== குடி வரலாறு ===

02:20, 23 பெப்பிரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

சம்மாந்துறை
Sammanthurai
සමන්තුරේ
நகரம்
சம்மாந்துறை மணிக்கூட்டுக்கோபுரம்
சம்மாந்துறை மணிக்கூட்டுக்கோபுரம்
நாடு இலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்அம்பாறை
பிரதேசச் செயலகம்சம்மாந்துறை
மக்கள்தொகை60,596
அரசு
 • வகைபிரதேச சபை
 • பிரதேசச் செயலர்A.M.முஹம்மத் நௌசாத்
நேர வலயம்நேர வலயம் #UTC + 6, F (ஒசநே+5:30)
இலங்கை தபால் கோடு32200
இணையதளம்சம்மாந்துறை உள்ளூராட்சி மன்ற இணையத்தளம்

சம்மாந்துறை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் தென்கிழக்கு என அடையாளப் படுத்தப்பட்ட பிரதேசம். புவியியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் கேந்திர முக்கியத்துவமான இடத்தில் அமைந்துள்ள சம்மாந்துறை இப்பிரதேசத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றாக கணிக்கப்படுகின்றது. இப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கிறார்கள்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகரும், தலைவரும், முன்னாள் துறைமுக அபிவிருத்தி புனருத்தாரண அமைச்சருமான மு. ஹு. மு. அஷ்ரப் சம்மாந்துறையில் பிறந்தவர்.

Paddy field in Sammanthurai, Ampara, Sri Lanka

வரலாறு

குடி வரலாறு

சம்மாந்துறையில் 33க்கு மேற்பட்ட குடிகள் காணப்பட்டிருந்தாலும் தற்போது 31 குடிகளே வழக்கில் உள்ளன.

பள்ளிவாசல்களின் வரலாறு

சம்மாந்துறையில் 40ற்கும்மேற்பட்ட பள்ளிவாயில்களும் ஸியாரங்களும் இருக்கின்றன.

  • முகையதீன் பள்ளி (12ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது) (சின்னப்பள்ளி)
  • பெரிய பள்ளி (15ஆம் நூற்றாண்டு) கோஸப்பா பள்ளி)
  • கலந்தரப்பா பள்ளி (8ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது)
  • குருந்தையடியப்பா பள்ளி
  • காட்டவுலியா பள்ளி
  • வீரையடியப்பா பள்ளி
  • மஸ்ஜிதுல் தைக்கிய்யா
  • மஸ்ஜதுல் உம்மா (புதுப்பள்ளி , மதரஜா பள்ளி)
  • மஸ்ஜிதுல் ஸலாம்
  • மஸ்ஜிதுல் அழ்பர்
  • மஸ்ஜிதுல் ஜாரியா
  • மஸ்ஜிதுல் ஜலாலியா
  • மஸ்ஜிதுல் கைர்
  • 2 மஸ்ஜிதுல் நகர்
  • மஸ்ஜிதுல் பதஹ்

இஸ்லாமும் இஸ்லாமிய கலாச்சாரமும்

சம்மாந்துறைப் பிரதேசத்தில் உள்ள 44 பள்ளிவாசல்களையும் மற்றும் மத்ரசதுல் தப்லீகுல் இஸ்லாம் அரபுக்கல்லூரியும்[1], அல் ஹசனாத் குர் ஆன் மனனக்கல்லூரியும் ஒரு நம்பிக்கையாளர் சபையூடாக நிருவாகித்து வருகின்றது. மஜ்லிஸ் அஷ்ஷரா ஊராளுமன்றமாகவும், நம்பிக்கையாளர் சபை ஒரு மந்திரிசபை போன்றும் ஒவ்வொரு ஜமாஅத் நிருவாகங்களும் மாநில அமைப்பாகவும் செயற்பட்டுவருவதை அவதானிக்கலாம். மஜ்லிஸ் அஷ்ஷராவின் அமீர் (தலைவர்) சம்மாந்துறையில் அதியுயர் சபையின் அமீர் ஆகையால், இவர் சம்மாந்துறையின் சமூகத் தலைவராகவும் கணிக்கப்படுகின்றார். மஜ்லிஸ் அஷ்ஷரா அமைப்பு நம்பிக்கையாளர் சபையைத் தெரிதல், வரவு செலவுத் திட்டங்களை அங்கீகரித்தல், கணக்காய்வு அறிக்கைகளைப் பரிசீலித்தல், சமய நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்லல், சமூகங்களுக்கிடையில் இன நல்லுறவை ஏற்படுத்தல், மிக முக்கியமான தீர்மானங்களை மேற்கொள்ளல் என்பனவாகும்.

கல்வி

சம்மாந்துறையில் ஆரம்பப் பாடசாலைகள் முதல் பல்கலைக்கழகம் வரை பலவகையான கல்விக்கூடங்கள் உள்ளன. அவையாவன:

  • தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பிரிவின் வளாகம்[2]
  • சம்மாந்துறை தொழில் நுட்ப கல்லூரி[3]
  • தொழில் பயிற்சி நிலையம்
  • சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம்[4],
  • பல ஆரம்ப பாடசாலைகள்
  • பல உயர்தர பாடசாலைகள்
  • சம்மாந்துறை வலய கல்வி அலுவலகம்.[5]
  • ஆறு பொது நூலகங்கள்

விளையாட்டு

பொது விளையாட்டு மைதானம் ஒன்றும், நீச்சல்தடாகம், உடல்வலுவூட்டல் நிலையம், பெட்மின்டன், மேசைப்பந்து, கூடைப்பந்து மைதானங்களுடன் ஜனாதிபதி விளையாட்டரங்கத் தொகுதி, பொது சிறுவர் பூங்காக்கள் மூன்று ஆகியன காணப்படுகின்றன.

தொழிற்துறைகள்

பிரதான தொழில் நெல் விவசாயம், செங்கல் உற்பத்தி, நன்னீர் மீன்பிடி, கல்லுடைத்தல் மற்றும் சிறு கைத் தொழில்களும் உள்ளன.

உசாத்துணை

  1. http://srilankalaw.lk/revised-statutes/volume-vii/1091.html Sammanthurai Thableekul Islam Arabic College
  2. http://www.seu.ac.lk/fas/ Faculty applied sciences
  3. [1]
  4. http://www.smmmmvns.sch.lk/web/ சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயம்
  5. http://www.strzeo.org/Template/aboutus.html வலய கல்வி அலுவலகம் சம்மாந்துறை
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்மாந்துறை&oldid=2027659" இலிருந்து மீள்விக்கப்பட்டது