தமிழ்நாட்டுப் பொருளாதாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 219: வரிசை 219:
=== சேவை துறை ===
=== சேவை துறை ===


[[File:Tidel Park.jpg|thumb|right|250px| [[டைடல் பூங்கா]] சென்னை.]]
[[File:Tidel Park.jpg|thumb|right|150px| [[டைடல் பூங்கா]] சென்னை.]]
[[படிமம்:கேப்ஜெமினி.jpg|150px|thumb|[[கேப்ஜெமினி|கேப்ஜெமினி மென்பொருள் நிறுவனம்]], கரூர் ரோடு, [[திருச்சி]] ]]


சேவை துறை என்பது தொட்டுணர முடியாத பொருள்களை உருவாக்கும் துறையாகும்.சேவை துறையின் என்பது போக்குவரத்து, சுகாதாரம், மென்பொருள், பொழுதுபோக்கு முதலிய துறைகளை உள்ளடக்கியது.தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தில் சேவை துறையின் பங்கு 45%.
சேவை துறை என்பது தொட்டுணர முடியாத பொருள்களை உருவாக்கும் துறையாகும்.சேவை துறையின் என்பது போக்குவரத்து, சுகாதாரம், மென்பொருள், பொழுதுபோக்கு முதலிய துறைகளை உள்ளடக்கியது.தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தில் சேவை துறையின் பங்கு 45%.
வரிசை 225: வரிசை 226:
==== மென்பொருள் ====
==== மென்பொருள் ====
[[படிமம்:விப்ரோ சோழிங்கநல்லூர் சென்னை.jpeg|150px|thumb|[[விப்ரோ|விப்ரோ மென்பொருள் நிறுவனம்]], [[சோழிங்கநல்லூர்]], [[சென்னை]] ]]
[[படிமம்:விப்ரோ சோழிங்கநல்லூர் சென்னை.jpeg|150px|thumb|[[விப்ரோ|விப்ரோ மென்பொருள் நிறுவனம்]], [[சோழிங்கநல்லூர்]], [[சென்னை]] ]]

[[படிமம்:கேப்ஜெமினி.jpg|150px|thumb|[[கேப்ஜெமினி|கேப்ஜெமினி மென்பொருள் நிறுவனம்]], கரூர் ரோடு, [[திருச்சி]] ]]


தமிழ்நாட்டில் 934 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.தமிழ்நாட்டில் 110 தொழில் பூங்காக்கள் உள்ளன. '''[[மென்பொருள்]]''' அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் மாநிலங்களில், தமிழ்நாடு கர்நாடகா, மாகாராஸ்திராவுக்கு அடுத்து மூன்றாவது பெரிய மாநிலம். 2011-2012 ஆம் ஆண்டு, மென்பொருள் ஏற்றுமதி $8.5 [[பில்லியன்]] என்ற அளவில் இருந்தது. தமிழ்நாட்டில் மென்பொருள் மற்றும் மென்பொருள் சார்ந்த துரைகளில் 3.75 லட்சம் பேர் நேரடியாவும், 7.50 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்<ref>[http://www.ciol.com/ciol/features/196750/tamil-nadu-preferred-investment-destination-india/page/1 Tamil Nadu most preferred investment destination in India]</ref>.
தமிழ்நாட்டில் 934 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.தமிழ்நாட்டில் 110 தொழில் பூங்காக்கள் உள்ளன. '''[[மென்பொருள்]]''' அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் மாநிலங்களில், தமிழ்நாடு கர்நாடகா, மாகாராஸ்திராவுக்கு அடுத்து மூன்றாவது பெரிய மாநிலம். 2011-2012 ஆம் ஆண்டு, மென்பொருள் ஏற்றுமதி $8.5 [[பில்லியன்]] என்ற அளவில் இருந்தது. தமிழ்நாட்டில் மென்பொருள் மற்றும் மென்பொருள் சார்ந்த துரைகளில் 3.75 லட்சம் பேர் நேரடியாவும், 7.50 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்<ref>[http://www.ciol.com/ciol/features/196750/tamil-nadu-preferred-investment-destination-india/page/1 Tamil Nadu most preferred investment destination in India]</ref>.

04:01, 22 பெப்பிரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

தமிழ்நாட்டுப் பொருளாதாரம்
தரவரிசை2
நாணயம்இந்திய ரூபாய்
புள்ளி விவரம்
மொ.உ.உ72,311 கோடி ரூபாய் (2013)
வெளிக்கூறுகள்
பொது நிதிக்கூறுகள்
வருவாய்46518.77 கோடி
செலவினங்கள்45601.12 கோடி
'
இந்தியா லாண்ட் டெக் பார்க்,அம்பத்தூர்

தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தில் (ஆங்கிலம்: Economy of TamilNadu) சேவைத் துறை 45%, தொழில் துறை 34%, விவசாயம் 21% பங்களிக்கின்றன. தமிழ்நாடு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் (2013–14) இந்தியாவின் மாநிலங்களில் நான்காவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. கோயம்புத்தூர் நெசவாலைகளுக்கும், ஈரோடு மஞ்சள் சாகுபடி மற்றும் ஆடை ஏற்றுமதிக்கும், திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கும், சேலம் இரும்பு உருக்கு ஆலைகளுக்காகவும், நாமக்கல் கோழிப் பண்ணைகள், குழாய்க் கிணறு அமைக்கும் தொழில், பண்டங்களைப் போக்குவரவு செய்யும் கனரக வாகனங்களை இயக்கும் தொழிலுக்காகவும், சிவகாசி அச்சுத் தொழில், பட்டாசு உற்பத்திக்கும், காவிரி பாசன பகுதியில் அமைந்துள்ள திருச்சி, வேலூர் தோல் தொழிலுக்கும், தஞ்சை போன்ற பகுதிகள் விவசாயத்திற்கும், சென்னை வாகன உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களுக்கும் பெயர் பெற்றுள்ளன.

தென்தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியில் தமிழகத்தின் இரண்டாவது பெரிய துறைமுகம் உள்ளது. தூத்துக்குடியில் மின்னுற்பத்தி நிலையங்களும், உர, உலோகத் தொழிற்சாலைகளும் உள்ளன. கரூரில் நெசவுத்தொழிலும், பேருந்து, சரக்குந்துகளுக்கு கூடு கட்டும் தொழிலும் நன்கு வளர்ந்துள்ளன. பெங்களூருக்கு அருகில் உள்ள ஓசூரில் தானுந்துத் தொழிற்சாலைகள் (அசோக் லேலண்டு, டிவிஎஸ்), மற்ற இயந்திரத் தொழிற்சாலைகளும் (டைட்டன்) உள்ளன.

பாலிவுட் என அழைக்கப்படும் மும்பை திரைப்படத் துறைக்கு அடுத்ததாக, தமிழகத் திரைப்படத்துறை இந்தியாவின் இரண்டாவது பெரிய திரைப்படத் தொழில் மையமாகவும் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும், பெருமளவில் தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் சினிமாப் படங்கள் தமிழ் நாட்டில் தயாரிக்கப்படுகின்றன.

பொருளாதார வளர்ச்சி

கத்திப்பாரா முனை,சென்னை

2011-2012ஆம் ஆண்டில் தமிழ் நாட்டின் வளர்ச்சி விகிதம் 9.39 விழுக்காடு. தமிழ் நாட்டின் வளர்ச்சி விகிதம் மற்ற தென் மாநிலங்களை விட அதிகமாக உள்ளது. தமிழ்நாடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவில் இரண்டாவது பெரிய மாநிலமாக உள்ளது[1]. தமிழ்நாடு அரசு மாநில வரி வருமானத்தில், இந்தியாவில் நான்காவது இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் பெரும்பான்மையான இந்திய மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் (2012–13) ரூபாய் 98,550 [2]

வருடம் தனி நபர் வருமானம் ரூபாய்
2010-2011 78473
2011-2012 88697
2012-2013 98,550
வருடம் மொத்த உள்நாட்டு உற்பத்தி மில்லியன் ரூபாய்
1980 80,810
1985 156,481
1990 313,390
1995 782,050
2000 1,411,000
2005 1,945,280[3]
2009 4,020,820 [4]
2010 4,640,090 [5]
2011-12 6,653,120
2012-13 7,444,740

தமிழ் நாடு - முதல் 10 முதலீடுகள் [6]

தமிழகத்தில், 15 ஆண்டுகளில், முதலீட்டில், முதல் 10 இடங்களை பிடித்த நிறுவனங்களின் பட்டியல்.

நிறுவனம் முதலீடு (ரூபாய் கோடியில்)
போர்டு 4,110
ஹாஸ்பைரா எல்த்கேர் 3,648
டெய்ம்லர் 3,594
ரெனால்ட் - நிசான் 3,154
டபிள்யு.எஸ்., எலக்ட்ரிக் 1,781
எல்.பி., கியூப் சிஸ்டம் 1,406
நிசான் 1,026
மிஷலின் 686
ஷெல் காஸ் பி.வி., 539
சென் கோபைன் 517

ரகுராம் ராஜன் அறிக்கை

பாரத மிகு மின் நிறுவனம், திருமயம்

இந்தியாவின் முன்னேறிய மற்றும் பின்தங்கிய மாநிலங்களைக் கண்டறிவதற்காக ரகுராம் ராஜன் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழு ஒரு குறியீட்டை உருவாக்கியது. குறியீட்டு அளவு 0 முதல் 1 வரை, இதில் 0 என்பது முன்னேறிய மாநிலம், 1 என்பது மிகவும் பின்தங்கிய மாநிலம் ஆகும். ரகுராம் ராஜன் அறிக்கையின் படி[N 1], தமிழ்நாடு மூன்றாவது முன்னேறிய மாநிலம்[7]. தமிழ்நாட்டின் ஏழ்மைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் விகிதம் 11.28 விழுக்காடு. மற்ற இந்திய மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டின் ஏழ்மை விகிதம் குறைவு [8].

  • குறியீடு 0.4க்கு கீழ் - முன்னேறிய மாநிலம்.
  • குறியீடு 0.4க்கு மேல், 0.6க்கு கீழ் - பின்தங்கிய மாநிலம்.
  • குறியீடு 0.6 , 0.6க்கு மேல் - மிகவும் பின்தங்கிய மாநிலம்.

குறியீட்டுக்கான அடிப்படை அளவுருக்கள்: வருவாய், கல்வி, சுகாதாரம், வீட்டு வசதிகள், வறுமை, பெண் கல்வியறிவு, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், நகரமயமாக்கல் விகிதம், நிதி சேர்ப்பதற்கான வழிகள், இணைப்பு.

ரகுராம் ராஜன் அறிக்கையின் படி, கீழே இந்தியாவின், மிக முன்னேறிய மாநிலங்கள், மேல் இருந்து கீழ்:

மாநிலம் குறியீடு
கோவா 0
கேரளா 0.095
தமிழ்நாடு 0.341
பஞ்சாப் 0.345
மகாராஸ்திரா 0.352
உத்ராகண்ட் 0.383
ஹரியானா 0.395

தொழிற்துறை வாரியாக

இன்றும் மரபுசார் வேளாண்மை, தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மீன்பிடிப்பு
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டம்.

வேளாண்மை

தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தில் வேளாண்மை துறையின் பங்கு 21%. வேளாண்மை துறை என்பது விவசாயம், சுரங்கம், வனவியல், மேய்ச்சல், குவாரி முதலிய துறைகளை உள்ளடக்கியது. தமிழகத்தின் விவசாயத்துறையின் துறையின் வளர்ச்சி விகிதம் எதிர்த்திசையில் உள்ளது. அதாவது 1991-92 ஆம் ஆண்டில் 11.42% ஆக இருந்த விவசாயத்துறை வளர்ச்சி, 2008-09 ல் -2.65% ஆக உள்ளது [9]

விவசாயம்

தமிழ்நாட்டு பொருளாதாரத்தின் மிக முக்கியமான துறையாக விவசாயம் உள்ளது. மாநில மக்கள் தொகையில் 70%, விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த நடவடிக்கைகளில், தங்கள் வாழ்வாதாரத்திற்காக ஈடுபட்டுள்ளனர்[10]

தஞ்சை, திரூவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் 8 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் விளையும் முக்கிய பழங்கள்:: வாழை மற்றும் மாம்பழம். தமிழ்நாட்டில் விளையும் முக்கிய காய்கறிகள்:: மரவள்ளிக்கிழங்கு, தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய் மற்றும் முருங்கை. தமிழ்நாட்டில் விளையும் முக்கிய மசாலா::கருவேப்பிள்ளை, மஞ்சள், கொத்துமல்லி, மிளகாய், புளி. தமிழ்நாட்டில் விளையும் முக்கிய பூக்கள்:: மல்லிகை, முல்லை, சாமந்தி, ரோஜா, செவ்வந்தி. ஓசூர் நகரிலிருந்து ரோஜா ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது[11].

மரவள்ளிக்கிழங்கு உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.[12]. கரும்பு சாகுபடியில் இந்தியாவில், தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது[13]. சப்போட்டா உற்பத்தியில் இந்தியாவில், தமிழ்நாடு மூன்றவது இடத்தில் உள்ளது[14]. அரிசி உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாடு ஆறாவது இடத்தில் உள்ளது.

கீழே தமிழ்நாட்டில், பழங்கள் விளையும் முக்கிய இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன

பழம் இடம்
வாழை திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வெலி, கன்னியாகுமரி [15]
மாம்பழம் கிருஷ்ணகிரி, வேலூர், திண்டுக்கல் [16]
சப்போட்டா திருநெல்வெலி, ஈரோடு, கரூர்
திராட்சை தேனி, கோவை
கொய்யா மதுரை, திண்டுக்கல், வேலூர்

கீழே தமிழ்நாட்டில், காய்கறி விளையும் முக்கிய இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன

காய்கறி இடம்
மரவள்ளிக்கிழங்கு நாமக்கல் , சேலம், தருமபுரி [17]
தக்காளி கோவை, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி [18]
வெங்காயம் பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், திண்டுக்கல்
கத்தரிக்காய் வேலூர், தேனி, கோவை
முருங்கை தூத்துக்குடி, திண்டுக்கல், கரூர்
உருளை நீலகிரி, திண்டுக்கல்

கோழிப்பண்ணை

நாமக்கல் மாவட்டத்தில் 1500க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் 3 1/2 கோடி முட்டைகள் கிடைக்கின்றன. மொத்த உற்பத்தியில் 40 விழுக்காடு கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவற்றில் தினமும் 25,00,000 முட்டைகள் லய்பிரியா, பகுரைன், ஆப்கானித்தான், ஓமான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மீன்பிடிப்பு

மீன் பிடிப்பு, வளர்ப்பு அத்தொழிலுடன் நேரடி தொடர்புடைய பிற செயற்பாடுளும் தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்துறை எனலாம். இது தமிழ்நாட்டின் முக்கிய தொழிற்துறைகளில் ஒன்று. கடலும், கடல்சார் வாழ்வும் தமிழ் மீனவர்களின் ஒரு நெடுங்கால வாழ்வு முறையும் தொழிலும் அகும்.

தமிழ்நாடு, 1076 கிலோ மீட்டர் நீளக் கடல்கரையை கொண்டுள்ளது. மீன் பிடி தொழிலில், இந்தியாவில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது. 2007-2008, கணக்கெடுப்பின் படி, மீன் பிடி 559,360 மெட்ரிக் டண்கள்.

உற்பத்தி

தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தில் உற்பத்தி துறையின் பங்கு 34%.உற்பத்தி துறை என்பது மின்னணுவியல், தானுந்து, நெசவு முதலிய துறைகளை உள்ளடக்கியது.

மின்னணுவியல்

தமிழ்நாடு மின்னணுவியல் தயாரிப்பு துறையில் வளர்ந்து வரும் மாநிலம். சென்னையில் மோட்டோரோலா, சோனி-எரிக்சன், சாம்சங், சிஸ்கொ, டெல், நோக்கியா[N 2] ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. டெல், வருடத்தில் தொராயமாக 4,00,000 மடிக்கணினி,மேசைத்தள கணினியைச் சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரிலிருந்து தயாரிக்கிறது.[19][20]. சாம்சங் சென்னையில் 2007ஆம் ஆண்டிலிருந்து தொலைக்காட்சி பெட்டிகளைத் தயாரிக்கிறது. சாம்சங் சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரிலிருந்து வருடத்தில் தொராயமாக 10,20,000 குளிர்சாதன பெட்டிகளை 2010ஆம் ஆண்டிலிருந்து தயாரிக்கிறது[21].

ஹவாய் ரூ. 25 கோடி செலவில் தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர் அருகே சிறப்பு பொருளாதார மண்டலத்தில், மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு தொழிற்சாலையை அமைக்க விருக்கிறது[22].

வாகன உற்பத்தி

ஹுன்டாய் தொழிற்சாலை திருப்பெரும்புதூர், இந்தியா.

தமிழக அரசின் தொழில் கொள்கை, அதிக வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு, சென்னையின் துறைமுக வசதி ஆகிய காரணங்களுக்காகச் சென்னையில் அதிக அளவில் வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. சென்னையில் பெருவாரியான வாகன உற்பத்தி நிறுவனங்கள் உள்ளதால் சென்னை 'ஆசியாவின் டெட்ராய்ட்' என்று அழைக்கப்படுகிறது. ஹுன்டாய் (கொரிய நிறுவனம்) வருடத்தில் 3,30,000 கார்களை (மகிழுந்து) சென்னையில் உள்ள தொழிற்சாலையிலிருந்து தயாரிக்கிறது. ஹுன்டாய் மார்ச் 2012 வரை, 1.5 மில்லியன் கார்களைச் சென்னையில் உள்ள தொழிற்சாலையிலிருந்து 120 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.[23]. போர்ட் (அமெரிக்க நிறுவனம்) தொழிற்சாலை, ரூபாய் 1700 கோடி முதலீட்டில், சென்னையை அடுத்த மறைமலை நகரில் அமைந்துள்ளது. போர்ட் தொழிற்சாலை ஆண்டுக்கு 100,000 கார்கள் வரை தயாரிக்கும் திறன் பெற்றுள்ளது[24]. ரெனால்ட்-நிச்சான் [பிரான்சு-ஜப்பான் கூட்டு தயாரிப்பு] சென்னை ஓரகடத்தில் ரூபாய் 4,500 கோடி முதலீட்டில் தொழிற்சாலை அமைத்துள்ளது. டைம்லர் பேருந்து தொழிற்சாலை சென்னை ஒரகடத்தில் 425 கோடி ரூபாய் முதலீட்டில் அமைந்துள்ளது[25].

நிறுவனம் இடம் நிறுவப்பட்ட ஆண்டு தானுர்ந்தி ரகம்
போர்ட் மறைமலை நகர், காஞ்சிபுரம் 1995 ஐகான், பியஸ்டா, பிகொ
ஹுன்டாய் திருபெரும்புதூர், காஞ்சிபுரம் 1996 சன்ட்ரொ, ஐ10, ஐ20, வெர்ணா, அக்சென்ட்
நிசான் ஒரகடம், காஞ்சிபுரம் 2005 டியனா
பியம்டபில்யு சிங்கப்பெருமாள்கோவில், சென்னை 2007 பியம்டபில்யு 3 வரிசை, பியம்டபில்யு 5 வரிசை, மினி கன்ட்ரிமன்[26]
ரெனால்ட் ஒரகடம், காஞ்சிபுரம் 2007 லொகன், டஸ்டர், பல்ஸ்
கொமாட்ஸ்யூ ஒரகடம் 2007 60 டன் மற்றும் 100 டன் ஆகிய சுரங்க ட்ரக் வண்டிகள் தயாரிப்பாளர்கள்

டி.வி.ஸ் இரு சக்கர வாகன தொழிற்சாலை, ஓசூரில் 174 ஏக்கர் பரப்பரவில் தொழிற்சாலை அமைந்துள்ளது[27]. ராயல் என்பில்டு, யமகா தொழில்சாலைகள் சென்னையில் அமைந்துள்ளன.

நெசவு

பருத்தி, பட்டு போன்றவற்றிலிருந்து நூலெடுத்து, துணியாக்கி, உடைகளை ஆக்கும் தொழிற்துறை நெசவுத்துறை ஆகும். தமிழ்நாட்டில் இருக்கும் கைத்தறியையும் பிற நெசவுத் தொழில்நுட்பங்களையும், தொழில் நிறுவனங்களையும், அரசு நெசவுத்துறை அலகுகளையும் தமிழ்நாட்டு நெசவுத்துறை எனலாம்[28].

  • திருப்பூர் - [29]
  • கரூர்

சேவை துறை

டைடல் பூங்கா சென்னை.
கேப்ஜெமினி மென்பொருள் நிறுவனம், கரூர் ரோடு, திருச்சி

சேவை துறை என்பது தொட்டுணர முடியாத பொருள்களை உருவாக்கும் துறையாகும்.சேவை துறையின் என்பது போக்குவரத்து, சுகாதாரம், மென்பொருள், பொழுதுபோக்கு முதலிய துறைகளை உள்ளடக்கியது.தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தில் சேவை துறையின் பங்கு 45%.

மென்பொருள்

விப்ரோ மென்பொருள் நிறுவனம், சோழிங்கநல்லூர், சென்னை


தமிழ்நாட்டில் 934 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.தமிழ்நாட்டில் 110 தொழில் பூங்காக்கள் உள்ளன. மென்பொருள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் மாநிலங்களில், தமிழ்நாடு கர்நாடகா, மாகாராஸ்திராவுக்கு அடுத்து மூன்றாவது பெரிய மாநிலம். 2011-2012 ஆம் ஆண்டு, மென்பொருள் ஏற்றுமதி $8.5 பில்லியன் என்ற அளவில் இருந்தது. தமிழ்நாட்டில் மென்பொருள் மற்றும் மென்பொருள் சார்ந்த துரைகளில் 3.75 லட்சம் பேர் நேரடியாவும், 7.50 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்[30].

இந்தியாவில் மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நகரங்களில், சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது.மென்பொருள் ஏற்றுமதி தமிழ்நாட்டில் 2008–09 ஆண்டு 29 விழுக்காடு உயர்ந்து, 280,000 மக்கள் வேலைவாய்ப்பு பெற்று, ரூபாய் 366.80 பில்லியன் என்று இருந்தது[31].

இந்தியாவின் மிகப் பெரிய மென்பொருள் பூங்கா, சிருசேரி, (ராஜீவ் காந்தி சாலை) சென்னையில் உள்ளது. எச்.சி.எல், விப்ரோ, டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், வேரைசன், சி.டி.எஸ், ஜன்சா, கோவன்சிஸ், சத்யம், பாலி டெக்னொலஜிஸ் ஆகிய மென்பொருள் நிறுவனங்கள் சென்னை நகரில் உள்ளன. ராபட் பொச், சி.டி.எஸ் ஆகிய மென்பொருள் நிறுவனங்கள் கோவை நகரில் உள்ளன. ஹனிவெல் டெக்னொலஜிஸ் மென்பொருள் நிறுவனம் மதுரை நகரில் உள்ளது.

வணிக செயல்முறை (பிபிஓ) நிறுவனங்கள் ஆகிய சிடெல் இந்தியா, எச்.சி.எல் பிஸ்னஸ் சர்விசஸ், அல்டெக் ஸ்டார், சுதெர்லான்ட் கிலொபல் சர்விசஸ், விப்ரோ முதலியவை சென்னையில் உள்ளன.

பொதுத் துறை நிறுவனங்கள்

தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசின் பொது துறை நிறுவனங்கள்.

தமிழ்நாடு மாநில அரசின் பொது துறை நிறுவனங்கள்

  • தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் ஆவணங்கள் நிறுவனம்[டி.யன்.பி.எல்] - 1979
  • தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் [டாண்சாம்] - 1976
  • இந்தியாவின் சிறப்புமிகு சேலம் இரும்பு உருக்கு ஆலை பொதுத்துறை நிறுவனம் உள்ளது.

சுற்றுலா துறை

உள்நாட்டு முனை, விமான நிலையம், சென்னை
திருவள்ளுவர் சிலை
மாமல்லபுரம் கடற்கரை கோயில் (கட்டப்பட்டது 700–728 கிமு) தமிழ்நாடு
நீலகிரி மலை ரயில்

தமிழக சுற்றுலா துறை, 2014 ஆண்டின் படி, தமிழக இந்தியாவின் மிகப்பெரிய சுற்றுலா துறை ஆகும்.

உள்நாட்டு சுற்றுலா துறை

2014 ஆண்டின் உள்நாட்டு சுற்றுலா துறையினர் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்கள் [32] கீழே வரிசை படுத்தபட்டுள்ளன.

வரிசை மாநிலம் எண்ணிக்கை
1 தமிழ்நாடு 327.6 மில்லியன்
2 உத்தர பிரதேசம் 182.8 மில்லியன்
3 கர்நாடகா 118.3 மில்லியன்

2013 ஆண்டின் உள்நாட்டு சுற்றுலா துறையினர் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்கள் [33] கீழே வரிசை படுத்தபட்டுள்ளன.

வரிசை மாநிலம் எண்ணிக்கை விழுக்காடு
1 தமிழ்நாடு 244232487 21.3
2 உத்தர பிரதேசம் 226531091 19.8
3 ஆந்திர பிரதேசம் 152102150 13.3

வெளிநாட்டு சுற்றுலா துறை

2014 ஆண்டின் வெளிநாட்டு சுற்றுலா துறையினர் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்கள் [34] கீழே வரிசை படுத்தபட்டுள்ளன.

வரிசை மாநிலம் எண்ணிக்கை
1 தமிழ்நாடு 4.66 மில்லியன்
2 மஹாராஸ்திரா 4.39 மில்லியன்
3 உத்தர பிரதேசம் 2.91 மில்லியன்

2013 ஆண்டின் வெளிநாட்டு சுற்றுலா துறையினர் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்கள் [35] கீழே வரிசை படுத்தபட்டுள்ளன.

வரிசை மாநிலம் எண்ணிக்கை விழுக்காடு
1 மஹாராஸ்திரா 4156343 20.8
2 தமிழ்நாடு 3990490 20.0
3 தில்லி 2301395 11.5

தமிழ்நாடு மலை வாஸ்தலங்கள்: நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, குற்றாலம், டாப்ஸ்லிப், வால்பாறை.

தமிழ்நாட்டில் 5 தேசிய வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன.

  1. இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா டாப்ஸ்லிப்,பொள்ளாச்சி
  2. முதுமலை தேசியப் பூங்கா ,நீலகிரி
  3. முக்குருத்தி வனவிலங்கு சரணாலயம்,நீலகிரி
  4. மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா,மன்னார் வளைகுடா
  5. கிண்டி தேசிய பூங்கா

தமிழ்நாட்டில் உள்ள உலக பாரம்பரியச் சின்னங்கள்.

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகள்: திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தனி, பழமுதிர்சோலை. வருமானம் அடிப்படையில், பழனி கோவில் இந்தியாவில், மூன்றாவது பெரியதாகும்.

ஆற்றல்

கல்பாக்கம் அணு உலை, எண்ணூர் அனல்மின் நிலையம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகியவையின் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மின் ஆற்றல் திறன் அடிப்படையில், இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய மாநிலம்.

  • ஆற்றல் திறன்(மொத்தம்) - 18,382.13 (மேகாவாட்)
  • அனல் மின் நிலையம் ஆற்றல் திறன் - 18,382.13 (மேகாவாட்)
  • அணு மின் நிலையம் - 524.00
  • நீர் மின் நிலையம் - 2,137.20
  • புதுப்பிக்கத் தக்க ஆற்றல் - 7,503.60

வெளிநாட்டு முதலீடு

தமிழ்நாடு அதிக அளவில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து வருகிறது. கீழே ஆண்டு வாரியாகத் தமிழ்நாட்டில் (புதுச்சேரி உட்பட) வெளிநாட்டு முதலீடு[36].

ஆண்டு முதலீடு $ மில்லியன்
2008-2009 1,724
2009-2010 774
2010-2011 1,352
2011-2012 1,422

தமிழக நிதித் தணிக்கை

பொது கணக்குத் தணிக்கைத் துறையின் அறிவுரைப்படி, 1992ஆம் ஆண்டு தமிழக நிதித் தணிக்கை இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், பல்கலைக்கழகங்கள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் உள்ளிட்டவற்றை தணிக்கை செய்ய உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், பாடநூல் நிறுவனம், சத்துணவுத் திட்டம் உள்ளிட்டவற்றை தணிக்கை செய்ய அரசுத்துறை நிறுவன தணிக்கைத் துறையும் உருவாக்கப்பட்டன.[37]

டாஸ்மாக்

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் எனும் டாஸ்மாக், தமிழக அரசுக்கு 21,680 கோடி ரூபாய் வருமானத்தை 2012-13 ஆண்டில் அளித்தது. [38].டாஸ்மாக் வருவாய் 2013–14 ஆம் ஆண்டு, 23,401 கோடி ரூபாய் ஆகும். தமிழக அரசின் பொருளாதாரம் இத்துறையை அதிகம் சார்ந்துள்ளது. [39]

கடன்

தமிழக அரசின் மொத்த கடன் 2014 - 15 ஆண்டு இறுதியில், 1.81 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இது, மாநிலத்தின் மொத்த உற்பத்தியில், 19.21 சதவீதம். அடுத்த ஆண்டு அதாவது 2016 ஆம் ஆண்டு இறுதியில், திருப்பி செலுத்த வேண்டிய மொத்த கடன் அளவு, 2.11 லட்சம் கோடியாக இருக்கும். இது மாநிலத்தின் மொத்த உற்பத்தியில், 19.24 சதவீதம்.

மற்ற மாநிலங்களில் மொத்த உற்பத்தி-கடன் சதவிதம் பின்வறுமாறு. ஆந்திராவில்-25.05, கர்நாடகாவில்-23.61, கேரளாவில்-26.95, மேற்குவங்கத்தில்-32.61 சதவீதமாக கடன் உள்ளது; ஆனால், தமிழகத்தில் கடன், 19.23 சதவீதமாகவே உள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

தமிழ்நாடு
தமிழ்நாட்டுக் காலநிலை
தமிழ்நாட்டின் பெருநிறுவனங்கள்
தமிழ்நாட்டு ஓவியக் கலை
தமிழ்நாட்டு ஊர்களும் உணவுகளும்
தமிழ்நாட்டு தொழிற்துறைகள்
தமிழ்நாட்டு வேதிப்பொருள் தொழிற்துறை
தமிழ்நாட்டு அறிவொளி இயக்கம்
தமிழ்நாட்டு சீர்திருத்தங்கள்
தமிழக வரலாறு
தமிழக ஏரிகள்
தமிழ்நாடு துடுப்பாட்ட அணி

மேற்கோள்கள்

  1. Hindu Newspaper reference : Economy of Tamil Nadu
  2. http://trak.in/tags/business/2012/03/30/average-per-capita-income-indian-states/ Economy of Indian States]
  3. Tamil Nadu economy soars to $44b by 2005
  4. Statewise gdp
  5. Statewise gdp
  6. [1]
  7. Rajan Panel report: It's a battle of the States
  8. Rajan-panel-reportSection Povetry
  9. http://www.tn.gov.in/dear/archives/year2008_09/2.%20State%20Income.pdf
  10. தமிழ்நாடு அரசு வேளாண்துறை
  11. It is Roses and Dollars at Hosur as Valentine's day approaches
  12. India Production of Tapioca
  13. Top 10 SugarCane producing states of india
  14. SAPOTA
  15. Exhibit 2.3(8) - Fruit Main Production Areas
  16. Exhibit 2.3(8) - Fruit Main Production Areas
  17. Exhibit 2.3(ச்) - Vegetables (Area and Production) (Area and Production)
  18. Exhibit 2.3(8) - Fruit Main Production Areas
  19. Dell India Details
  20. Dell India Details pcworld article
  21. Samsang chennai inaguration details
  22. Government Gives Security Clearance to Huawei to Set up Unit in Tamil Nadu
  23. Hyndai chennai
  24. Ford India
  25. Daimler to set up bus unit near Chennai
  26. BMW starts production of 'MINI Countryman' at Chennai plant
  27. TVS Quality First
  28. Textiles sector
  29. Textile Valley of India
  30. Tamil Nadu most preferred investment destination in India
  31. The Hindu Chennai
  32. Tamil Nadu Records Highest Tourist Footfalls in 2014
  33. Share of Top 10 States/UTs of India in Number of Domestic Tourist Visits in 2013
  34. Tamil Nadu Records Highest Tourist Footfalls in 2014
  35. [http://tourism.gov.in/writereaddata/CMSPagePicture/file/marketresearch/Incredible%20India%20final%2021-7-2014%20english.pdf Share of Top 10 States/UTs of India in Number of Foreign Tourist Visits in 2013]
  36. RBI india
  37. "முதல்வரின் அவசர கவனத்திற்கு". தினமணி. 23 சனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 27 சனவரி 2014.
  38. http://articles.economictimes.indiatimes.com/2013-05-14/news/39256462_1_excise-revenue-nadu-state-marketing-corporation-crore
  39. http://www.thehindubusinessline.com/industry-and-economy/the-alcohol-economy/article5436924.ece

குறிப்பு

  1. ரகுராம் ராஜன் அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு - 2013.
  2. நவம்பர் 1, 2014 முதல் சென்னையில் உள்ள நோக்கியா நிறுவனம் மூடப்பட்டது.