பயனர்:வெண்முகில்/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மொழிபெயர்ப்பு நூல்கள்
(வேறுபாடு ஏதுமில்லை)

05:56, 20 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

எரியும் பூந்தோட்டம்

சாகித்திய அகாதெமி விருது பெற்ற காலுதுன்ன பூலதோட என்னும் தெலுங்கு மூல நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு எரியும் பூந்தோட்டம் என்னும் புதினம். மூலநூலின் ஆசிரியர் சலீம். இவர் இதுவரை புதினங்கள் நான்கும் சிறுகதைத் தொகுப்புகள் மூன்றும், கவிதைத் தொகுப்புகள் மூன்றும் வெளியிட்டுள்ளார். இப்புதினத்தைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளவர் சாந்தாதத். இவர் இதுவரை தமிழ்ச் சிறுகதைத் தொகுப்புகள் மூன்றும் ‘ஆண்களுக்கான இட ஒதுக்கீடு’ எனும் கட்டுரை நூலும் ஒன்பது மொழியாக்க நூல்களும் வெளியிட்டுள்ளார். தடம் மாறிச் செய்த தவறொன்றின் விளைவாகத் தனிமனித வாழ்விலும் அவர்தம் குடும்ப வாழ்விலும் ஏற்படும் சிக்கல்களையும் மனக்குழப்பங்களையும் பதிவு செய்திருப்பதோடு வேறொருவர் செய்த தவறுக்குப் பலியாவதன் வலியையும் அவலத்தையும் ஆசிரியர் இப்புதினத்தில் பதிவு செய்திருக்கிறார். எய்ட்ஸ் நோய் குறித்தும், அந்நோய்க்கு ஆளானவர்கள் மீதான சமூகத்தின் தாக்குதல்கள், வன்மங்கள், அச்சங்கள், ஐயங்கள் குறித்தும் ஆழமான ஆய்வொன்றை முன்வைத்துள்ளதாக அமைந்துள்ளதோடு, அந்நோய் குறித்த புரிதலின்மையால் ஏற்படும் விளைவுகளை விளக்கி அதனைப் புரிந்துகொள்ள வேண்டியதன் தேவையை வலியுறுத்துகின்ற வகையிலும் இப்புதினம் அமைந்துள்ளது. மேலும், சமூகத்தால் விலக்கப்பட்டு, வெறுக்கப்பட்டு, துரத்தப்பட்டு, மன உளைச்சலுக்கு ஆளாகி வாழ்கின்ற மக்களின் அவலநிலையைப் பதிவு செய்திருக்கும் இப்புதினம் சமூகத்தின் அத்தகைய தாக்குதல்களுக்கு எதிராகப் போராடி வெற்றிபெற மேற்கொள்ள வேண்டிய வழிகளையும் வாய்ப்புகளையும் அடையாளங்காட்டத் தவறவில்லை.