பஞ்சவன்மாதேவீச்சரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15: வரிசை 15:
பல ஆண்டுகளுக்கு முன்பு வரை கோயிலுக்குள் செல்வதென்றால் ஒரு தோப்பிற்குள் செடிகொடிகள் மண்டிக்கிடக்கும் இடத்தில் புதர்கள் நிறைந்த சூழலில் பார்க்கவேண்டிய அவல நிலை இருந்தது. அனைத்தையும் கடந்து கோயிலுக்குள் சென்றால் அதிக எண்ணிக்கையிலான வவ்வால்கள் நம் முன் சுற்றி வந்து பயமுறுத்தி மூலவரைப் பார்க்க அனுமதிக்காது. பராமரிப்பின்றி அழிவின் நிலையில் இருந்த இந்தப் பள்ளிப்படைக் கோயில் சில ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது. தற்போது கட்டுமானத்தில் சில இடங்களில் செடிகள் முளைக்க ஆரம்பித்துள்ளன.

==மேற்கோள்கள்==
{{reflist}}

==படத்தொகுப்பு==
<gallery>
<gallery>
File: Panchavanmadevicharam6.JPG
File: Panchavanmadevicharam6.JPG
வரிசை 24: வரிசை 29:
File: Panchavanmadevicharam5.JPG
File: Panchavanmadevicharam5.JPG
</gallery>
</gallery>

==மேற்கோள்கள்==
{{reflist}}

[[பகுப்பு:கும்பகோணத்திலுள்ள கோயில்கள்]]
[[பகுப்பு:கும்பகோணத்திலுள்ள கோயில்கள்]]

02:43, 5 ஏப்பிரல் 2015 இல் நிலவும் திருத்தம்

நுழைவாயில்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம் பட்டீஸ்வரம் அருகேயுள்ள பள்ளிப்படைக் கோயிலே பஞ்சவன்மாதேவீச்சரம் ஆகும். பட்டீஸ்வரத்திலிருந்து திருமேற்றளிக்குச் செல்லும் சாலையில் இப்பள்ளிப்படை அமைந்துள்ளது.

கற்றளி

இராஜராஜசோழனின் தேவியும், பழுவேட்டரையரின் மகளுமாகிய பஞ்சவன்மாதேவியார் காலமானபிறகு அவ்வம்மையாரைப் பள்ளிப்படுத்தி எடுக்கப்பெற்ற கற்றளியே பஞ்சவன்மாதேவீச்சரமாகும். இராஜேந்திர சோழன் எடுத்த இக்கற்கோயில் திருமலைராயன் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது[1]

அமைப்பு

கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம் அதனுடன் இணைந்த அம்மன் கோயில்கள் பரிவாராலயமாக சண்டீசர் கோயில், கிழக்குக் கோபுர வாயில் ஆகியவற்றோடு பஞ்சவன்மாதேவீச்சரம் அமைந்துள்ளது. அர்த்தமண்டபத்திலுள்ள ரிஷபமும், அங்குள்ள சிம்மத்தூண் ஒன்றும் பழுவேட்டரையர்களின் கலை அமைதியோடு விளங்குகின்றன. [1]

தாய்-மகன் அன்பு

பழுவேட்டரையர் மரபில் வந்த பஞ்சவன்மாதேவி, ராஜேந்திரனை தன் சொந்த மகனாகவே எண்ணி அன்பு பாராட்டினார். அதனால், இந்த இறையுணர்வு மிக்க சீமாட்டி இயற்கை எய்தியபோது அந்தப் பிரிவைத் தாங்கமாட்டாத அரசர், அன்னையின் நினைவாக, பேரரசி புதைக்கப்பட்ட இடத்தில் பள்ளிப்படைக்கோயிலான பஞ்சவன்மாதேவீச்சரத்தைக் கட்டினார். இப்பள்ளிப்படை, தாயின்மீது அவர் கொண்டிருந்த அன்பை வெளிப்படுத்த கட்டப்பட்ட கலைக்கோயிலாகும்.[2]

தற்போதைய நிலை

பல ஆண்டுகளுக்கு முன்பு வரை கோயிலுக்குள் செல்வதென்றால் ஒரு தோப்பிற்குள் செடிகொடிகள் மண்டிக்கிடக்கும் இடத்தில் புதர்கள் நிறைந்த சூழலில் பார்க்கவேண்டிய அவல நிலை இருந்தது. அனைத்தையும் கடந்து கோயிலுக்குள் சென்றால் அதிக எண்ணிக்கையிலான வவ்வால்கள் நம் முன் சுற்றி வந்து பயமுறுத்தி மூலவரைப் பார்க்க அனுமதிக்காது. பராமரிப்பின்றி அழிவின் நிலையில் இருந்த இந்தப் பள்ளிப்படைக் கோயில் சில ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது. தற்போது கட்டுமானத்தில் சில இடங்களில் செடிகள் முளைக்க ஆரம்பித்துள்ளன.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 குடவாயில் பாலசுப்பிரமணியன், பழையாறை மாநகர், பட்டீஸ்வரம் ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீதேனுபுரீஸ்வரசுவாமி மற்றும் ஸ்ரீதுர்க்காம்பிகை திருக்கோயில் கும்பாபிஷேக மலர், 1999
  2. தேவமணி ரஃபேல், அன்னைக்கு ஓர் ஆலயம், கல்கி தீபாவளி மலர் 2002

படத்தொகுப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சவன்மாதேவீச்சரம்&oldid=1834524" இலிருந்து மீள்விக்கப்பட்டது