அயோடேட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"File:iodate anion.svg|thumb|140px|அயோடேட்டு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

14:45, 29 ஏப்பிரல் 2015 இல் நிலவும் திருத்தம்

அயோடேட்டு எதிர்மின் அயனி, IO3
அயோடேட்டு எதிர்மின் அயனியின் இடம் - நிரப்பு மாதிரி

அயோடேட்டு (Iodate) என்பது அயோடிக் அமிலத்தினுடைய இணைப்புக் காரமாகும்.[1] அயோடேட்டு எதிர்மின் அயனியில் அயோடின் மூன்று ஆக்சிசன் அணுக்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது. இதனுடைய மூலக்கூறு வாய்பாடு IO3 ஆகும். அயோடேட்டு அயனியின் மூலக்கூறானது முக்கோண பட்டைக்கூம்பு வடிவமைப்பு கொண்டுள்ளது.

பர்ரயோடேட்டை தையோயீத்தருடன் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தி அயோடேட்டைத் தயாரிக்க முடியும். இவ்வினையில் சல்பாக்சைடு உடன்விளை பொருளாக கிடைக்கிறது.[2]

அயோடேட்டு குழுவைக் கொண்ட வேதிச் சேர்மங்கள் ஒரே வகையான பண்புகளுடன் உள்ளன. எடுத்துக்காட்டாக, சோடியம் அயோடேட்டு , (NaIO3), வெள்ளி அயோடேட்டு (AgIO3) மற்றும் கால்சியம் அயோடேட்டு (Ca(IO3)2) ஆகியனவற்றைக் கூறலாம். இவ்வகை அயோடேட்டுகள் பொதுவாக குளோரேட்டுகளை ஒத்திருக்கின்றன. அயோடினுக்குப் பதிலாக குளோரின் என்பது மட்டுமே வேறுபாடாக இருக்கின்றது.

அமிலச்சூழலில் அயோடிக்கமிலம் உருவாகிறது. பொட்டாசியம் ஐதரசன் அயோடேட்டு (KH(IO3)2) என்பது பொட்டாசியம் அயோடேட்டு மற்றும் அயோடிக் அமிலத்தினுடைய ஒர் இரட்டை உப்பு ஆகும். அதேவேளையில் இது ஒரு அமிலமாகவும் இருக்கிறது. அயோடின் மணிப்பொறி வினையில் அயோடேட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. பொட்டாசியம் அயோடைடு போலவே பொட்டாசியம் அயோடேட்டும் , கதிரியக்க அயோடின் ஈர்ப்பை எதிர்க்கும் முற்காப்பு நடவடிக்கையில் பயன்படுகிறது.[3][4]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அயோடேட்டு&oldid=1852124" இலிருந்து மீள்விக்கப்பட்டது