மார்செல்லோ மால்பிகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி + விக்கியாக்கம் செய்யப்பட வேண்டும் தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1: வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
{{unreferenced}}
{{unreferenced}}
[[File:Marcello Malpighi by Carlo Cignani.jpg|240px|{{PAGENAME}}|thumb|right]]
[[File:Marcello Malpighi by Carlo Cignani.jpg|240px|{{PAGENAME}}|thumb|right]]

15:54, 29 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

மார்செல்லோ மால்பிகி

மார்செல்லோ மால்பிஜி(Marcello Malpighi 10 மார்ச் 1628--29 நவம்பர் 1694) 1628 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இத்தாலி நாட்டில் பிறந்தார்.அரிஸ்டாடிலின் தத்துவம் பயின்ற அவர் பின் மருத்துவரானார்.அறிவியல் ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர் கற்பித்தலில் அதிக நாட்டம் உடையவராக காணப்பட்டார்.ஒப்பீட்டு உளவியலுக்கு அடித்தளமிட்டவராக கருதப்படுகிறார். பட்டுப்பூச்சியில் தான் செய்த ஆய்வுகளை 1669ஆம் ஆண்டு வெளியிட்டார்.இவ்வகை பூச்சிகளுக்கு சுவாசிப்பதற்கு நுரையீரல் கிடையாது என்றும், இவைகள் உடலின் பக்கவாட்டுத்துளைகள் மூலமாக வாயுமண்டல காற்றை உள்ளிழுத்து, நுண்குழல்கள் வழியாக சுவாசிக்கின்றன என்று விளக்கினார்.இந்த நுண்குழலுக்கு மூச்சுக்குழல் எனவும் பெயரிட்டார். நுரையீரல் செல்களை அறுவை செய்து பார்த்து, அதன் சிறிய, மெல்லிய சுவர் கொண்ட தந்துகிகள் இருப்பதை கண்டறிந்தார்.தந்துகிகள்தான் தமனிகளையும், சிரைகளையும் இணைக்கின்றன என்றும், அவை இரத்தத்தை இதயத்தை நோக்கி செலுத்துகிறது என்றும் , சுற்றோட்டத்தொகுப்பு நிகழ்த்தக்கூடிய அனைத்து வேலைகளையும் தந்துகிகளே நிகழ்த்துகின்றன என்பதை வெளி உலகிற்குத் தெரியப்படுத்தினார். ஏராளமான உடல் உள்ளுறுப்புகள் அவருடைய பெயரைத்தாங்கி நிற்கின்றன. சுற்றோட்ட, நிணநீர் ஓட்டத்தோடு தொடர்புடைய மால்பிஜியன் துகள்கள், புறத்தோல் திசுவில் காணப்படும் மால்பிஜியன் அடுக்கு, பூச்சிகளில் காணப்படும் மால்பிஜியன் குழல்கள் இதற்கு உதாரணங்களாகும்.பூச்சிகளில் மால்பிஜியன் குழல்கள் நைட்ரஜன் அடங்கிய கழிவுப் பொருள்களான யூரிக் அமிலம் மற்றும் நீரை மலத்திலிருந்து வெளியேற்றுகின்றன என்பதை மால்பிஜி கண்டறிந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்செல்லோ_மால்பிகி&oldid=1974997" இலிருந்து மீள்விக்கப்பட்டது