கர்ப்பூரி தாக்கூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 45: வரிசை 45:
==அரசியல் பணி==
==அரசியல் பணி==


1970 ஆம் ஆண்டின் இறுதியில் கர்ப்பூரி தாக்கூர் பிகார் முதல் அமைச்சர் ஆனார். இரண்டாம் முறையாக 1977 இல் மீண்டும் பிகார் முதலமைச்சர் ஆனார். பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்குக் கல்வியில் 12 விழுக்காடு ஒதுக்கீடு செய்தார். கட்டாய ஆங்கில வழிக் கல்வியை அகற்றி மாநில மொழியான இந்தியைக் கொண்டு வந்தார். லோகத் தளக் கட்சியின் சார்பில் மண்டல்குழுப் பரிந்துரைகளை நடை முறைப்படுத்துவதற்குப் தொடர்ந்து போராடினார். மது விலக்கை அமுல் படுத்தினார். நெருக்கடிக் காலத்தில் செயப்பிரகாசு நாராயணன் தலைமையில் நடந்த முழுப் புரட்சி இயக்கத்தில் இணைந்து வினையாற்றினார். பிகார் அரசியல் தலைவர்களான [[லாலு பிரசாத் யாதவ்]], ராம் விலாசு பாசுவான், நிதிசு குமார் போன்றோரின் ஆசானாக கர்ப்பூரி தாக்கூர் மதிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.1991 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் நாளில் நடுவண் அரசு இவர் நினைவைப் போற்றும் வகையில் சிறப்பு அஞ்சல்தலையை வெளியிட்டது.
1970 ஆம் ஆண்டின் இறுதியில் கர்ப்பூரி தாக்கூர் பிகார் முதல் அமைச்சர் ஆனார். இரண்டாம் முறையாக 1977 இல் மீண்டும் பிகார் முதலமைச்சர் ஆனார். பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்குக் கல்வியில் 12 விழுக்காடு ஒதுக்கீடு செய்தார். கட்டாய ஆங்கில வழிக் கல்வியை அகற்றி மாநில மொழியான இந்தியைக் கொண்டு வந்தார். லோகத் தளக் கட்சியின் சார்பில் மண்டல்குழுப் பரிந்துரைகளை நடை முறைப்படுத்துவதற்குத் தொடர்ந்து போராடினார். மது விலக்கை அமுல் படுத்தினார். நெருக்கடிக் காலத்தில் செயப்பிரகாசு நாராயணன் தலைமையில் நடந்த முழுப் புரட்சி இயக்கத்தில் இணைந்து வினையாற்றினார். பிகார் அரசியல் தலைவர்களான [[லாலு பிரசாத் யாதவ்]], ராம் விலாசு பாசுவான், நிதிசு குமார் போன்றோரின் ஆசானாக கர்ப்பூரி தாக்கூர் மதிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.1991 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் நாளில் நடுவண் அரசு இவர் நினைவைப் போற்றும் வகையில் சிறப்பு அஞ்சல்தலையை வெளியிட்டது.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

23:33, 1 பெப்பிரவரி 2015 இல் நிலவும் திருத்தம்

கர்ப்பூரி தாக்கூர்
பிகார் முதலமைச்சர்களின் பட்டியல்
முதல்முறை
பதவியில்
திசம்பர், 1970 – ஜூன், 1971
முன்னையவர்தரோகா பிரசாத் ராய்
பின்னவர்போலா பாஸ்வான் சாஸ்திரி
இரண்டாவது முறை
பதவியில்
திசம்பர், 1977 – ஏப்ரல், 1979
முன்னையவர்ஜகநாத் மிஸ்ரா
பின்னவர்ராம் சுந்தர் தாஸ்
துணை முதலமைச்சர், பிகார்
பதவியில்
மார்ச் 5, 1967 – ஜனவரி 31, 1968
முதலமைச்சர்மகாமயா பிரசாத் சின்ஹா
முன்னையவர்இல்லை
பின்னவர்இல்லை
பிகார் கல்வி அமைச்சர்
பதவியில்
மார்ச் 5, 1967 – ஜனவரி 31, 1968
முன்னையவர்சத்யேந்திர நாரயண் சின்ஹா
பின்னவர்சதீஷ் பிரசாத் சிங்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஜனவரி 24, 1924
பிட்டௌன்ஜியா, (தற்பொழுது கர்ப்பூரி கிராமம்), சமஸ்திபுரி மாவட்டம். பிகார், பிரித்தானிய இந்தியா
இறப்புபெப்ரவரி 17, 1988
அரசியல் கட்சிசோசியலிசக் கட்சி, பாரதிய கிராந்தி தளம், ஜனதாக் கட்சி
வேலைஅரசியல்வாதி

கர்ப்பூரி தாக்கூர் (சனவரி 24, 1924--பிப்பிரவரி 17, 1988) பிகார் மாநிலத்து முன்னாள் முதல்வர் ஆவார். சம்யுக்த சோசலிசுட் கட்சியின் தலைவராக இருந்தவர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காகவும் தாழ்த்தப்பட்டோருக்காகவும் அரசு அலுவல்கள், கல்வி ஆகியவற்றில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரிச் செயல்பட்டவர்.

இளமைக் காலம்

கர்ப்பூரி தாக்கூர் பிகார் மாநிலத்தில் சமசுதிப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றுரில் பிறந்தார். மாணவப் பருவத்திலேயே 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் கலந்து கொண்டார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டதால் 26 மாதங்கள் சிறையில் இருந்தார். கல்விக்குப் பின் ஒரு சிற்றுர்ப் பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார்.

போராட்டங்கள்

1960 ஆம் ஆண்டில் அஞ்சல் தொலைவரித் துறை ஊழியர்கள் நடத்திய வேலை நிறுத்தத்தில் முன்னின்று போராடியதால் சிறைக்குச் சென்றார். டெல்கோ குழுமத் தொழிலாளர் போராட்டத்தில் 28 நாள்கள் உண்ணா நோன்பு இருந்து கலந்து கொண்டார்.

அரசியல் பணி

1970 ஆம் ஆண்டின் இறுதியில் கர்ப்பூரி தாக்கூர் பிகார் முதல் அமைச்சர் ஆனார். இரண்டாம் முறையாக 1977 இல் மீண்டும் பிகார் முதலமைச்சர் ஆனார். பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்குக் கல்வியில் 12 விழுக்காடு ஒதுக்கீடு செய்தார். கட்டாய ஆங்கில வழிக் கல்வியை அகற்றி மாநில மொழியான இந்தியைக் கொண்டு வந்தார். லோகத் தளக் கட்சியின் சார்பில் மண்டல்குழுப் பரிந்துரைகளை நடை முறைப்படுத்துவதற்குத் தொடர்ந்து போராடினார். மது விலக்கை அமுல் படுத்தினார். நெருக்கடிக் காலத்தில் செயப்பிரகாசு நாராயணன் தலைமையில் நடந்த முழுப் புரட்சி இயக்கத்தில் இணைந்து வினையாற்றினார். பிகார் அரசியல் தலைவர்களான லாலு பிரசாத் யாதவ், ராம் விலாசு பாசுவான், நிதிசு குமார் போன்றோரின் ஆசானாக கர்ப்பூரி தாக்கூர் மதிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.1991 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் நாளில் நடுவண் அரசு இவர் நினைவைப் போற்றும் வகையில் சிறப்பு அஞ்சல்தலையை வெளியிட்டது.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்ப்பூரி_தாக்கூர்&oldid=1800674" இலிருந்து மீள்விக்கப்பட்டது