சியா இசுலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3: வரிசை 3:
'''ஷியா இஸ்லாம்''' ([[அரபு மொழி]]: شيعة, [[ஆங்கிலம்]]: Shi'a) [[இசுலாம்]] மதத்தின் முக்கியமான உட்பிரிவுகளுள் ஒன்று. இது இசுலாமிய மதப்பிரிவுகளுள் [[சன்னி இஸ்லாம்|சன்னி இஸ்லாமிற்கு]] அடுத்தபடியாக அதிகமானோர் பின்பற்றும் பிரிவாகும். ஷியா என்ற சொல் “அலியை பின்பற்றுவோர்” என்று பொருள்படும் [[அரபு மொழி]]ச் சொல்லில் இருந்து தோன்றியது. ஷியாக்கள் [[முகமது நபி]]யின் மருமகன்களில் ஒருவரான [[அலீ|அலியே]] அவரின் உண்மையான வாரிசு என்று நம்புகிறார்கள்.<ref>[http://www.bbc.co.uk/religion/religions/islam/subdivisions/sunnishia_1.shtml Sunni and Shi'a]</ref>
'''ஷியா இஸ்லாம்''' ([[அரபு மொழி]]: شيعة, [[ஆங்கிலம்]]: Shi'a) [[இசுலாம்]] மதத்தின் முக்கியமான உட்பிரிவுகளுள் ஒன்று. இது இசுலாமிய மதப்பிரிவுகளுள் [[சன்னி இஸ்லாம்|சன்னி இஸ்லாமிற்கு]] அடுத்தபடியாக அதிகமானோர் பின்பற்றும் பிரிவாகும். ஷியா என்ற சொல் “அலியை பின்பற்றுவோர்” என்று பொருள்படும் [[அரபு மொழி]]ச் சொல்லில் இருந்து தோன்றியது. ஷியாக்கள் [[முகமது நபி]]யின் மருமகன்களில் ஒருவரான [[அலீ|அலியே]] அவரின் உண்மையான வாரிசு என்று நம்புகிறார்கள்.<ref>[http://www.bbc.co.uk/religion/religions/islam/subdivisions/sunnishia_1.shtml Sunni and Shi'a]</ref>


இந்திய முஸ்லிம்களில் 35 சதவீதம் பேர் சன்னி முஸ்லிம்கள்.{{citation needed}} பத்து சதவீதத்தினர் ஷியா முஸ்லிம்கள் ஆவர்.{{citation needed}} சியா முசுலிம்கள் உலக முசுலிம் மக்கள்தொகையில் 10-20% உள்ளனர். [[மத்திய கிழக்கு நாடுகள்|மத்திய கிழக்கு நாடுகளின்]] மக்கள்தொகையில் இவர்கள் 38% ஆகும்.<ref name="sha">{{Cite book | publication-date = 15 ஏப்ரல் | year =2008 | title = Atlas of the Middle East | edition = Second | publication-place =[[வாசிங்டன், டி. சி.]] | place =U.S.A | publisher =[[தேசிய புவியியல் கழகம்]] | pages =80–81 | isbn =978-1-4262-0221-6}}</ref> ஷியா பிரிவினர் அதிகம் வாழும் முஸ்லிம் நாடு ஈரான் ஆகும். சன்னி, ஷியாக்களுக்கு இடையே பல நூறாண்டுகள் சண்டையும் சச்சரவும் இருந்து வருகிறது. ஷியாக்களின் ஆட்சி நடைபெறும் நாடுகள் ஈராக் மற்றும் ஈரான். ஈரானுக்கு அடுத்தபடியாக, இராக், [[லெபனான்]], [[பாகிஸ்தான்]] என பல நாடுகளில் ஷியாக்கள் உள்ளனர்.
இந்திய முஸ்லிம்களில் 35 சதவீதம் பேர் சன்னி முஸ்லிம்கள்.{{citation needed}} பத்து சதவீதத்தினர் ஷியா முஸ்லிம்கள் ஆவர்.{{citation needed}} சியா முசுலிம்கள் உலக முசுலிம் மக்கள்தொகையில் 10-20% உள்ளனர். [[மத்திய கிழக்கு நாடுகள்|மத்திய கிழக்கு நாடுகளின்]] மக்கள்தொகையில் இவர்கள் 38% ஆகும்.<ref name="sha">{{Cite book | publication-date = 15 ஏப்ரல் | year =2008 | title = Atlas of the Middle East | edition = Second | publication-place =[[வாசிங்டன், டி. சி.]] | place =U.S.A | publisher =[[தேசிய புவியியல் கழகம்]] | pages =80–81 | isbn =978-1-4262-0221-6}}</ref> ஷியா பிரிவினர் அதிகம் வாழும் முஸ்லிம் நாடு ஈரான் ஆகும். சன்னி, ஷியாக்களுக்கு இடையே பல நூறாண்டுகள் சண்டையும் சச்சரவும் இருந்து வருகிறது. ஷியாக்களின் ஆட்சி நடைபெறும் நாடுகள் ஈராக் மற்றும் [[இரான்]]. இரானுக்கு அடுத்தபடியாக, [[இராக்]], [[லெபனான்]], [[பாகிஸ்தான்]], [[சிரியா]], [[ஏமன்]], [[இந்தியா]], [[வங்காள தேசம்]] என பல நாடுகளில் ஷியாக்கள் உள்ளனர்.


== சுன்னி-சியா வேறுபாடுகள் ==
== சுன்னி-சியா வேறுபாடுகள் ==

12:51, 24 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

ஷியா இஸ்லாம் (அரபு மொழி: شيعة, ஆங்கிலம்: Shi'a) இசுலாம் மதத்தின் முக்கியமான உட்பிரிவுகளுள் ஒன்று. இது இசுலாமிய மதப்பிரிவுகளுள் சன்னி இஸ்லாமிற்கு அடுத்தபடியாக அதிகமானோர் பின்பற்றும் பிரிவாகும். ஷியா என்ற சொல் “அலியை பின்பற்றுவோர்” என்று பொருள்படும் அரபு மொழிச் சொல்லில் இருந்து தோன்றியது. ஷியாக்கள் முகமது நபியின் மருமகன்களில் ஒருவரான அலியே அவரின் உண்மையான வாரிசு என்று நம்புகிறார்கள்.[1]

இந்திய முஸ்லிம்களில் 35 சதவீதம் பேர் சன்னி முஸ்லிம்கள்.[சான்று தேவை] பத்து சதவீதத்தினர் ஷியா முஸ்லிம்கள் ஆவர்.[சான்று தேவை] சியா முசுலிம்கள் உலக முசுலிம் மக்கள்தொகையில் 10-20% உள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளின் மக்கள்தொகையில் இவர்கள் 38% ஆகும்.[2] ஷியா பிரிவினர் அதிகம் வாழும் முஸ்லிம் நாடு ஈரான் ஆகும். சன்னி, ஷியாக்களுக்கு இடையே பல நூறாண்டுகள் சண்டையும் சச்சரவும் இருந்து வருகிறது. ஷியாக்களின் ஆட்சி நடைபெறும் நாடுகள் ஈராக் மற்றும் இரான். இரானுக்கு அடுத்தபடியாக, இராக், லெபனான், பாகிஸ்தான், சிரியா, ஏமன், இந்தியா, வங்காள தேசம் என பல நாடுகளில் ஷியாக்கள் உள்ளனர்.

சுன்னி-சியா வேறுபாடுகள்

அல்லாஹ் ஒருவனே ஏக இறைவன், அவனால் அருளப்பட்டது குர்ஆன், அவனது இறுதித் தூதர் முஹம்மது நபி என்ற இஸ்லாத்தின் அடிப்படையை எல்லா பிரிவுகளும் ஏற்றுக் கொள்கின்றன. சன்னிகளும் ஷியாக்களும் அல்லாஹ் ஒருவனே; குர்ஆனும் ஒன்றே; இறுதித் தூதரும் ஒருவரே; மக்கா இறையில்லமும் (கஅபா) ஒன்றே.

முஹம்மது நபிக்குப் பிறகு, இஸ்லாமிய ஆட்சியாளராக (கலீபா) யாரை ஏற்பது என்பதில் வேறுபாடு ஏற்பட்டது. முஹம்மது நபியின் நெருங்கிய தோழரும் மாமனாருமான அபுபக்கரை, முதல் கலீபாவாக சன்னிகள் ஏற்கின்றனர். ஷியா பிரிவினரோ, முஹம்மது நபியின் மற்றொரு தோழரும் மருமகன்களில் ஒருவரான அலியே நபியின் வாரிசு என்கின்றனர். இதில் தொடங்கிய சர்ச்சை பல நூற்றாண்டுகளுக்கு நீடித்து வருகிறதுது.

சுன்னி இஸ்லாத்தின் தொழுகைக்கான அழைப்பி (பாங்கு): "அல்லாஹு அக்பர்' என்று தொடங்கும் பாங்கின் பொருள், "இறைவன் மிகப் பெரியவன்! வணக்கத்துக்குரியவன் இறைவனைத் தவிர வேறெவரும் இல்லை. முஹம்மது இறைவனின் தூதர். தொழ வாருங்கள். வெற்றி பெற வாருங்கள்' என்பது. இதில், ஷியாக்கள் மேலும் ஒரு வரியைச் சேர்த்துக் கொள்கிறார்கள். "முஹம்மது நபி அல்லாஹ்வின் இறுதித் தூதர்; அவரது வாரிசு அலி' என்பதே அவ்வாசகம். ஐந்து வேளைத் தொழுகையை, மூன்று வேளைகளில் (இரண்டை ஒரே வேளையில்) தொழுது விடுகின்றனர் ஷியாக்கள். தொழுகையில், ஸஜ்தா எனும் சிரம் பணியும் நிலையில், "காகே ஷிபா' எனப்படும் புனித கர்பலாவின் மண்ணால் செய்யப்பட்ட "சில்' (ஓடு) ஒன்றை வைக்கிறார்கள். சன்னிகள் இவ்வாறு செய்வதில்லை.

ஜகாத்

தமது வருவாயில் இரண்டரை சதவீதத்தை ஜகாத் (ஏழை வரி அல்லது கொடை) தர வேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் விதிக்கப்பட்ட கடமை. பணக்காரர்களின் செல்வத்தில் ஏழைகளுக்கு உரிய பங்கு இது. ஷியா முஸ்லிம்கள், இந்த இரண்டரை சதவீத ஜக்காத்துடன், மொத்த ஆண்டு சேமிப்பில் 20 சதவீதத்தை கும்ஸ் ஆகத் தர வேண்டும்.

மொகரம்

சன்னி, ஷியா முஸ்லிம்களை வேறுபடுத்திக் காட்டும் நிகழ்வு மொகரம் ஆகும். ஷியாக்கள், மொஹரத்தைத் துக்க அனுஷ்டிப்பாக முக்கியத்துவம் தந்து கடைபிடிக்கிறார்கள். சென்னையில் மொஹரம் நாளில் மார்பில் கைகளால் ஓங்கி அடித்தபடி, தங்களை வருத்திக் கொண்டு ஊர்வலம் செல்வதைப் பலரும் பார்க்கலாம்.

இந்தியாவில்

இந்தியாவில் ஷியாக்கள் எண்ணிக்கை குறைவு. உத்தரப் பிரதேசம், காஷ்மீரில், ஆந்திரம், தமிழகத்தில் எனப் பிரிந்துள்ளனர்..

தமிழகத்தில் ஷியாக்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரம். சென்னை அண்ணா சாலையில் உள்ள ஆயிரம்விளக்கு மசூதிதான் இதன் தலைமையகம். தமிழக அரசின் தலைமை ஷியா காஜி ஜி.ஏ. அஸ்கரியின் அலுவலகம் இங்குதான் உள்ளது.

சென்னையில் 10 மசூதிகள், வேலூர் தொரப்பாடி, கிருஷ்ணகிரி, ஜெகதேவி, வந்தவாசி என சொற்பமான இடங்களில்தான் வாழ்கின்றனர். இவர்களது தாய்மொழி உருதுஆகும். தமிழ் அதிகமாக தெரியாது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சியா_இசுலாம்&oldid=1939254" இலிருந்து மீள்விக்கப்பட்டது