மு. தமிழ்க்குடிமகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29: வரிசை 29:

http://tamil.oneindia.com/art-culture/essays/2011/01-dr-tamilkudimagan-an-unforgettable-tamil-scholar-aid0091.html
http://tamil.oneindia.com/art-culture/essays/2011/01-dr-tamilkudimagan-an-unforgettable-tamil-scholar-aid0091.html

http://tamil.oneindia.com/news/2004/09/22/tamilkudimagan.html
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]][[பகுப்பு:தமிழறிஞர்கள்]][[பகுப்பு:தமிழக முன்னாள் அமைச்சர்கள்]]
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]][[பகுப்பு:தமிழறிஞர்கள்]][[பகுப்பு:தமிழக முன்னாள் அமைச்சர்கள்]]

02:37, 18 பெப்பிரவரி 2015 இல் நிலவும் திருத்தம்

தமிழ்க்குடிமகன் தனித்தமிழ் இயக்க முன்னோடிகளில் ஒருவர் ஆவார். தமிழ்ப் பேராசிரியராகவும் அரசியலாளராகவும் அமைச்சராகவும் இருந்தவர்.

குடும்பம்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள சாத்தனூர் கிராமத்தில் பிறந்தார்.இவருக்கு வெற்றிச் செல்வி என்ற மனைவியும்,மெய்மொழி, திருவரசன், பாரி என்ற 3 மகன்களும், கோப்பெருந்தேவி என்ற மகளும் உள்ளனர்.

இவரது இயற்பெயர் சாத்தையா. தமிழ் மீது கொண்டபற்று காரணமாக தன் பெயரைத் தமிழ்க்குடிமகன் என்று மாற்றிக் கொண்டார். 1969 முதல் மதுரை யாதவர் கல்லூரியில் தமிழ் பேராசிரியராகவும், பின்பு அதே கல்லூரியில் 1979லிருந்து 88 வரைமுதல்வராகவும் பணியாற்றினார்.

அரசியல்

தமிழ்க்குடிமகன் கடந்த 1989,1996-ம் ஆண்டுகளில் நடைப்பெற்ற தமிழக சட்டபேரவை தேர்தலில் திமுக சார்பில் இளையான்குடி தொகுதியில் போட்டியிட்டு சட்டபேரவை உறுப்பினர் ஆனார். இதையடுத்து அவர் தமிழக சட்டபேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். 1996 முதல் 2001 வரை தமிழ் வளர்ச்சி மற்றும் அறநிலையத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். 2001 மார்ச்சில் நடந்தசட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அதிமுகவில் இணைந்தார். 22-9-2004-ல் மரணமடைந்தார்.

எழுதிய நூல்கள்

  • அந்தமானைப் பாருங்கள்
  • பாவேந்தர் கனவு
  • வாழ்ந்து காட்டுங்கள்
  • காலம் எனும் காட்டாறு
  • பாவேந்தரின் மனிதநேயம்
  • ஐரோப்பியப் பயணம்
  • மனம் கவர்ந்த மலேசியா
  • கலைஞரும் பாவேந்தரும்
  • தமிழில் வழிபாடு தடையென்ன நமக்கு?
  • சீன நாடும் சின்ன நாடும்
  • மலேசிய முழக்கம்
  • 12. தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் (இருபாகங்கள்)

உசாத்துணை

வரலாறு படைத்த தமிழறிஞர்கள்-ஆசிரியர் புலவர் த.சுந்தரராசன், மணிவாசகர் பதிப்பகம்,சென்னை-600108

http://tamil.oneindia.com/art-culture/essays/2011/01-dr-tamilkudimagan-an-unforgettable-tamil-scholar-aid0091.html

http://tamil.oneindia.com/news/2004/09/22/tamilkudimagan.html

"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._தமிழ்க்குடிமகன்&oldid=1808095" இலிருந்து மீள்விக்கப்பட்டது