விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 18: வரிசை 18:


மார்ச்சு 1980இல் நியூகிர்க், அலெக்சு பாச்சேகோ ஆகியோரால் நிறுவப்பட்ட இந்த அமைப்பு 1981 கோடைகாலத்தில் பொதுமக்கள் கவனத்தை ஈர்த்தது; மேரிலாந்தின் சில்வர் இசுபிரிங்கில் நடத்தைசார் ஆய்வுக் கழகத்தில் 17 மகாக்கெ குரங்குளை வைத்து நடத்தப்பட்ட சோதனைகளை குறித்த ''சில்வர் இசுபிரிங் குரங்குகள் வழக்கு'' என்ற வழக்கினால் பெரிதும் அறியப்பட்டது. இந்த வழக்கு பத்தாண்டுகள் தொடர்ந்து நடந்தது; ஐக்கிய இராச்சியத்தில் காவல்துறையால் விலங்குகள் ஆய்வகம் ஒன்று சோதனையிடப்பட்ட ஒரே நிகழ்வாகவும் அமைந்தது; 1985இல் விலங்குகள் நல்வாழ்வு சட்டம் இயற்றப்பட்டது. இதன் பின்னர் பீட்டா உலகளவில் அறியப்பட்ட அமைப்பாக மாறியது.<ref name=SilverSpring>Schwartz, Jeffrey M. and Begley, Sharon. ''The Mind and the Brain: Neuroplasticity and the Power of Mental Force'', Regan Books, 2002, p. 161ff.
மார்ச்சு 1980இல் நியூகிர்க், அலெக்சு பாச்சேகோ ஆகியோரால் நிறுவப்பட்ட இந்த அமைப்பு 1981 கோடைகாலத்தில் பொதுமக்கள் கவனத்தை ஈர்த்தது; மேரிலாந்தின் சில்வர் இசுபிரிங்கில் நடத்தைசார் ஆய்வுக் கழகத்தில் 17 மகாக்கெ குரங்குளை வைத்து நடத்தப்பட்ட சோதனைகளை குறித்த ''சில்வர் இசுபிரிங் குரங்குகள் வழக்கு'' என்ற வழக்கினால் பெரிதும் அறியப்பட்டது. இந்த வழக்கு பத்தாண்டுகள் தொடர்ந்து நடந்தது; ஐக்கிய இராச்சியத்தில் காவல்துறையால் விலங்குகள் ஆய்வகம் ஒன்று சோதனையிடப்பட்ட ஒரே நிகழ்வாகவும் அமைந்தது; 1985இல் விலங்குகள் நல்வாழ்வு சட்டம் இயற்றப்பட்டது. இதன் பின்னர் பீட்டா உலகளவில் அறியப்பட்ட அமைப்பாக மாறியது.<ref name=SilverSpring>Schwartz, Jeffrey M. and Begley, Sharon. ''The Mind and the Brain: Neuroplasticity and the Power of Mental Force'', Regan Books, 2002, p. 161ff.
*Pacheco, Alex and Francione, Anna. [http://www.animal-rights-library.com/texts-m/pacheco01.htm The Silver Spring Monkeys], in Peter Singer (ed.) ''In Defense of Animals'', Basil Blackwell 1985, pp. 135–147.</ref> இன்று இது நான்கு முதன்மையான பிரச்சினைகளை முன்னெடுத்துப் போராடுகின்றது—தொழிற்சாலைப் பண்ணையம், விலங்கின மென்மயிர் பண்ணையம், விலங்குகள் சோதனை, மற்றும் மனமகிழ்ச்சிக்காக விலங்குகள் பயன்பாடு. தவிரவும் இந்த அமைப்பு மாமிசம், மீன் உண்ணுதல், நோய்ப்பூச்சிகளைக் கொல்லுதல், நாய்களை சங்கிலியிட்டு பின்புறம் வைத்தல், [[சேவல் சண்டை]], நாய்ச் சண்டை, காளைச் சண்டை போன்றவற்றை எதிர்த்தும் போராடுகின்றது.<ref name=about>[http://www.peta.org/about/index.asp "PETA's mission statement"], PETA, accessed July 3, 2010.</ref>
*Pacheco, Alex and Francione, Anna. [http://www.animal-rights-library.com/texts-m/pacheco01.htm The Silver Spring Monkeys], in Peter Singer (ed.) ''In Defense of Animals'', Basil Blackwell 1985, pp. 135–147.</ref> இன்று இது நான்கு முதன்மையான பிரச்சினைகளை முன்னெடுத்துப் போராடுகின்றது—தொழிற்சாலைப் பண்ணையம், விலங்கின மென்மயிர் பண்ணையம், விலங்குகள் சோதனை, மற்றும் மனமகிழ்ச்சிக்காக விலங்குகள் பயன்பாடு. தவிரவும் இந்த அமைப்பு மாமிசம், மீன் உண்ணுதல், நோய்ப்பூச்சிகளைக் கொல்லுதல், நாய்களை சங்கிலியிட்டு பின்புறம் வைத்தல், [[சேவல் சண்டை]], நாய்ச் சண்டை, [[ஆட்டுச் சண்டை]], காளைச் சண்டை போன்றவற்றை எதிர்த்தும் போராடுகின்றது.<ref name=about>[http://www.peta.org/about/index.asp "PETA's mission statement"], PETA, accessed July 3, 2010.</ref>


விலங்குகள் உரிமை இயக்கத்தின் உள்ளேயும் வெளியேயும் இந்த அமைப்பிற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. நியூகிர்க்கும் பாச்சேகோவும் ஐக்கிய அமெரிக்காவில் விலங்கு உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியபோதிலும் தீவிரமாக முன்னெடுக்கவில்லை எனச் சிலர் கருதுகின்றனர். இவர்கள், இது விலங்குகள் நல்வாழ்வு குழுவாக செயல்படுகின்றதே தவிர விலங்குகள் உரிமைகள் குழுவாக செயல்படவில்லை எனக் குறை கூறுகின்றனர்.<ref>For Newkirk and Pacheco being the leading exporters of AR, see Garner, Robert. ''Animals, politics, and morality''. Manchester University Press, 1993; this edition 2004, p. 70.
விலங்குகள் உரிமை இயக்கத்தின் உள்ளேயும் வெளியேயும் இந்த அமைப்பிற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. நியூகிர்க்கும் பாச்சேகோவும் ஐக்கிய அமெரிக்காவில் விலங்கு உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியபோதிலும் தீவிரமாக முன்னெடுக்கவில்லை எனச் சிலர் கருதுகின்றனர். இவர்கள், இது விலங்குகள் நல்வாழ்வு குழுவாக செயல்படுகின்றதே தவிர விலங்குகள் உரிமைகள் குழுவாக செயல்படவில்லை எனக் குறை கூறுகின்றனர்.<ref>For Newkirk and Pacheco being the leading exporters of AR, see Garner, Robert. ''Animals, politics, and morality''. Manchester University Press, 1993; this edition 2004, p. 70.

09:15, 13 சனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள்
பீட்டா
உருவாக்கம்மார்ச்சு 1980; 44 ஆண்டுகளுக்கு முன்னர் (1980-03)
நிறுவனர்இங்கிரிடு நியூகிர்க், அலெக்சு பாச்சேகோ
வகைஐ.அ நாட்டின் 501(c)(3) பிரிவின்படியான தன்னார்வல அமைப்பு
நோக்கம்விலங்குகள் உரிமை
தலைமையகம்
உறுப்பினர்
3,000,000 (including supporters)[1]
வருவாய்
2014ஆம் ஆண்டில் $43 மில்லியன்[2]
ஊழியர்கள்
300
முழக்கம்"விலங்குகள் நாம் உண்பதற்கும் உடுத்துவதற்கும் சோதனைகள் நடத்தவும் மகிழ்ச்சி தரவும் எவ்விதத்திலும் துன்புறத்தப்படவும் உண்டானவை இல்லை."
வலைத்தளம்peta.org

விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள் (People for the Ethical Treatment of Animals) அல்லது பீட்டா (PETA, /ˈptɑː/); அல்லது PeTA) ஐக்கிய அமெரிக்க நாட்டில் வர்ஜீனியா மாநிலத்து நோர்போக் நகரில் விலங்கு வதைகளைத் தடுக்குமாறு உருவான தன்னார்வல அமைப்பாகும்; இதன் பன்னாட்டுத் தலைவராக இங்கிரிடு நியூகிர்க் உள்ளார். இலாபநோக்கற்ற இவ்வமைப்பில் 300 ஊழியர்களும், 3 மில்லியன் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் உள்ளனர்; உலகளவில் இத்துணை அளவிலான உரிமைக் குழு இதுவே ஆகும். இதன் முழக்கம் "விலங்குகள் நாம் உண்பதற்கும் உடுத்துவதற்கும் சோதனைகள் நடத்தவும் மகிழ்ச்சி தரவும் எவ்விதத்திலும் துன்புறத்தப்படவும் உண்டானவை இல்லை" ஆகும்.[3]

மார்ச்சு 1980இல் நியூகிர்க், அலெக்சு பாச்சேகோ ஆகியோரால் நிறுவப்பட்ட இந்த அமைப்பு 1981 கோடைகாலத்தில் பொதுமக்கள் கவனத்தை ஈர்த்தது; மேரிலாந்தின் சில்வர் இசுபிரிங்கில் நடத்தைசார் ஆய்வுக் கழகத்தில் 17 மகாக்கெ குரங்குளை வைத்து நடத்தப்பட்ட சோதனைகளை குறித்த சில்வர் இசுபிரிங் குரங்குகள் வழக்கு என்ற வழக்கினால் பெரிதும் அறியப்பட்டது. இந்த வழக்கு பத்தாண்டுகள் தொடர்ந்து நடந்தது; ஐக்கிய இராச்சியத்தில் காவல்துறையால் விலங்குகள் ஆய்வகம் ஒன்று சோதனையிடப்பட்ட ஒரே நிகழ்வாகவும் அமைந்தது; 1985இல் விலங்குகள் நல்வாழ்வு சட்டம் இயற்றப்பட்டது. இதன் பின்னர் பீட்டா உலகளவில் அறியப்பட்ட அமைப்பாக மாறியது.[4] இன்று இது நான்கு முதன்மையான பிரச்சினைகளை முன்னெடுத்துப் போராடுகின்றது—தொழிற்சாலைப் பண்ணையம், விலங்கின மென்மயிர் பண்ணையம், விலங்குகள் சோதனை, மற்றும் மனமகிழ்ச்சிக்காக விலங்குகள் பயன்பாடு. தவிரவும் இந்த அமைப்பு மாமிசம், மீன் உண்ணுதல், நோய்ப்பூச்சிகளைக் கொல்லுதல், நாய்களை சங்கிலியிட்டு பின்புறம் வைத்தல், சேவல் சண்டை, நாய்ச் சண்டை, ஆட்டுச் சண்டை, காளைச் சண்டை போன்றவற்றை எதிர்த்தும் போராடுகின்றது.[5]

விலங்குகள் உரிமை இயக்கத்தின் உள்ளேயும் வெளியேயும் இந்த அமைப்பிற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. நியூகிர்க்கும் பாச்சேகோவும் ஐக்கிய அமெரிக்காவில் விலங்கு உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியபோதிலும் தீவிரமாக முன்னெடுக்கவில்லை எனச் சிலர் கருதுகின்றனர். இவர்கள், இது விலங்குகள் நல்வாழ்வு குழுவாக செயல்படுகின்றதே தவிர விலங்குகள் உரிமைகள் குழுவாக செயல்படவில்லை எனக் குறை கூறுகின்றனர்.[6] இதற்கு 2001இல் பதிலிறுத்த நியூகிர்க் பீட்டா விலங்குகள் உரிமை என்ற இலக்கை முன்வைத்து பரிசு-தண்டனை என்ற விதத்திலே இடைக்காலத்தில் நகர்வதாகக் குறிப்பிட்டார்.[7] பீட்டாவின் விலங்கு மென்மயிர் ஆடை எதிர்ப்பு போராட்டங்களில் மிகக் குறைந்த ஆடைகளில் பெண் போராளிகள் பங்கேற்பதற்கு பெண்ணியவாதிகள் எதர்ப்பு தெரிவித்துள்ளனர். தவிரவும் ஊடகப் பார்வைக்காக நடத்தப்படும் பரப்பரப்பு நிகழ்வுகளால் உண்மையான விலங்குரிமைகள் முக்கியமற்றதாக்கப்படுவதாவும் குற்றம் சாட்டப்படுகின்றது. நியூகிர்க் மறுமொழிகையில்,பீட்டா வெற்றிபெற "ஊடக நெறிபிறழ்ந்தவர்களாக" இருப்பது அவசியம் என்றார். "இது எங்கள் கடமை. நாங்கள் அமைதியாக இருந்து அலைகளை உருவாக்காவிட்டால் பயனில்லை" என்றார்.[8]

பீட்டாவின் முதன்மை வலைத்தளம் முதிர் அகவையர்களுக்காகவும் காய்கனி மட்டுமே உண்போருக்குமானது. தாவர உணவு முறை, கண்டிப்பான தாவர உணவுமுறை அல்லது அவற்றிற்கு முயலும் விடலைப் பருவத்தினருக்கு PETA2 என்ற தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

பீட்டா இந்தியா

சனவரி 2000இல் பீட்டா இந்தியா மும்பையில் நிறுவப்பட்டது. இக்குழுவின் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, இது முதன்மையாக "புலனாய்வு, பொதுமக்கள் விழிப்புணர்ச்சி, ஆராய்ச்சி, விங்குகளைக் காப்பாறுதல், சட்டவாக்கம், சிறப்பு நிகழ்வுகள், புகழாளர் ஈடுபாடு மற்றும் தேசியளவிலான ஊடக ஈர்ப்பு" ஆகியற்றில் குவியம் கொண்டுள்ளது.[9]

இந்தக் குழு ஏறுதழுவல் நிகழ்வுகள்,[10] வேடிக்கை வட்டரங்குகளில் விலங்குப் பயன்பாடு,[11] மும்பையின் சுகாதாரமற்ற குதிரை இலாயங்கள்[12] ஆகியவற்றை புலனாயந்துள்ளது.

2015இல் மகாராட்டிரத்தின் கோலாப்பூரில் கோவிலொன்றில் ஏழாண்டுக் காலமாக சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த 14 வயது சுந்தர் என்ற யானையைக் காப்பாற்றினர். சுந்தர் பெங்களூருவில் உள்ள பன்னர்கெட்டா உயிரியப் பூங்காவில் மற்ற யானைகளுடன் சுதந்தரமாக உலவுமாறு விடப்பட்டது.[13]

பீட்டா இந்தியாவுடன் இணைந்து செயலாற்றும் இந்தியப் புகழாளர்களாக ஷாஹித் கபூர், ஹேம மாலினி, ரவீணா டாண்டன் போன்றோர் உள்ளனர்.[14]

மேற்சான்றுகள்

  1. "About PETA". PETA.
  2. Charity Navigator|accessed November 4, 2015.
  3. உலகின் மிகப் பெரும் விலங்குரிமை குழு என்ற இதன் கோரலுக்கும் குவியத்திற்கும், காண்க "PETA's mission statement", PETA, accessed May 1, 2013
    • ஊழியர்களின் எண்ணிக்கைக்கு, காண்க கால்கின், மாத்யூ. ஐ யாம் அன் அனிமல்: இங்கிரிடு நியூகிர்க் மற்றும் பீட்டாவின் கதை"]], எச்பிஓ, 2007.
  4. Schwartz, Jeffrey M. and Begley, Sharon. The Mind and the Brain: Neuroplasticity and the Power of Mental Force, Regan Books, 2002, p. 161ff.
    • Pacheco, Alex and Francione, Anna. The Silver Spring Monkeys, in Peter Singer (ed.) In Defense of Animals, Basil Blackwell 1985, pp. 135–147.
  5. "PETA's mission statement", PETA, accessed July 3, 2010.
  6. For Newkirk and Pacheco being the leading exporters of AR, see Garner, Robert. Animals, politics, and morality. Manchester University Press, 1993; this edition 2004, p. 70.
    • For Francione's criticism, see Francione, Gary. Rain without Thunder: The Ideology of the Animal Rights Movement. Temple University Press, 1996, pp. 67–77.
  7. Brandt, Peter. "PETA's Ingrid Newkirk", Salon, April 30, 2001. The full quote:

    "What I say to myself all the time is that we have our heads in the clouds looking for Utopia, but we have our feet firmly planted on the ground dealing with reality. We make no bones about the fact that we want an end to all cruelty to animals. But I think the meat industry and the leather industry and the experimenters understand, especially if we're fighting them, that we will back off if they move society and their industry a step forward. We're not going to stop everything overnight, so while we work for the ideal we certainly wish to provide the carrot-and-stick incentives to move along toward that goal.

    "Animals are going to die by the millions today in all sorts of ugly ways for all sorts of ridiculous, insupportable reasons. If one animal who is lying in a battery egg farm cage could have the extra room to stretch her wing today because of something you've done, I think she would choose to have that happen."
  8. For the feminist criticism, see Adams, Carole J. Neither Man nor Beast: Feminism and the Defense of Animals. Continuum International Publishing Group, 1995, pp. 135, 228. Also see Garner, Robert. The political theory of animal rights. Manchester University Press, 2005, p. 144.
  9. "About PETA". பார்க்கப்பட்ட நாள் 16 November 2015.
  10. "New Investigation Exposes Jallikattu Cruelty". பார்க்கப்பட்ட நாள் 16 November 2015.
  11. "Victory: Following PETA Investigation, Animal Welfare Board To Stop Use Of Elephants By Circuses". பார்க்கப்பட்ட நாள் 16 November 2015.
  12. "Investigation Exposes Filthy Horse Stables in Mumbai". பார்க்கப்பட்ட நாள் 16 November 2015.
  13. "Elephant Sunder: Amitabh Bachchan credits PETA for giant baby's free home". பார்க்கப்பட்ட நாள் 16 November 2015.
  14. "PETA India's History: Compassion in Action". பார்க்கப்பட்ட நாள் 16 November 2015.

மேலும் அறிய

வெளி இணைப்புகள்