சமுத்திரகுப்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 46: வரிசை 46:


==அலகாபாத் தூண்கள் - நாணயங்கள்==
==அலகாபாத் தூண்கள் - நாணயங்கள்==
[[Image:SamudraguptaCoin.jpg|thumb|right|[[கருடன், புராணம்|கருடத்]] தூணுடன், சமுத்திரகுப்தரின் நாணயம், [[பிரித்தானிய அருங்காட்சியகம்]]]]
[[Image:SamudraguptaCoin.jpg|thumb|right|[[கருடன், புராணம்|கருடத்]] தூணுடன், சமுத்திரகுப்தரின் உருவம் பொறித்த நாணயம், [[பிரித்தானிய அருங்காட்சியகம்]]]]
சமுத்திர குப்தரின் போர் வெற்றிகள் குறித்த வரலாற்றை [[அசோகரின் தூண்கள்]]களில் செதுக்கப்பட்டுள்ளது.<ref name="civilserviceindia">{{cite web|url=http://www.civilserviceindia.com/subject/History/prelims/gupta-age2.html|title= Samudragupta|publisher=Civil Service India|accessdate=2012-09-22}}</ref>
சமுத்திர குப்தரின் போர் வெற்றிகள் குறித்த வரலாற்றை [[அசோகரின் தூண்கள்]]களில் செதுக்கப்பட்டுள்ளது.<ref name="civilserviceindia">{{cite web|url=http://www.civilserviceindia.com/subject/History/prelims/gupta-age2.html|title= Samudragupta|publisher=Civil Service India|accessdate=2012-09-22}}</ref>
கி பி நான்காம் நூற்றாண்டின் முதல் பாதியின், இந்திய அரசியல், நிலவியல், மன்னர்கள், மக்கள் குறித்த, சமுத்திர குப்தரின் அரசவைக் கவிஞர் ஹரிசேனரின் செய்திகள் இத்தூண்களில் செதுக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web |url=http://www.indhistory.com/samudragupta.html |title= India History - Reign of Samudragupta}}</ref>சமுத்திரகுப்தர் வெளியிட்ட தங்கம், வெள்ளி, செப்பு நாணயங்கள் மூலம், அவர் காலத்திய வரலாற்று குறிப்புகள் அறிய முடிகிறது.
கி பி நான்காம் நூற்றாண்டின் முதல் பாதியின், இந்திய அரசியல், நிலவியல், மன்னர்கள், மக்கள் குறித்த, சமுத்திர குப்தரின் அரசவைக் கவிஞர் ஹரிசேனரின் செய்திகள் இத்தூண்களில் செதுக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web |url=http://www.indhistory.com/samudragupta.html |title= India History - Reign of Samudragupta}}</ref>சமுத்திரகுப்தர் வெளியிட்ட தங்கம், வெள்ளி, செப்பு நாணயங்கள் மூலம், அவர் காலத்திய வரலாற்று குறிப்புகள் அறிய முடிகிறது.

15:50, 4 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

சமுத்திரகுப்தர்
பேரரசர்
குப்த பேரரசர்
ஆட்சிக்காலம்கி பி 335– 375
முன்னையவர்முதலாம் சந்திரகுப்தர்
பின்னையவர்இரண்டாம் சந்திரகுப்தர் அல்லது இராமகுப்தர்
துணைவர்தத்த தேவி
குழந்தைகளின்
பெயர்கள்
இரண்டாம் சந்திரகுப்தர் என்ற இராமகுப்தர்
மரபுகுப்த வம்சம்
தந்தைமுதலாம் சந்திரகுப்தர்
தாய்குமாரதேவி
மதம்இந்து சமயம்
உச்சகட்டத்தில் குப்தப் பேரரசு

சமுத்திரகுப்தர் , குப்தப் பேரரசை கி பி 335 முதல் 375 முடிய ஆட்சி செய்த பேரரசர். முதலாம் சந்திரகுப்தருக்குப் பின் வட இந்தியாவை ஆட்சி செய்த சமுத்திர குப்தரை, இந்திய வரலாற்றில் மிகச்சிறந்த போர்த்திறன் படைத்தவர் எனப் போற்றப்படுகிறார். திறமையான ஆட்சியாளர், போர் நுணுக்கங்கள் அறிந்தவர் மற்றும் கலை, இலக்கியங்களை பேணியவர் என்பதால் குப்த பேரரசின் மூன்றாம் ஆட்சியாளரான சமுத்திரகுப்தரின் ஆட்சிக் காலத்தை இந்தியாவின் பொற்காலம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஜாவா தீவுவின் நூல்களில் இவரது பெயரை தாந்திரிகமந்தகர் எனக் குறித்துள்ளது.[1] சமுத்திரம் என்ற சமஸ்கிருத மொழிச் சொல்லிற்கு கடல் என்று பொருள். சமுத்திரகுப்தரை அசோகருக்கு நிகராக ஒப்பீடு செய்கின்றனர். அசோகர் அமைதி மற்றும் அகிம்சையை போற்றியவர்; ஆனால் சமுத்திரகுப்தர் போர் மற்றும் ஆக்கிரமிப்பு செய்வதில் ஆர்வம் கொண்டவர்.[2]

முதலாம் சந்திர குப்தருக்கும் - மகாஜனபாதங்களில் ஒன்றான லிச்சாவி இளரசி குமாரதேவிக்கும் பிறந்தவர் சமுத்திரகுப்தர். பாடலி புத்திரத்தை தலைநகராகக் கொண்ட குப்தப் பேரரசை நாற்பது ஆண்டு காலம் வரை ஆட்சி செய்தவர்.

வெற்றிகள்

ரோகில்கண்ட் மற்றும் மத்திய இந்தியாவின் பத்மாவதி ஆகிய பகுதிகளை, சமுத்திரகுப்தர் வென்ற பின்னர், வங்காளம், மால்வா, குஜராத், நேபாளம், வங்காளம், ஒரிசா, அசாம், மதுரா, மத்தியப் பிரதேசம், காஷ்மீர், ஆப்கானித்தான் நாடுகளை வென்று, பின் தென்னிந்தியாவின் ஆந்திரம் முதல் காஞ்சிபுரம் வரை வெற்றி கொண்டார். முழு வட இந்தியாவை குப்தப் பேரரசில் கொண்டுவந்தவர்.[3]

அலகாபாத் தூண்கள் - நாணயங்கள்

கருடத் தூணுடன், சமுத்திரகுப்தரின் உருவம் பொறித்த நாணயம், பிரித்தானிய அருங்காட்சியகம்

சமுத்திர குப்தரின் போர் வெற்றிகள் குறித்த வரலாற்றை அசோகரின் தூண்கள்களில் செதுக்கப்பட்டுள்ளது.[4] கி பி நான்காம் நூற்றாண்டின் முதல் பாதியின், இந்திய அரசியல், நிலவியல், மன்னர்கள், மக்கள் குறித்த, சமுத்திர குப்தரின் அரசவைக் கவிஞர் ஹரிசேனரின் செய்திகள் இத்தூண்களில் செதுக்கப்பட்டுள்ளது.[5]சமுத்திரகுப்தர் வெளியிட்ட தங்கம், வெள்ளி, செப்பு நாணயங்கள் மூலம், அவர் காலத்திய வரலாற்று குறிப்புகள் அறிய முடிகிறது.

பின் வந்த ஆட்சியாளர்

சமுத்திரகுப்தர் நாற்பது ஆண்டுகள் குப்தப் பேரரசை ஆட்சி செய்த பின்னர், அவரது மகன் இரண்டாம் சந்திரகுப்தர் பட்டத்திற்கு வந்தார்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Samudragupta". பார்க்கப்பட்ட நாள் 2012-09-19.
  2. "Complete biography of Samudragupta – the greatest ruler of India". பார்க்கப்பட்ட நாள் 2012-09-22.
  3. The Gupta Polity, pp.199
  4. "Samudragupta". Civil Service India. பார்க்கப்பட்ட நாள் 2012-09-22.
  5. "India History - Reign of Samudragupta".

வெளி இணைப்புகள்

அரச பட்டங்கள்
முன்னர்
முதலாம் சந்திரகுப்தர்
குப்தப் பேரரசு
335–375
பின்னர்
இரண்டாம் சந்திரகுப்தர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமுத்திரகுப்தர்&oldid=1977758" இலிருந்து மீள்விக்கப்பட்டது