பரப்புரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1: வரிசை 1:
'''பரப்புரை''' அல்லது '''பிரச்சாரம்''' (Propaganda) என்பது ஒரு கருத்தை அதைப்பற்றி அறியாதவர்களுக்காக, விரித்தும் தொகுத்தும் அவர்களும் பற்றுக் கொண்டு ஏற்குமாறு கருத்தைப் பரப்பும் ஒரு செயல்முறை ஆகும். சில நேரங்களில் இவை ஓர் உள்நோக்குடன் ஒரு சார்புப் பார்வையை நிலைநிறுத்த முயலும் கருத்து பரப்பு முறையாகவும் இருக்கும். பரப்புரை எதிர், மாற்று கருத்து உண்மைகளை மறைத்தோ புறக்கணித்தோ கூறுவதும் உண்டு. எதிர், மாற்று கருத்துக்களை கண்டு கொண்டாலும், அவற்றின் முழு வலுவை முன் வைக்காமல், தாங்கள் கொண்ட கருத்துக்கு வலுவூட்டுவது. பரப்புரை தன் கருத்தை வலுவாகக் காட்டி, நல்லதாகக் காட்டுவது. மிகவும் ஒருசார்புப் பரப்புரைகள் பிழையான கருத்தைக்கூட முன்னிறுத்த முயலும். கேட்பவர் அலசி தன்னால் ஒரு முடிவை எடுக்க விடாமல் தங்களுடைய முடிவே சரி என்ற வகையில் வாதிடும்.
'''பரப்புரை''' அல்லது '''பிரச்சாரம்''' (Propaganda) என்பது ஒரு கருத்தை அதைப்பற்றி அறியாதவர்களுக்காக, விரித்தும் தொகுத்தும் அவர்களும் பற்றுக் கொண்டு ஏற்குமாறு கருத்தைப் பரப்பும் ஒரு செயல்முறை ஆகும். சில நேரங்களில் இவை ஓர் உள்நோக்குடன் ஒரு சார்புப் பார்வையை நிலைநிறுத்த முயலும் கருத்து பரப்பு முறையாகவும் இருக்கும். பரப்புரை எதிர், மாற்று கருத்து உண்மைகளை மறைத்தோ புறக்கணித்தோ கூறுவதும் உண்டு. எதிர், மாற்று கருத்துக்களை கண்டு கொண்டாலும், அவற்றின் முழு வலுவை முன் வைக்காமல், தாங்கள் கொண்ட கருத்துக்கு வலுவூட்டுவது.
பரப்புரை தன் கருத்தை வலுவாகக் காட்டி, நல்லதாகக் காட்டுவது. மிகவும் ஒருசார்புப் பரப்புரைகள் பிழையான கருத்தைக்கூட முன்னிறுத்த முயலும். கேட்பவர் அலசி தன்னால் ஒரு முடிவை எடுக்க விடாமல் தங்களுடைய முடிவே சரி என்ற வகையில் வாதிடும்.


பரப்புரைக்கு ஆளாவோரில் ஒரு சிலரால் உண்மையைப் பகுத்துணர முடிந்தாலும் பெரும்பாலானோர் பரப்புரை எவ்வாறு தங்களை மாற்றியமைக்கின்றது என்பதை உணர்வதில்லை.<ref>http://changingminds.org/techniques/propaganda/propaganda_history.htm</ref>
பரப்புரைக்கு ஆளாவோரில் ஒரு சிலரால் உண்மையைப் பகுத்துணர முடிந்தாலும் பெரும்பாலானோர் பரப்புரை எவ்வாறு தங்களை மாற்றியமைக்கின்றது என்பதை உணர்வதில்லை.<ref>http://changingminds.org/techniques/propaganda/propaganda_history.htm</ref>

15:40, 14 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

பரப்புரை அல்லது பிரச்சாரம் (Propaganda) என்பது ஒரு கருத்தை அதைப்பற்றி அறியாதவர்களுக்காக, விரித்தும் தொகுத்தும் அவர்களும் பற்றுக் கொண்டு ஏற்குமாறு கருத்தைப் பரப்பும் ஒரு செயல்முறை ஆகும். சில நேரங்களில் இவை ஓர் உள்நோக்குடன் ஒரு சார்புப் பார்வையை நிலைநிறுத்த முயலும் கருத்து பரப்பு முறையாகவும் இருக்கும். பரப்புரை எதிர், மாற்று கருத்து உண்மைகளை மறைத்தோ புறக்கணித்தோ கூறுவதும் உண்டு. எதிர், மாற்று கருத்துக்களை கண்டு கொண்டாலும், அவற்றின் முழு வலுவை முன் வைக்காமல், தாங்கள் கொண்ட கருத்துக்கு வலுவூட்டுவது.

பரப்புரை தன் கருத்தை வலுவாகக் காட்டி, நல்லதாகக் காட்டுவது. மிகவும் ஒருசார்புப் பரப்புரைகள் பிழையான கருத்தைக்கூட முன்னிறுத்த முயலும். கேட்பவர் அலசி தன்னால் ஒரு முடிவை எடுக்க விடாமல் தங்களுடைய முடிவே சரி என்ற வகையில் வாதிடும்.

பரப்புரைக்கு ஆளாவோரில் ஒரு சிலரால் உண்மையைப் பகுத்துணர முடிந்தாலும் பெரும்பாலானோர் பரப்புரை எவ்வாறு தங்களை மாற்றியமைக்கின்றது என்பதை உணர்வதில்லை.[1]

ஆங்கில வார்த்தையில் மூலம்

இதன் சமானமான ஆங்கில வார்த்தை 1622ஆம் ஆண்டு போப் பதினைந்தாம் கிரிகோரியால் உருவாக்கப்பட்ட கத்தோலிக்க சர்ச்சின் நிர்வாக அமைப்பிலிருந்து உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் நோக்கம் கத்தோலிக்க நம்பிக்கையை கத்தோலிக்க நம்பிக்கையில்லாத நாடுகளில் பரப்புவது.[2][3] 1790களிலிருந்து மற்ற அமைப்புகளுக்கும் இச்சொல் பயன்படுத்தப்படலாயிற்று.

பரப்புரை சாதனங்கள்

சுவரொட்டிகள், புத்தகங்கள், திரைப்படங்கள், வானொலி, திரைக்காட்சிகள்,இணையம்.. என்று பல ஊடகங்களும் பரப்புரை சாதனங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.ஊடகங்கள் (துண்டு பிரச்சாரங்கள், பத்திரிகை, வானொலி, சினிமா, தொலைக்காட்சி, இணையம்), கலைகள் (இலக்கியம், இசை, நாடகம்), கண்காணிப்புக்கள், சட்டங்கள் என பல முனைவுகள் மூலம் பல வித நுணுக்கங்கள் கொண்டு பரப்புரை மேற்க்கொள்ளப்படுகின்றது.

உண்மையும் பரப்புரையும்

உண்மை எத் திசையிலும், எந் நிலைகளிலும், தளத்திலும் உண்மையை நாடி நிற்கும். உண்மையை வெளிப்படுத்த முனைபவர்கள் எதிர் அல்லது பிற கருத்துகளை சுட்டி அவற்றின் தவறுகளை, குறைபாடுகளை விளக்கி தம் நிலை விளக்க முனைவர். உண்மையை கூறுவோர் தம் கருத்தை வரையறுத்து, துல்லியமாக, விபரமாக, தெளிவாக, நேரிடையாக, தகுந்த எடுத்துக்காட்டல்களுடன் சொல்வார்கள். கேட்பவர் கருத்தை விளங்கி முடிவு எடுக்க உதவ முனைவார்கள் அன்றி, மூளைச்சலவை செய்யவோ அல்லது முடிவுகளை கட்டாயப்படுத்தவோ அல்லது சிந்தனையற்ற செயல்பாடுகளை தூண்டவோ முனையமாட்டார்கள்.

பரப்புரையை மேற்கொள்ளுபவர்கள் பரப்புரையின் உட்கருத்தை நம்ப வேண்டிய அவசியம் இல்லை. பரப்புரையின் தந்திரங்களை உபயோகித்து மக்களின் கருத்துக்களை அல்லது செயல்பாடுகளை மாற்றியமைப்பது, நெறிப்படுத்துவது, அல்லது கட்டுப்படுத்துவதே அவர்களின் குறிக்கோள்.

விழிப்புணர்வும் பரப்புரையும்

விழிப்புணர்வு நோக்கி மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் பரப்புரை போல் தோற்றமளித்தாலும் அவை பரப்புரையல்ல. உதாரணமாக எயிட்ஸ் நோக்கிய விழிப்புணர்வு பிரச்சாரம்.

சமயத்தில் பரப்புரை

பரப்புரையின் ஆங்கில சொல்லான புரப்பகான்டா (propaganda) கத்தோலிக்க மதத்தினர் தங்கள் மதத்தை பரப்ப மேற்கொண்ட செயற்பாடுகளில் இருந்தே தோற்றம் பெற்றது. எனவே பரப்புரை சமய நிறுவனங்களின் ஒரு கருவியாக பல காலமாக செயல்படுகின்றது என்பது தெரிகின்றது, "எமது கோயிலில் அம்பாள் அற்புதம் செய்கின்றாள்", "ஆயிரம் கோடி அரிச்சினை செய்து விமோசனம் அடையுங்கள்" போன்றவை சமய பரப்புரைகள். ஒருவரின் சாமியார் அல்லது குரு என்ற புனிதப்படுத்தலுக்காக அவரின் பிறப்பு, பெற்றோர் கண்டுருக்ககூடிய கனவுகள், இயற்கையில் நடந்தேறிய சில சம்பவங்கள் எப்படி புனையப்பட்டு பிம்பமாக்கப் படுகின்றது என்பது சமூகவியலாளர்களால் ஆராயப்பட்ட ஒன்று.[1]

அரசியலில் பரப்புரை

அரசியலில் பரப்புரை மிகவும் திட்டமிட்ட, நுணுக்கமான, விஞ்ஞான முறையில் முதலாம் உலக யுத்தம் முதலே பரவலாக உபயோகிக்கப்படுகின்றது. அமெரிக்கவின் சார்பில் வோல்ரர் லிப்மன் (Walter Lippman), எட்வார்ட் பேர்னேஸ் (Edward Bernays) ஆகியோரால் யேர்மன் அரசுக்கெதிராக உபயோகிக்கப்பட்ட உத்திகளே பின்னர் விரிவடைந்த உளவியல் யுத்த தந்திரங்களுக்கும், வியாபார விளம்பர உத்திகளுக்கும், "மக்கள் தொடர்புதுறை" செயல்பாடுகளுக்கு அடித்தளம் இட்டது [2].

போர்க் காலங்களில் பரப்புரை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

உதாரணம்

ஈராக் மீதான அமெரிக்காவின் போர், எவ்வாறு மக்களின் நாட்டுப்பற்றையும் தீவிரவாதத்திற்கெதிரான கோபத்தையும் தவறான பரப்புரை மூலம் தவறாக வழிநடத்தமுடியும் என்பதற்கு ஓர் உதாரணம்.[4]

விளம்பரங்களில்

விளம்பரங்களில் பரப்புரை என்பது மிகச் சுலபமாகக் காணக்கிடைக்கின்றது. விளம்பரங்கள் எவ்வாறு நமக்குத் தேவையில்லா பொருளைக்கூட விருப்பத்தின் காரணமாக வாங்க வைக்கின்றது என்பது பரப்புரையின் விளைவின் ஒரு அம்சமாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.[5]

உதாரணங்கள்

  • பிரபலமானவர்களைக் கொண்டு ஒரு பொருள் / கருத்து தொடர்பான கருத்துக்களை அவர்கள் கூறுவதுபோல் கூறச்செய்தல். (பெப்சி விளம்பரங்கள்)[6]
  • ஒரு பொருளை மற்றொன்றுடன் சில கருத்துக்களையும்/உண்மைகளையும் தவிர்த்துவிட்டு ஒப்பிடுவதன் மூலம் தவறான மனப்பதிவை ஏற்படுத்துவது. (உதாரணம் : ஆப்பிள் கம்ப்யூட்டரை விண்டோசுடன் ஒப்பிடுவது.)[6]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரப்புரை&oldid=1766440" இலிருந்து மீள்விக்கப்பட்டது