ஏழு தலைமுறைகள் (புதினம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 53: வரிசை 53:


[[பகுப்பு:ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள்]]
[[பகுப்பு:புதினங்கள்]]

15:50, 5 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்

ஏழு தலைமுறைகள்
ஆங்கிலப் பதிப்பின் முதல் அட்டைப்படம்
நூலாசிரியர்அலெக்ஸ் ஹேலி
மொழிபெயர்ப்பாளர்ஏ.ஜி.எத்திராஜீலு
நாடுஐக்கிய அமெரிக்க நாடுகள்
மொழிதமிழ் மொழிபெயர்ப்பு
வகைபுதினம்
வெளியீட்டாளர்சவுத் விஷன் (வெளியீட்டகம்)
வெளியிடப்பட்ட நாள்
தமிழில் 2001
ஊடக வகைஅச்சு
பக்கங்கள்320 பக்கங்கள்
OCLC2188350
LC வகைE185.97.H24 A33

ஏழு தலைமுறைகள் ஒரு புதினம் அலெக்ஸ் ஹேலி என்பவரால் ஆங்கிலத்தில் (Roots: The Saga of an American Family) 1976 ஆம் ஆண்டு எழுதி வெளியானது. இது தமிழில் 2001 ஆம் ஆண்டு ஏ.ஜி.எத்திராஜீலு என்பவரால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியானது. "குண்ட்டா"வின் பிறப்பில் இருந்து தொடங்குகிறது. 1750- ஆம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்காவில் காம்பியா நாட்டிலுள்ள ஜப்பூர் கிராமம்தான் குண்ட்டா பிறந்த ஊர். அவனுக்குப் பெயர் சூட்டுவதிலிருந்து குண்ட்டா பருவ வயது பயிற்சியை முடிக்கும் வரையிலான புதினத்தின் ஒவ்வொரு அடியும் அம்மக்களின் உழைப்பை, வாழக்கையை, உறவு முறைகளை, இயற்கை பற்றிய அறிவு வளர்ச்சியை, நம்பிக்கையைக் கோர்வையாக எடுத்துச் சொல்கிறது.

உள்ளடக்கம்

அமெரிக்கா வந்தவுடன் ஒரு முதலாளியிடம் விற்கப்படுகிறார் குண்ட்டா, அதற்கு பின் அவர் பரம்பரை எப்படி வாழ்ந்தார்கள். குண்ட்டா எத்தனை முறை தப்பினார், எத்தனை முறை மாட்டிக் கொண்டார். உள் இருந்து கொண்டே எப்படி போராடினார். அவருடைய காதல், வாழ்வு முறை, மகள், பேரன் என்று தலைமுறை தலைமுறையாக அடிமையாக இருந்தவர்கள் எப்படி விடுதலை ஆனார்கள் என்பதை ஆழ்ந்த வலி மற்றும் மௌனத்துடன் பதிவு செய்கிறது. தன் இனம் வரலாறு தெரிய வேண்டும் என்பதற்காய் குண்ட்டா தன் பாட்டன் முப்பாட்டனின் கதைகளை மகளுக்கு சொல்கிறார். மகள் தன் மகனுக்கு சொல்ல, இப்படி பரம்பரை பரம்பரையாய் அவர்கள் தன் முன்னோர்களின் வாழ்க்கையை தனது அடுத்த தலைமுறையுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். புதினத்தின் சிறப்பியல்பு கடைசி தலைமுறையில் ஆசிரியர் தோன்றுகிறார். அவரின் மூதாதையரே குண்ட்டா? அவரின் கதை கேட்டு குண்ட்டா பிறந்த இடத்திற்கு செல்கிறார் ஆசிரியர். இடத்தை தேடி கண்டுபிடித்து, அம்மக்களை தன் சொந்த மக்களை பார்க்கும் விதமாக எழுதியிருக்கிறார் அலெக்ஸ் ஹேலி. [1]

புதினத்தின் கதாப்பாத்திரங்கள்

  • குண்ட்டா
  • ஜான் வாலர்
  • டாக்டர் வில்லியம் வாலர்
  • பெல் வாலர்
  • கிஸ்சி வாலர்
  • மிஸ்ஸி அன்னி
  • Tom Lea – slave owner in North Carolina to whom Kizzy is ஜார்ஜ் என்றழைக்கப்படுவர்
  • ஜார்ஜ் லியா – டாம் லியா மற்றும் கிஸ்சியின் மகன், சிக்கன் he is called "Chicken George"
  • மாடில்டா
  • டாம் முர்ரே
  • சிந்தியா
  • பெர்த்தல – சிந்தியாவின் குழந்தைகளில் ஒருவர்; அலெக்ஸ் ஹேலியின் அம்மா
  • சிமோன் அலெஸாண்டர் ஹேலி – ஆசிரியர் மற்றும் பெர்த்தாவின் கணவர்; அலெக்ஸ் ஹேலியின் அப்பா
  • அலெக்ஸ் ஹேலி – புத்தகத்தின் ஆசிரியர் [2]

ஹேலி புலிட்சர் பரிசை 1977 ஆம் ஆண்டு பெற்றார். [3]

ஆங்கில மூலநூலின் வெளியீட்டு விபரம்

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏழு_தலைமுறைகள்_(புதினம்)&oldid=1781318" இலிருந்து மீள்விக்கப்பட்டது