சு. வெங்கடேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
வரிசை 1: வரிசை 1:


'''சு. வெங்கடேசன்''' [[தமிழகம்|தமிழகத்தின்]] [[மதுரை|மதுரையைச்]] சேர்ந்த ஒரு தமிழ் [[புதினம் (இலக்கியம்)|புதின]] எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய முதல் நூலான காவல் கோட்டம் என்ற வரலாற்றுப் புதின நூலுக்காக 2011 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றார். அரசியல் வாழ்விலும் உள்ள இவர் [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)|மார்க்சியக் கம்யூனிஸ்டு கட்சி]]யின் முழுநேர ஊழியராகவும் களப்பணியாளாராகவும் உள்ளார். 2006 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் [[திருப்பரங்குன்றம் (சட்டமன்றத் தொகுதி)|திருப்பரங்குன்றம்]] சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். [[தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்|தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்|தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்]] பொதுச் செயலாளராகவும் உள்ளார்.
'''சு. வெங்கடேசன்''' [[தமிழகம்|தமிழகத்தின்]] [[மதுரை|மதுரையைச்]] சேர்ந்த ஒரு தமிழ் [[புதினம் (இலக்கியம்)|புதின]] எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய முதல் நூலான காவல் கோட்டம் என்ற வரலாற்றுப் புதின நூலுக்காக 2011 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றார். அரசியல் வாழ்விலும் உள்ள இவர் [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)|மார்க்சியக் கம்யூனிஸ்டு கட்சி]]யின் முழுநேர ஊழியராகவும் களப்பணியாளாராகவும் உள்ளார். 2006 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் [[திருப்பரங்குன்றம் (சட்டமன்றத் தொகுதி)|திருப்பரங்குன்றம்]] சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். [[தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்|தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்]] பொதுச் செயலாளராகவும் உள்ளார்.


==வாழ்க்கை சுருக்கம்==
==வாழ்க்கை சுருக்கம்==

11:41, 3 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

சு. வெங்கடேசன் தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த ஒரு தமிழ் புதின எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய முதல் நூலான காவல் கோட்டம் என்ற வரலாற்றுப் புதின நூலுக்காக 2011 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றார். அரசியல் வாழ்விலும் உள்ள இவர் மார்க்சியக் கம்யூனிஸ்டு கட்சியின் முழுநேர ஊழியராகவும் களப்பணியாளாராகவும் உள்ளார். 2006 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் திருப்பரங்குன்றம் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.

வாழ்க்கை சுருக்கம்

மதுரை மாவட்டம் ஹார்விபட்டியில் சுப்புராம் மற்றும் நல்லம்மாள் தம்பதியினருக்கு பிறந்தவர் சு.வெங்கடேசன். மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பி.காம்., பட்டம் பெற்றார். கல்லூரி முதலாம் ஆண்டு படித்தபோது, 1989 ல் "ஓட்டை இல்லாத புல்லாங்குழல்' என்ற கவிதை நூல் இயற்றியுள்ளார். இவைதவிர இவர் எழுதிய பிற படைப்புகள் (கவிதைகள் ஆய்வு கட்டுரைகள் முதலியன):

  • திசையெல்லாம் சூரியன்
  • பாசி வெளிச்சத்தில்
  • ஆதிப்புதிர் (கவிதை)
  • கலாசாரத்தின் அரசியல்
  • மனிதர்கள், நாடுகள், உலகங்கள்
  • சமயம் கடந்த தமிழ்
  • அலங்காரப்பிரியர்கள்

குற்றசாட்டுகள்

2011 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்ட இவரது காவல் கோட்டம் நூல் நாயக்கர் ஆட்சி களத்தில் தொடங்கி 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நீள்கிறது. இவர் நூலுக்காக எடுத்துக் கையாண்ட வரலாற்று குறிப்புகள் அனைத்தும் வேறு சில வரலாற்று ஆய்வாளர்களின் படைப்புகள் என்றும் அவை முறையான நன்றிக் குறிப்புகள் ஏதுமின்றி கையாளப்பட்டுள்ளன என்றும் குற்றசாட்டுகளும் இவர் மீது தொடுக்கப்படுகின்றன.

தமிழ் திரைப்பட இயக்குநரான வசந்தபாலன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த அரவான் திரைப்படம் இப்புதினத்தை அடிப்படைக் கதையாகக் கொண்டது.

காவல் கோட்டம் பற்றி வெங்கடேசன் சொல்லியது:[1]

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._வெங்கடேசன்&oldid=1890369" இலிருந்து மீள்விக்கப்பட்டது