நாகர்கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 8°10′N 77°26′E / 8.17°N 77.43°E / 8.17; 77.43
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 76: வரிசை 76:
* [[உலக்கை அருவி]]
* [[உலக்கை அருவி]]
* [[சொத்தவிளை கடற்கரை]] மற்றும் நிறைய இடங்கள் உள்ளன.
* [[சொத்தவிளை கடற்கரை]] மற்றும் நிறைய இடங்கள் உள்ளன.

= இவற்றையும் பார்கவும் =

= [[வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், திருப்பதிசாரம்]] =


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==

16:39, 4 பெப்பிரவரி 2015 இல் நிலவும் திருத்தம்

நாகர்கோவில்
—  மாநகராட்சி  —
நாகர்கோவில்
இருப்பிடம்: நாகர்கோவில்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°10′N 77°26′E / 8.17°N 77.43°E / 8.17; 77.43
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், இ. ஆ. ப
நகராட்சி தலைவர் மீனாதேவ்
சட்டமன்றத் தொகுதி நாகர்கோவில்
சட்டமன்ற உறுப்பினர்

எம். ஆர். காந்தி (பாஜக)

மக்கள் தொகை 2,08,149 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


13 மீட்டர்கள் (43 அடி)

குறியீடுகள்

நாகர்கோவில் (Nagercoil), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரமும் நாகர்கோவில் ஆகும். இந்நகருக்கு நாஞ்சில்நாடு என்ற பெயரும் உண்டு. ஸ்ரீ நாகராஜாவுக்கு திருக்கோயில் இவ்வூரில் அமைந்துள்ளதால் இவ்வூர் நாகர்கோயில் என அழைக்கப்படுகிறது.[3] இந்நகரின் வழியாக பழையாறு ஓடுகிறது.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 8°10′N 77°26′E / 8.17°N 77.43°E / 8.17; 77.43 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 13 மீட்டர் (42 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மதங்கள்

இந்நகரில் இந்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லமிய சமயத்தினர் வாழ்கின்றனர்.

கோயில்கள்

  • நாகராஜா கோவில்
  • அழகம்மன் கோவில்
  • ஸ்ரீ அற்புத வினாயகர் கோவில் மீனாட்சிபுரம்
  • கிருஷ்ணன் கோவில்

கிறிஸ்தவ ஆலயம்

புனித சவேரியார் பேராலயம்

மக்கள் வகைப்பாடு

மக்கள்தொகை

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,24,329 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 110,132 ஆண்கள், 114,197 பெண்கள் ஆவார்கள்.மக்களின் சராசரி கல்வியறிவு 95.35% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 97.03%, பெண்களின் கல்வியறிவு 93.74% ஆகும்.மக்கள் தொகையில் 19,034 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

நாகர்கோவில் பசுமை வளங்கள் மிகவும் கொண்ட ஒரு ஊராக திகழ்கிறது. இதன் அருகில் உள்ள சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு கோவில்.நாகர்கோவிலில் அமைந்துள்ள நாகராஜா எனும் கோவிலின் பெயராலே இவ்வூருக்கு நாகர்கோவில் எனும் பெயர் வந்தது. இக்கோவில் சமணர்களால் கட்டப்பட்டது.

நாகர்கோவில் இலக்கியத் துறையில் சிறப்புற்று விளங்குகிறது. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை,சதாவதானி செய்கு தம்பி பாவலர், எஸ். வையாபுரிப்பிள்ளை, கே. என். சிவராஜபிள்ளை, வித்துவான் லட்சுமணபிள்ளை போன்ற தமிழறிஞர்கள் நாகர்கோயிலைச் சேர்ந்தவர்கள்.

திரைப்படத்துறையில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் இந்த ஊரைச் சேர்ந்தவர்.

நாகர்கோயிலில் நவீன எழுத்தாளர்கள் பல உருவாயினர். சுந்தர ராமசாமி, நாஞ்சில் நாடன் போன்றவர்கள் நாகர்கோயிலைச் சேர்ந்தவர்கள். ஜெயமோகன், ஜெ.ஆர்.வி.எட்வர்ட், லட்சுமி மணிவண்ணன் போன்ற பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.

அ.கா.பெருமாள், குமரிமைந்தன், எம்.வேதசகாயகுமார், தெ.வே.ஜெகதீசன், மா.சுப்ரமணியம், ஜேம்ஸ் ஆர் டேனியல், இரணியல் கலைத்தோழன் போன்ற நவீன இலக்கிய ஆய்வாளர்கள் இந்த நகரத்தைச் சேர்ந்தவர்கள்.

போக்குவரத்து

பேருந்து நிலையம்

அண்ணா பேருந்து நிலையம்

மாவட்டத்திற்குள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் சில கிராமங்களுக்கும் இப்பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப் படுகின்றன.

வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையம்

பிற மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கும், மாவட்டத்திற்குள்ளும் இப்பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப் படுகின்றன.

இரயில் நிலையம்

  1. நாகர்கோவில் சந்திப்பு
  2. நாகர்கோவில் நகரம்

சுற்றுலாத் தலங்கள்

நாகர்கோயில் நகரத்தை ஒட்டி ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

இவற்றையும் பார்கவும்

வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், திருப்பதிசாரம்

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "நாகர்கோயில் - பெயர்க்காரணம் ?".
  4. "Nagercoil". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  5. "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகர்கோவில்&oldid=1802294" இலிருந்து மீள்விக்கப்பட்டது