மைசூர் அரண்மனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
too many similar images (no encyclopedic value), Wikipedia is not gallery
சி too many similar images (no encyclopedic value), blurry images
வரிசை 8: வரிசை 8:

மைசூர் அரண்மனை தரை மட்டத்திலிருந்து கோபுரம் வரை 145 அடி உயரமாகும். மிகப் பெரிய நுழைவு வாயில், திறந்த வெளி ஹால்கள், மாட மாளிகை, கூட கோபுரங்கள் என பிரம்மாண்டமாக கட்டப்பட்ட இந்த அரண்மனைக்குள் ஆயுத அறை, நூலகம், லிஃப்ட் வசதி, வேட்டை அறை, பிரத்யேக படுக்கை அறைகள் என அனைத்தும் மூன்றாவது மாடியில் அமைந்துள்ளன.

==இரவின் ஒளி வெள்ளத்தில்==
<gallery>
படிமம்:Palace-17.jpg
படிமம்:Palace-18.jpg
படிமம்:Palace-19.jpg
படிமம்:Palace-20.jpg
படிமம்:Palace-21.jpg
படிமம்:Palace-22.jpg
</gallery>

== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

03:52, 21 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

மைசூர் அரண்மனை

மைசூர் அரண்மனை அல்லது அம்பாவிலாஸ் எனப்படும் இது இந்தியாவின் கர்நாடக மாநிலம், மைசூரில் அமைந்துள்ள அரண்மனை ஆகும். இது 1897-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கட்ட துவங்கப்பட்டது. 1912-ம் ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.[1][2]

ஆரம்பத்தில் (யதுவம்ச) வொடையார் குடும்பத்தினரால் விஜயநகரப் பேரரசின் கீழ் சிற்றரசாக 1565 வரையிலும், பின் விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சி வரை ஆளப்பட்டு வந்தது. பின்னர் பல சிற்றரசுகள் தென்னிந்தியாவில் விடுதலை பெற்ற காலத்தில் மைசூரும் விடுதலை பெற்றது. நரசராஜ வொடையார் மற்றும் சிக்க தேவராய வொடையார் ஆகிய அரசர்களின் கீழ் தற்போதைய தெற்கு கர்நாடகா மாநிலத்தின் பல பகுதிகள் மைசூர் பேரரசின் கீழ் கொண்டு வரப்பட்டு இப்பகுதியில் ஒரு பலமான பேரரசாக அமைக்கப்பட்டது.

அரண்மனை அமைப்பு

மைசூர் அரண்மனை 1897-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கட்ட துவக்கப்பட்டு, பதினைந்து ஆண்டு கால முடிவில் 1912-ம் ஆம் ஆண்டில் தான் கட்டி முடிக்கப்பட்டது. இந்த அரண்மனையை கட்டிமுடிக்க செய்த செலவு 41 லட்சத்து 47 ஆயிரத்து 913 ரூபாய் அரண்மனையின் முன் நுழைவு வாயிலிருந்து மைதானமும், அடுத்து இராச தர்பார் மண்டபமும், அடுத்த உள் பகுதியில் மல்யுத்த மைதானம், அடுத்து அந்தப்புரம் என சுமார் 175 அறைகளையும்,சற்று ஏறக்குறைய 50.00.0 ஹெக்டேர் பரப்பளவும் கொண்டுள்ளது.

மைசூர் அரண்மனை தரை மட்டத்திலிருந்து கோபுரம் வரை 145 அடி உயரமாகும். மிகப் பெரிய நுழைவு வாயில், திறந்த வெளி ஹால்கள், மாட மாளிகை, கூட கோபுரங்கள் என பிரம்மாண்டமாக கட்டப்பட்ட இந்த அரண்மனைக்குள் ஆயுத அறை, நூலகம், லிஃப்ட் வசதி, வேட்டை அறை, பிரத்யேக படுக்கை அறைகள் என அனைத்தும் மூன்றாவது மாடியில் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்

  1. "மைசூர் அரண்மனை வயது 100". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 16 திசம்பர் 2013.
  2. "சுற்றுலாப் பயணிகளைக் கவரும் மைசூர் அம்பாவிலாஸ் அரண்மனை". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 16 திசம்பர் 2013.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைசூர்_அரண்மனை&oldid=1937501" இலிருந்து மீள்விக்கப்பட்டது