மருத்துக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" File:Musée Guimet 897 04.jpg|thumb|மருத்துக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 15: வரிசை 15:
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
[[பகுப்பு:புராணக் கதைமாந்தர்]]
[[பகுப்பு:புராணக் கதைமாந்தர்]]
[[பகுப்பு:இந்துக் கடவுள்கள்]]

14:58, 3 மே 2015 இல் நிலவும் திருத்தம்

மருத்துக்கள், பாரிஸ் நகர அருங்காட்சியகம்

மருத்துக்கள் (Marutas)[1] சமக்கிருதம்: मरुत), இந்து தொன்மவியிலில் மருதகனங்கள் என்றும் அழைப்பர். உருத்திரன்-பிரிசினி தம்பதியருக்கு பிறந்த மருத்துக்களின் எண்ணிக்கை 27 முதல் 60 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.[2]. புவியின் வடக்கு பகுதியில் வாழும் மருத்துக்கள் இடி, மின்னல் போன்ற படைக்கலன்கள், இரும்பு பற்களுடன், கடும் கோபத்துடன், சூறாவளி காற்று போன்று வெகு வேகமாக பயணிப்பவர்கள் என அறியப்படுகிறது.

ரிக் வேத மண்டலம் ஆறில், மந்திரம் 66இல் மழை, பெருங்காற்று, சூறாவளியுடன் கூடிய மழை ஆகியவைகளுக்கான தேவர்கள், மருத்துக்கள் என கூறுகிறது.[3]

திதி-காசியபரிடம் இந்திரனை வெல்லக்கூடிய ஒரு மகனை அருள வேண்டினாள். குழந்தை கருவுற்ற நாளிலிருந்து நியம நிஷ்டைகளுடன் இருக்க வேண்டும் என்று காசியபர் கூறினார். அதற்குப் பங்கம் ஏற்பட்டால் நினைத்தது நிறைவேறாது என்றார். கருவுற்ற திதி ஒருநாள் கால்களைக் கழுவாமல் தூங்கச் செல்ல, இந்திரன் அணு அளவில் அவளது கருவறையுள் நுழைந்து கருவை வஜ்ராயுதத்தால் ஏழு பகுதிகளாக்கிட, மறுபடியும் அந்த ஒவ்வொன்றும் ஏழாக மொத்தம் நாற்பத்தொன்பது துண்டுகளாயின. கருக்கள் அழ, இந்திரன், கருக்களைப் பார்த்து மா ருத (அழாதே) என்று கூற அவை மருத்துகள் எனப்பட்டன. மருத்துக்கள், இந்திரனின் இளைஞர் படைகள் ஆவர்.

மேற்கோள்கள்

  1. "Marut"
  2. Max Müller. Vedic Hymns. Atlantic Publishers. பக். 352. 
  3. Max Müller, Hermann Oldenberg. Vedic Hymns: Part I. Library of Alexandria. பக். 177. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மருத்துக்கள்&oldid=1853380" இலிருந்து மீள்விக்கப்பட்டது