தஞ்சாவூர் வீரபத்திரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5: வரிசை 5:


==வரலாறு==
==வரலாறு==
முதல் நாயக்க மன்னராகிய செவ்வப்ப நாயக்கர் காலத்தில் தஞ்சைக்கு வந்த [[கோவிந்த தீட்சிதர்]] முதல் மூன்று நாயக்க வேந்தர்களுக்கும் அமைச்சராகவும், ஆசிரியராகவும் [[ஒட்டக்கூத்தர்|ஒட்டக்கூத்தரைப்]] போல மிகப் புகழ் பெற்று விளங்கினார். இவரே வீரபத்திரர் கோயில் எழக் காரணமாக இருந்திருக்கலாம். <ref name="kudavayil"/>
முதல் நாயக்க மன்னராகிய [[செவ்வப்ப|சேவப்ப]] நாயக்கர் காலத்தில் தஞ்சைக்கு வந்த [[கோவிந்த தீட்சிதர்]] முதல் மூன்று நாயக்க வேந்தர்களுக்கும் அமைச்சராகவும், ஆசிரியராகவும் [[ஒட்டக்கூத்தர்|ஒட்டக்கூத்தரைப்]] போல மிகப் புகழ் பெற்று விளங்கினார். இவரே வீரபத்திரர் கோயில் எழக் காரணமாக இருந்திருக்கலாம். <ref name="kudavayil"/>


==இறைவன்==
==இறைவன்==

11:55, 6 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

வீரபத்திரர் கோயில், தஞ்சாவூரில் அமைந்துள்ளது.

அமைவிடம்

நாயக்கர் காலக் கோயில்களுள் வீரபத்திரர் கோயில் குறிப்பிடத்தக்கதாகும். தஞ்சைக் கோட்டையின் கிழக்கு வாயிலுக்கு எதிரில், அகழிக்கு வெளியே அதனையொட்டி அமைந்துள்ள இரண்டு கோயில்களில் தென் புறம் இக்கோயில் உள்ளது. [1]

வரலாறு

முதல் நாயக்க மன்னராகிய சேவப்ப நாயக்கர் காலத்தில் தஞ்சைக்கு வந்த கோவிந்த தீட்சிதர் முதல் மூன்று நாயக்க வேந்தர்களுக்கும் அமைச்சராகவும், ஆசிரியராகவும் ஒட்டக்கூத்தரைப் போல மிகப் புகழ் பெற்று விளங்கினார். இவரே வீரபத்திரர் கோயில் எழக் காரணமாக இருந்திருக்கலாம். [1]

இறைவன்

கோயிலின் கருவறையிலுள்ள சுவாமி வாளையும், கேடயத்தையும் ஏந்தியுள்ளார். இத்திருமேனி கர்நாடகப் பாணியில் அமைந்ததாகும். கும்பகோணம் வீரபத்திரர் கோயிலிலுள்ள திருமேனியும் இதனை ஒத்தே காணப்படுகிறது. [1]

கும்பகோணம் வீரபத்திரர் கோயில்

கோவிந்த தீட்சிதர் கும்பகோணம் மகாமகக் குளத்தின் வட கரையில் வீர சைவ மடத்திற்கு என்னும் மடத்தில் அனந்த கல்யாண மண்டபம் கட்டுவித்ததோடு அங்கு வீரபத்திரர் கோயிலை எடுப்பித்தார். [1]

தாராசுரம் வீரபத்திரர் கோயில்

கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரத்தில் ஐராவதீசுவரர் கோயிலுக்குப் பின்புறம் பட்டீச்சரம் சாலைக்கு மேற்புறம் வீரபத்திரர் கோயில் உள்ளது. இக்கோயிலின் திருச்சுற்று மண்டபத்தின் மேற்குப் பகுதியில் வீரபத்திரரின் கருவறைக்குப் பின்புறம் ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை காணப்படுகின்றது. [2]

அடிக்குறிப்புகள்

  1. 1.0 1.1 1.2 1.3 குடவாயில் பாலசுப்ரமணியன், தஞ்சாவூர், அஞ்சனா பதிப்பகம், தஞ்சாவூர் 613 007, 1997
  2. குடவாயில் பாலசுப்ரமணியன், தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்), சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளை, மஞ்சக்குடி, 2013