வே. குமாரசுவாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துவக்கம்
 
சி Kanags பயனரால் வி. குமாரசுவாமி, வே. குமாரசுவாமி என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
(வேறுபாடு ஏதுமில்லை)

12:29, 28 பெப்பிரவரி 2015 இல் நிலவும் திருத்தம்

வி. குமாரசுவாமி
V. Kumaraswamy
இலங்கை நாடாளுமன்றம்
for சாவகச்சேரி
பதவியில்
1947–1956
முன்னையவர்எவருமில்லை
பின்னவர்வ. ந. நவரத்தினம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1919-07-31)31 சூலை 1919
பிள்ளைகள்வாகீசுவரன், துஷ்யந்தி[1]
முன்னாள் கல்லூரிஇலங்கை சட்டக் கல்லூரி
தொழில்வழக்கறிஞர்
இனம்இலங்கைத் தமிழர்

வேலுப்பிள்ளை குமாரசுவாமி (Velupillai Kumaraswamy, பிறப்பு: 31 சூலை 1919)[2] இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

வாழ்க்கைச் சுருக்கம்

குமாரசுவாமி யாழ்ப்பாண மாவட்டம் சாவகச்சேரியில் வழக்கறிஞர் வேலுப்பிள்ளை என்பவருக்குப் பிறந்தார்.[1] குமாரசுவாமி இலங்கை சட்டக் கல்லூரியில் கல்வி பயின்று கொழும்பில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

அரசியலில்

குமாரசுவாமி சட்டக்கல்லூரியில் படிக்கும் போது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக சாவகச்சேரி தேர்தல் தொகுதியில் 1947 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று [[நாடாளுமன்றம் சென்றார்.[3] 1948 ஆம் ஆண்டில் தமிழ் காங்கிரசு கட்சி டொன் ஸ்டீபன் சேனாநாயக்கவின் அரசில் இணைந்ததை அடுத்து குமாரசுவாமி நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டார்.[1][4]

1952 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[5] 1953 ஆம் ஆண்டில் தமிழ்க் காங்கிரசு கட்சி அரசில் இருந்து விலகினாலும், குமாரசுவாமி ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்திருந்தார்.[6] ஐக்கிய தேசியக் கட்சி சிங்களம் மட்டும் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து குமாரசுவாமி 1956 இல் அக்கட்சியை விட்டு வெளியேறினார்.[6]

குமாரசுவாமி 1956 தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு தமிழரசுக் கட்சி வேட்பாலர் வி. என். நவரத்தினத்திடம் தோற்றார்.[1][7] பின்னர் மார்ச் 1960,[8] 1970[9] தேர்தல்களில் தமிழ்க் காங்கிரசின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 1977 தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு மீண்டும் நவரத்தினத்திடம் தோற்றார்.[10]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. பக். 90. http://www.noolaham.org/wiki/index.php?title=Dictionary_of_Biography_of_the_Tamils_of_Ceylon. 
  2. "Directory of Past Members: Kumaraswamy, Velupillai". இலங்கை நாடாளுமன்றம்.
  3. "Result of Parliamentary General Election 1947" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  4. Rajasingham, K. T.. "Chapter 14: Post-colonial realignment of political forces". Sri Lanka: The Untold Story. http://www.atimes.com/ind-pak/CK10Df03.html. 
  5. "Result of Parliamentary General Election 1952" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  6. 6.0 6.1 Rajasingham, K. T.. "Chapter 15: Turbulence in any language". Sri Lanka: The Untold Story. http://www.atimes.com/ind-pak/CK17Df01.html. 
  7. "Result of Parliamentary General Election 1956" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  8. "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  9. "Result of Parliamentary General Election 1970" (PDF). Department of Elections, Sri Lanka.
  10. "Result of Parliamentary General Election 1977" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வே._குமாரசுவாமி&oldid=1811832" இலிருந்து மீள்விக்கப்பட்டது