மனோரமா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7: வரிசை 7:
| birth_place = [[மன்னார்குடி]], தமிழ்நாடு<ref name="hinduonnet.com">[http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/article652268.ece There’s no stopping her]. Hinduonnet. 2009/02/02</ref>
| birth_place = [[மன்னார்குடி]], தமிழ்நாடு<ref name="hinduonnet.com">[http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/article652268.ece There’s no stopping her]. Hinduonnet. 2009/02/02</ref>
| other names = ஆச்சி
| other names = ஆச்சி
| birth_date = {{Birth date and age|1943|5|26|df=yes}}
| birth_date = {{Birth date|1943|5|26|df=yes}}
| death_date = {{death date and age|df=y|2015|10|10|1937|05|26}}
| death_date = {{death date and age|df=y|2015|10|10|1937|05|26}}
| death_place = [[சென்னை]], [[தமிழ்நாடு]]
| death_place = [[சென்னை]], [[தமிழ்நாடு]]

01:20, 11 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

மனோரமா
பிறப்புகோபிசாந்தா
(1943-05-26)26 மே 1943
மன்னார்குடி, தமிழ்நாடு[1]
இறப்பு10 அக்டோபர் 2015(2015-10-10) (அகவை 78)
சென்னை, தமிழ்நாடு
இறப்பிற்கான
காரணம்
மாரடைப்பு
மற்ற பெயர்கள்ஆச்சி
செயற்பாட்டுக்
காலம்
1943-2015
வாழ்க்கைத்
துணை
எஸ். எம். இராமநாதன்
(தி.1964–1966) (மணமுறிவு)
பிள்ளைகள்பூபதி (பி. 1965)

மனோரமா (26 மே 1943 - 10 அக்டோபர் 2015) தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இவர் 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்தவர். [2] இவர் தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப்படுகின்றார்.

இவர் தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். கா. ந. அண்ணாதுரை, மு. கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா மற்றும் ம. கோ. இராமச்சந்திரன் இவருடன் தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் என். டி. ராமராவ் தெலுங்கு படங்களில் இவருடன் நடித்திருக்கிறார்.

ஆரம்பகால வாழ்க்கை

இவரது இயற்பெயர் கோபிசாந்தா. இவரது பெற்றோர் காசி 'கிளாக்' உடையார் மற்றும் ராமாமிர்தம். மனோரமா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் பிறந்தவர்.[3] இவரது சிறு வயதிலேயே வறுமையின் காரணமாக காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் என்ற ஊருக்கு குடிபெயர்ந்தனர்.[4] 6 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார்.[5] தனது 12ஆவது அகவையில் நடிப்புத் தொழிலில் இறங்கினார்.[6] "பள்ளத்தூர் பாப்பா" என அழைக்கப்பட்ட அவர்[7] நாடக இயக்குனர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் ஆகியோர் இவருக்கு "மனோரமா" எனப் பெயர் சூட்டினர்.

ஆரம்பத்தில் "வைரம் நாடக சபா" நாடகங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். அக்காலத்தில் புதுக்கோட்டையில் எஸ். எஸ். ராஜேந்திரன் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த போது அவருக்கு மனோரமா பி. ஏ. குமார் என்பவரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். மனோரமாவின் திறமையை அறிந்துகொண்ட இராசேந்திரன் தனது "எஸ்.எஸ்.ஆர். நாடக மன்றத்தில்" சேர்த்துக் கொண்டார். இந்நாடக நிறுவனத்தின் மணிமகுடம்,[7] தென்பாண்டிவீரன், புதுவெள்ளம் உட்பட நூற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்தார்.[8] ராஜேந்திரன், தேவிகா நடித்த ஒரு திரைப்படத்தில் இவர் நடித்தார். ஆனால் இத்திரைப்படம் வெளிவராமல் பாதியிலேயே நின்று விட்டது.[7]

திருமணம்

மனோரமா 1964 ஆம் ஆண்டில் தனது நாடகக் கம்பனியைச் சேர்ந்த எஸ். எம். இராமநாதன் என்பவரைக் காதலித்துத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு பூபதி என்ற பெயரில் ஒரு மகன் உள்ளார். 1966 ஆம் ஆண்டில் இராமநாதனுடன் மணமுறிப்புப் பெற்று, சென்னையில் தனியாக வாழ்ந்து வந்தார்.

பெற்ற விருதுகள்

மறைவு

மனோரமா தனது 78-ஆவது அகவையில் 2015 அக்டோபர் 10 அன்று இரவு 11:00 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.[9][7]

நடித்த திரைப்படங்களில் சில

1950களில்

வருடம் திரைப்படம் மொழி குறிப்புகள்
1958 மாலையிட்ட மங்கை தமிழ்
பெரிய கோவில் தமிழ்
1959 மரகதம் தமிழ்

1960களில்

வருடம் திரைப்படம் மொழி குறிப்புகள்
1960 களத்தூர் கண்ணம்மா தமிழ்
1963 கொஞ்சும் குமாரி[10] தமிழ்
பார் மகளே பார் தமிழ்
லவ குசா தமிழ்
1964 மகளே உன் சமத்து தமிழ்
1965 திருவிளையாடல் தமிழ்
1966 அன்பே வா தமிழ்
சரஸ்வதி சபதம் தமிழ்
கந்தன் கருணை தமிழ்
1968 எதிர்நீச்சல் தமிழ்
கலாட்டா கல்யாணம் தமிழ்
தில்லானா மோகனாம்பாள் தமிழ் ஜில் ஜில் சுந்தரி வேடம்
கணவன் தமிழ்
1969 ஆயிரம் பொய் தமிழ்

1970களில்

வருடம் திரைப்படம் மொழி குறிப்புகள்
1970 தலைவன் தமிழ்
1972 பட்டிக்காடா பட்டணமா தமிழ்
காசேதான் கடவுளடா தமிழ்
நீதி தமிழ்
1973 ராஜ ராஜ சோழன் தமிழ்
1974 குன்வாரா பாப் இந்தி ஷீலா வேடம்
1976 அக்கா தமிழ்
உனக்காக நான் தமிழ்
உண்மையே உன் விலை என்ன தமிழ்
ரோஜாவின் ராஜா தமிழ்
நீ ஒரு மகாராணி தமிழ்
மோகம் முப்பது வருஷம் தமிழ்
கிரஹபிரவேசம் தமிழ்
பத்ரகாளி தமிழ்
வாழ்வு என் பக்கம் தமிழ்
உங்களில் ஒருத்தி தமிழ்
பேரும் புகழும் தமிழ்
பாலூத்தி வளர்த்த கிளி தமிழ்
ஒரு கொடியின் இரு மலர்கள் தமிழ்
நல்ல பெண்மணி தமிழ்
முத்தான முத்தல்லவோ தமிழ்
மேயர் மீனாட்சி தமிழ்
குல கெளரவம் தமிழ்
ஜானகி சபதம் தமிழ்
1977 ஆளுக்கொரு ஆசை தமிழ்
ஆறு புஷ்பங்கள் தமிழ்
ஆசை மனைவி தமிழ்
துர்க்கை தமிழ்
1978 குப்பத்து ராஜா தமிழ்
சிட்டுக்குருவி தமிழ்
பைலட் பிரேம்நாத் தமிழ்
ஆயிரம் ஜென்மங்கள் மலையாளம்
பைரவி (இறைவி) தமிழ்
1979 தியாகம் தமிழ்
அலங்காரி தமிழ்
இமயம் தமிழ்
கல்யாணராமன் தமிழ்

1980களில்

வருடம் திரைப்படம் மொழி குறிப்புகள்
1980 பில்லா தமிழ்
பூந்தளிர் தமிழ்
1981 தீ தமிழ்
சவால் தமிழ்
மங்கம்மா சபதம் தமிழ்
1982 வாழ்வே மாயம் தமிழ்
சிம்லா ஸ்பெஷல் தமிழ்
தாய் மூகாம்பிகை தமிழ்
சங்கிலி தமிழ்
தீர்ப்பு தமிழ்
மணல் கயிறு தமிழ்
மருமகளே வாழ்க தமிழ்
கண்ணோடு கண் தமிழ்
கைவரிசை தமிழ்
ஜோடி புறா தமிழ்
போக்கிரி ராஜா தமிழ்
பக்கத்து வீட்டு ரோஜா தமிழ்
1983 சட்டம் தமிழ்
சிவப்பு சூரியன் தமிழ்
மிருதங்க சக்கரவர்தி தமிழ்
நீதிபதி தமிழ்
நிரபராதி தமிழ்
தங்க மகன் தமிழ்
அடுத்த வாரிசு தமிழ்
பாயும் புலி தமிழ்
1984 எனக்குள் ஒருவன் தமிழ்
கைராசிக்காரன் தமிழ்
மண்சோறு தமிழ்
ஓ மானே மானே தமிழ்
அன்பே ஓடி வா தமிழ்
1985 ஸ்ரீ ராகவேந்திரா தமிழ்
விதி தமிழ்
நினைவுகள் தமிழ்
சிதம்பர ரகசியம் தமிழ்
ஜான்சி தமிழ்
1986 விக்ரம் தமிழ்
சம்சாரம் அது மின்சாரம் தமிழ் கண்ணம்மா
அம்புலிமாமா தமிழ்
1987 பேர் சொல்லும் பிள்ளை தமிழ்
நான் அடிமை இல்லை தமிழ்
1988 குரு சிஷ்யன் தமிழ்
பாட்டி சொல்லை தட்டாதே தமிழ்
என் ஜீவன் பாடுது தமிழ்
உன்னால் முடியும் தம்பி தமிழ்
இது நம்ம ஆளு தமிழ்
தம்பி தங்கக்கம்பி தமிழ்
1989 அபூர்வ சகோதரர்கள் தமிழ் முனியம்மா வேடம்
புதிய பாதை தமிழ்

1990களில்

வருடம் திரைப்படம் மொழி குறிப்புகள்
1990 மைக்கேல் மதன காமராஜன் தமிழ்
எதிர்காற்று தமிழ்
நடிகன் தமிழ்
வேடிக்கை என் வாடிக்கை தமிழ்
1991 சின்ன கவுண்டர் தமிழ்
சின்னத் தம்பி தமிழ் கண்ணம்மா வேடம்
இதயம் தமிழ் கங்கா பாய் வேடம்
மைக்கேல் மதன காமராஜன் தமிழ்
1992 மன்னன் தமிழ்
நீ பாதி நான் பாதி தமிழ்
சிங்கார வேலன் தமிழ் தாயம்மா வேடம்
அண்ணாமலை தமிழ் தாய் வேடம்
1993 எஜமான் தமிழ்
ஜென்டில்மேன் தமிழ் கிட்டுவின் தாய் வேடம்
பொன்னுமணி தமிழ்
உத்தமராசா தமிழ்
தர்மசீலன் தமிழ்
செந்தூரப் பாண்டி தமிழ்
1994 காதலன் தமிழ்
தேவா தமிழ்
ஜெய்ஹிந்த் தமிழ்
சரிகம பதநி தமிழ்
ரசிகன் தமிழ்
நாட்டாமை தமிழ்
1995 முறை மாமன் தமிழ்
மருமகன் தமிழ்
கூலி தமிழ்
பெரிய குடும்பம் தமிழ்
நந்தவன தேரு தமிழ்
நான் பெத்த மகனே தமிழ் ஆண்டாள்
சைதன்யர் தமிழ்
வேலுச்சாமி தமிழ்
மிஸ்டர். மெட்ராஸ் தமிழ்
முத்துக்காளை தமிழ்
மாமன் மகள் தமிழ்
1996 பரம்பரை தமிழ்
இந்தியன் தமிழ்
லவ் பேர்ட்ஸ் தமிழ்
1997 அருணாச்சலம் தமிழ்
வள்ளல் தமிழ்
1998 பூவேலி தமிழ்
நட்புக்காக தமிழ்
வீர தாலாட்டு தமிழ்
மறுமலர்ச்சி தமிழ்
1999 ரோஜாவனம் தமிழ்
உன்னை தேடி தமிழ்
பெரியண்ணா தமிழ்
கும்மிப்பாட்டு தமிழ்
சிம்மராசி தமிழ்

2000களில்

வருடம் திரைப்படம் மொழி குறிப்புகள்
2000 கண்ணால் பேசவா தமிழ்
வெற்றிக் கொடி கட்டு தமிழ்
மில்லினியம் ஸ்டார்ஸ் மலையாளம்
திருநெல்வேலி தமிழ்
கண்ணன் வருவான் தமிழ்
சிநேகிதியே தமிழ்
உன்னருகே நானிருந்தால் தமிழ்
மாயி தமிழ்
2001 கிருஷ்னா கிருஷ்னா தமிழ்
பாவா நச்சாடு தெலுங்கு
2002 தமிழ் (திரைப்படம்) தமிழ்
ஜெயா தமிழ்
ஜெமினி தமிழ்
2003 சாமி தமிழ் புவனாவின் பாட்டி வேடம்
திவான் தமிழ்
விசில் தமிழ்
அன்பே அன்பே தமிழ்
2004 பேரழகன் தமிழ்
7ஜி ரெயின்போ காலனி தமிழ்
2005 கற்க கசடற தமிழ்
2006 இம்சை அரசன் 23ம் புலிகேசி தமிழ்
பாசக்கிளிகள் தமிழ்
2007 சீதா கல்யாணம் மலையாளம்
ஆழ்வார் தமிழ்
தாமிரபரணி தமிழ்
2008 கிருஷ்னார்ஜுனா தெலுங்கு
உளியின் ஓசை தமிழ்
2009 அருந்ததி தெலுங்கு
லாடம் தமிழ்
அ ஆ இ ஈ தமிழ்

2010களில்

ஆண்டு திரைப்படம் மொழி இதர குறிப்புகள்
2010 சிங்கம் தமிழ் காவியாவின் பாட்டி
2013 சிங்கம் 2 தமிழ் காவியாவின் பாட்டி

பாடிய பாடல்கள்

  • "வா வாத்தியார்" (பொம்மலாட்டம்)
  • "தில்லிக்கு ராஜானாலும்" (பாட்டி சொல்லை தட்டாதே)
  • "மெட்ராச சுத்தி பாக்க" (மே மாதம்)
  • "தாங்கையெனும் பாசக்கிளி" (பாசக்கிளிகள்)
  • "தெரியாதோ நோக்கு தெரியாதோ" (சூரியகாந்தி)
  • "பார்த்தாலே தெரியாதா" (ஸ்ரீ ராகவேந்திரா)

வெளியிணைப்புகள்

  1. There’s no stopping her. Hinduonnet. 2009/02/02
  2. "The endearing `aachi'". The Hindu. 7 July 2003. பார்க்கப்பட்ட நாள் 2010-05-26.
  3. "வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்ட மனோரமா: 1,300 படங்களில் நடித்து 'கின்னஸ்' சாதனை". cinema.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2014-07-20.
  4. "The Hindu : Evening of stardust memories". Hinduonnet.com. 27 பிப்ரவரி 2002. பார்க்கப்பட்ட நாள் 2010-05-26. {{cite web}}: Check date values in: |date= (help)
  5. தினமணி தீபாவளி மலர்,1999,பக்கம் 36
  6. A Tamil entertainment ezine presenting interesting contents and useful services. Nilacharal. Retrieved on 2011-07-27.
  7. 7.0 7.1 7.2 7.3 "Manorama, who matched protagonists of her day, passes away". தி இந்து. 11 அக்டோபர் 2015.
  8. "நடிகை மனோரமா காதல் திருமணம் தோல்வியில் முடிந்தது || actress manorama cinema history". cinema.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2014-07-20.
  9. ஆயிரம் திரைபடங்கள் கண்ட ஆச்சி : பழம் பெரும் நடிகை மனோரமா காலமானார், தினமலர், அக்டோபர் 11, 2015
  10. "Manorama's first film as heroine". Youtube.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோரமா_(நடிகை)&oldid=1932151" இலிருந்து மீள்விக்கப்பட்டது