மக்கா வெற்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mdmahir (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎பின்னணி: தொடுப்புகள்
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox military conflict
|conflict= மக்கா வெற்றி
|partof=the [[முஸ்லிம்]]–[[குரைசு]] போர்கள்|
|caption=Muhammad advancing on Mecca in [[Siyer-i Nebi]]'s ''[[The Life of the Prophet]]''.
|date=11 திசம்பர் 629
|place=[[மக்கா]]
|result=முசுலிம்களுக்கு வெற்றி; குரைசுகள் சரணடைந்தனர்
|combatant1=முசுலிஸ்
|combatant2=குரைசு
|commander1=[[முகம்மது நபி]]
|commander2=[[அபு சுப்புயான் இன் கார்ப்]]
|strength1=10,000
|strength2= தெரியவில்லை
|casualties1=2
|casualties2=12|}}

'''மக்கா வெற்றி''' என்பது முசுலிம்கள் ஹிஜ்ரி 8 [[ரமலான் நோன்பு|ரமலான் நோன்புப்]] பிறை 18ல், திசம்பர் 11, [[629]]ல் மக்காவை வெற்றி கொண்டதைக் குறிக்கிறது. [[முகம்மது]] நபி [[மதினா]]விலிருந்து ரமதான் பிறை 6ல் [[மக்கா]]வை நோக்கி தமது படையுடன் பயணத்தை துவங்கினார்.
'''மக்கா வெற்றி''' என்பது முசுலிம்கள் ஹிஜ்ரி 8 [[ரமலான் நோன்பு|ரமலான் நோன்புப்]] பிறை 18ல், திசம்பர் 11, [[629]]ல் மக்காவை வெற்றி கொண்டதைக் குறிக்கிறது. [[முகம்மது]] நபி [[மதினா]]விலிருந்து ரமதான் பிறை 6ல் [[மக்கா]]வை நோக்கி தமது படையுடன் பயணத்தை துவங்கினார்.



17:41, 17 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

மக்கா வெற்றி
the முஸ்லிம்குரைசு போர்கள் பகுதி
நாள் 11 திசம்பர் 629
இடம் மக்கா
முசுலிம்களுக்கு வெற்றி; குரைசுகள் சரணடைந்தனர்
பிரிவினர்
முசுலிஸ் குரைசு
தளபதிகள், தலைவர்கள்
முகம்மது நபி அபு சுப்புயான் இன் கார்ப்
பலம்
10,000 தெரியவில்லை
இழப்புகள்
2 12

மக்கா வெற்றி என்பது முசுலிம்கள் ஹிஜ்ரி 8 ரமலான் நோன்புப் பிறை 18ல், திசம்பர் 11, 629ல் மக்காவை வெற்றி கொண்டதைக் குறிக்கிறது. முகம்மது நபி மதினாவிலிருந்து ரமதான் பிறை 6ல் மக்காவை நோக்கி தமது படையுடன் பயணத்தை துவங்கினார்.

பின்னணி

மதினாவில் வசித்த முசுலிம்களும் மக்காவில் வசித்த குறைஷி குலத்தவர்களும் 628ல் 10 ஆண்டு காலத்திற்கு என ஹுதைபிய்யா ஒப்பந்தம் போட்டிருந்தனர்.

அந்த ஒப்பந்தங்களில் ஒன்று: “நபியவர்களுடன் சேர விரும்பியவர்கள் நபியவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம் குறைஷிகளுடன் சேர விரும்பியவர்கள் குறைஷிகளுடன் சேர்ந்து கொள்ளலாம். யார் எந்த கூட்டத்தினருடன் சேருகிறார்களோ, அவர் அந்தக் கூட்டத்தினரில் ஒருவராகக் கணிக்கப்படுவார். அவர் மீது யாராவது அத்துமீறினால் அது அந்தக் கூட்டத்தினர் மீதே அத்துமீறியதாகும்.”

இந்த ஒப்பந்தத்திற்கு ஏற்ப குஜாஆ கோத்திரத்தினர் நபியவர்களுடன் சேர்ந்து கொண்டனர். பக்ர் கோத்திரத்தினர் குறைஷிகளுடன் சேர்ந்து கொண்டனர். அறியாமைக் காலத்திலிருந்தே பரம்பரை பரம்பரையாக இவ்விரு கோத்திரத்தினரும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.

சில காலங்கள் இவ்வாறு கழிய, ஹிஜ்ரி 8, ஷஅபான் மாதம் பக்ர் கோத்திரத்தினரின் ஒரு கூட்டத்தினரை அழைத்துக் கொண்டு ‘நவ்ஃபல் இப்னு முஆவியா அத்தியலி’ என்பவர் புறப்பட்டார். அன்று குஜாஆ கிளையினர் ‘அல்வத்தீர்’ என்ற கிணற்றுக்கருகில் ஒன்றுகூடியிருந்தனர். நவ்ஃபல், தான் அழைத்து வந்தவர்களைச் சேர்த்துக் கொண்டு குஜாஆவினரைத் தாக்கினார். குஜாஆ கிளையினரில் சிலர் கொல்லப்பட்டனர். எஞ்சியுள்ளவர்களுடன் கடுமையான சண்டை நடந்தது. குறைஷிகள் பக்ரு கிளையினருக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியதுடன், அவர்களில் சிலரும் இரவின் இருளை பயன்படுத்திக் கொண்டு குஜாஆவினரைத் தாக்கினர்.

சண்டைசெய்து கொண்டே குஜாஆ கோத்திரத்தினர் ஹரம் எல்லைக்குள் நுழைந்து விட்டனர். அப்போது பக்ர் கிளையினர் “நவ்ஃபலே! நாம் நிறுத்திக் கொள்வோம். நாம் ஹரம் எல்லைக்குள் நுழைந்து விட்டோம். உமது இறைவனைப் பயந்துகொள்! உமது இறைவனை பயந்துகொள்!” என்று கூறினர். ஆனால், நவ்ஃபல் “பக்ர் இனத்தாரே! இன்றைய தினம் எந்த இறைவனும் இல்லை. உங்களது பழியைத் தீர்த்துக் கொள்ளுங்கள். என்மீது சத்தியமாக! ஹரம் எல்லையில் திருடும் நீங்கள் அதில் ஏன் கொலை செய்யக் கூடாது?” என்றார். குஜாஆவினர் புதைல் இப்னு வரகா மற்றும் ராபிஃ என்ற தங்களது நண்பர்கள் வீட்டில் சென்று அடைக்கலம் தேடினர்.

குஜாஆவைச் சேர்ந்த அம்ரு இப்னு ஸாலிம் மக்காவிலிருந்து மதீனாவிற்கு சென்று முகம்மது நபியை சந்தித்து முசுலிம்களின் உதவியை கோரினர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குறைசிகள் சார்பில் சமாதானக் குழுவை அனுப்பி இந்த சம்பவத்திற்கு இழப்பீடு தருவதாகவும், ஹுதைபிய்யா ஒப்ந்த்த்ததை தொடர விரும்புவதாகவும் முகம்மதிற்கு தெரியப்படுத்தினர். அதற்கு முன்பே முஸ்லிம்கள் படை திரட்டி கணக்குத் தீர்த்து மக்காவை கைப்பற்ற ஆயத்தமாகினர்.[1]

மேற்கோள்கள்

  1. http://www.tamililquran.com/mohamed-92.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்கா_வெற்றி&oldid=1898596" இலிருந்து மீள்விக்கப்பட்டது