ஓநாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தமிழாக்கம்
வரிசை 13: வரிசை 13:
| classis = [[பாலூட்டி]]
| classis = [[பாலூட்டி]]
| ordo = [[ஊனுண்ணி]]
| ordo = [[ஊனுண்ணி]]
| familia = [[Canidae]]
| familia = [[நாய்க் குடும்பம்]]
| genus = ''[[Canis]]''
| genus = ''[[Canis]]''
| species = '''''C. lupus'''''
| species = '''''C. lupus'''''

09:30, 11 செப்டெம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

வெண் ஓநாய்
புதைப்படிவ காலம்:Late Pleistocene - Recent
Canis lupus
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. lupus
இருசொற் பெயரீடு
Canis lupus
லின்னேயஸ், 1758
Range map. பச்சை, தற்போது; சிகப்பு, முன்பு.

ஓநாய் ஊனுண்ணிப் பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு. வீட்டு நாயை விட உருவில் பெரியது. இது நாய்ப் பேரினத்தைச் சேர்ந்தது. ஆனால் நாயில் இருந்து வேறுபட்டது. இப்படிப்பட்ட காட்டு விலங்காகிய ஓநாய்களைப் பழங்காலத்து மாந்தர்கள் பழக்கி வேறு இனங்களாகத் திரித்து உருவாக்கியவைதான் வீட்டு நாய்கள் என உயிரின அறிஞர்கள் எண்ணுகிறார்கள். ஓநாய்கள் பலவகையான மான்களையும், எல்க்கு, விரிகலை மூசுமான் எனப்படும் பெரிய விலங்குகளையும் கூட்டமாகச் சென்று தாக்கிக் கொன்று உண்ண வல்லவை. ஓநாய்கள் வட அமெரிக்காவிலும், ஆசியா முழுவதிலும் உள்ள காடுகளிலும் காணப்படுகின்றன. தென் அமெரிக்காவிலும், ஆப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் ஒநாய்கள் இல்லை.

ஓநாய்களில் இரண்டே வகைகள்தாம் இன்றுள்ளன. முதல் வகையானது வெண் ஓநாய் (Gray wolf), இரண்டாவது வகை செந்நாய் (செவ் ஓநாய், Red wolf). இந்த இரண்டாம் வகை பெரும்பாலும் காட்டுப் பகுதிகளில் முற்றுமாய் அற்றுப்போய் விட்டதாக எண்ணப்படுகின்றது.

உடலமைப்பு

முழுதும் வளர்ந்த ஓநாய்கள் 35 முதல் 55 கிகி எடை இருக்கும். மூக்கில் இருந்து வால் நுனி வரை ஏறத்தாழ 1.5-2 மீ நீளம் இருக்கும். 75 செ.மீ உயரம் இருக்கும். பெண் ஓநாய்கள் சற்று சிறியதாக இருக்கும்.

குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. Mech & Boitani (2004). Canis lupus. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 2006-05-05. Database entry includes justification for why this species is of least concern.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓநாய்&oldid=1914517" இலிருந்து மீள்விக்கப்பட்டது