நாடு கடந்த இந்திய அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 61: வரிசை 61:


நேதாஜியின் சுதந்திர அரசுக்கு ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து முதலிய நாடுகள் அங்கீகாரம் அளித்தன. சுதந்திர அரசுக்கென தனியாக இரண்டு வாரங்களில் “ஆசாத் ஹிந்த் பாங்க்” தொடங்கப்பட்டது.<ref>http://www.thevarthalam.com/thevar/?p=265</ref>
நேதாஜியின் சுதந்திர அரசுக்கு ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து முதலிய நாடுகள் அங்கீகாரம் அளித்தன. சுதந்திர அரசுக்கென தனியாக இரண்டு வாரங்களில் “ஆசாத் ஹிந்த் பாங்க்” தொடங்கப்பட்டது.<ref>http://www.thevarthalam.com/thevar/?p=265</ref>

==மேலும் பார்க்க==
* [[சுபாஷ் சந்திர போஸ்]]


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

12:09, 16 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

இந்தக் கட்டுரை இரண்டாம் உலகப் போரின்போது சிங்கப்பூரில் அமைந்த அமைப்பு குறித்தானது. முதல் உலகப்போரின் போது இராசா மகேந்திரப் பிரதாப்பால் அமைக்கப்பட்ட இடைக்கால அரசு குறித்து அறிய இந்திய இடைக்கால அரசு பார்க்கவும்.
சுதந்திர இந்திய இடைக்கால அரசு
आर्ज़ी हुक़ूमत-ए-आज़ाद हिन्द
عارضی حکومت‌ِ آزاد ہند
1943–1945
நாட்டுப்பண்: சுப் சுக் சைன்
நிலைசப்பான் ஆதரவுபெற்ற தற்காலிக அரசு
தலைநகரம்போர்ட் பிளேர் (தற்காலிகம்)
நாடுகடத்தப்பட்ட தலைநகரம்இரங்கூன்
சிங்கப்பூர்
பேசப்படும் மொழிகள்இந்தி
அரசாங்கம்தற்காலிக அரசு
அரசுத் தலைவர் 
• 1943-1945
சுபாசு சந்திர போசு
பிரதமர் 
• 1943-1945
சுபாசு சந்திர போசு
வரலாற்று சகாப்தம்இரண்டாம் உலகப்போர் II
• தொடக்கம்
21 அக்டோபர் 1943
• முடிவு
18 ஆகத்து 1945
நாணயம்ஆசாத் இந்த் ரூபா
ஐ.எசு.ஓ 3166 குறியீடுIN
முந்தையது
பின்னையது
British Raj
British Raj

விடுபட்ட இந்தியாவின் இடைக்கால அரசு (இந்தி: आर्ज़ी हुक़ूमत-ए-आज़ाद हिन्द, உருது: عارضی حکومت‌ِ آزاد ہند, அல்லது ஆசாத் இந்த் அரசு), சுருங்க விடுதலையான இந்தியா[1][2] அல்லது ஆசாத் இந்த், 1943ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் நிறுவப்பட்ட தற்காலிக அரசு ஆகும்.

இரண்டாம் உலகப் போரில் பிரித்தானியப் படைக்கு எதிரான நாடுகளை குறிப்பாக ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் ஆதரவுடன் இந்தியச் சுதந்திரத்தை அடைய விரும்பிய சுபாஷ் சந்திர போஸ் அந்நாடுகளிடம் உதவி கேட்டார். ஜெர்மனி, இத்தாலியின் உதவி கிடைக்காது போகவே, ஜப்பான் செல்ல முடிவு செய்து, போர் காலத்தில் நீர் மூழ்கி கப்பல் மூலம் ஜப்பான் சென்று ராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி கேட்டார். பிரித்தானிய அரசுக்கு எதிராக உருவாகி செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்தை மீள் உருவாக்கம் செய்து அதன் தலைவரானார் சுபாஷ். சுதந்திரத்திற்கு போராடி நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி பயிற்சி அளிக்கப்பட்டது. 1943 அக்டோபர் 21 இல் சிங்கப்பூரில் போஸ், ”ஆசாத் இந்த்” என்ற சுதந்திர அரசு பிரகடனத்தை வெளியிட்டார். டிசம்பர் 29 ந் தேதி அரசின் தலைவராக தேசிய கொடியை ஏற்றினார். அவற்றை ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, சீனா உட்பட 9 நாடுகள் ஆதரித்தன.[3]

பிரதமர் பதவியையும், பிரதம படைத்தளபதி பொறுப்பையும் போஸ் ஏற்றார். பெண்கள் படையின் தளபதியாக தமிழ்ப் பெண்ணான மேஜர் லட்சுமி சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார். சுதந்திர அரசாங்கம் அமைக்கப்பட்ட 2 நாட்களில், பிரிட்டனுக்கும், அமெரிக்காவுக்கும் எதிரான போர்ப்பிரகடனத்தை நேதாஜி வெளியிட்டார்.அரசாங்கத்தையும், ராணுவத்தையும் குறுகிய காலத்தில் வலுப்படுத்தினார். தேசிய அரசாங்கம் போரை நடத்தியதுடன் நில்லாது, பல பள்ளிக்கூடங்களைத் திறந்தது; புதிய நாணயங்களை வெளியிட்டது. பத்திரிகைகளையும் நடத்தியது. சுதந்திர அரசாங்கத்தின் தலைமையகம், முதலில் சிங்கப்பூரில் இருந்து பிறகு ரங்கூனுக்கு மாறியது. இந்த அரசாங்கத்தின் கிளை அலுவலகங்கள், பல்வேறு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அமைக்கப்பட்டன.

நேதாஜியின் சுதந்திர அரசுக்கு ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து முதலிய நாடுகள் அங்கீகாரம் அளித்தன. சுதந்திர அரசுக்கென தனியாக இரண்டு வாரங்களில் “ஆசாத் ஹிந்த் பாங்க்” தொடங்கப்பட்டது.[4]

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. Rudolph, Lloyd I.; Hoeber Rudolph, Susanne (2008). Explaining Indian Democracy: The realm of institutions : state formation and institutional change. Oxford University Press; Original from: University of California Press. பக். 58. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-569365-5, 9780195693652. 
  2. Ghose, Sankar (1975). Political ideas and movements in India. Allied Publishers; Original from: University of Michigan Press. பக். 136. 
  3. https://archive.is/20121218143904/ilanthalirabcd.blogspot.in/2011/10/blog-post.html
  4. http://www.thevarthalam.com/thevar/?p=265

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடு_கடந்த_இந்திய_அரசு&oldid=1755274" இலிருந்து மீள்விக்கப்பட்டது