சாந்தி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 37: வரிசை 37:


==இவற்றையும் பார்க்கவும்==
==இவற்றையும் பார்க்கவும்==
* [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1965]]
[[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1965]]

[[பகுப்பு:1965 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
[[பகுப்பு:1965 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
[[பகுப்பு:எஸ். எஸ். ராஜேந்திரன் நடித்த திரைப்படங்கள்]]

09:43, 1 நவம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

சாந்தி
இயக்கம்பீம்சிங்
தயாரிப்புஏ. எல். சீனிவாசன்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புசிவாஜி கணேசன்
தேவிகா
வெளியீடுஏப்ரல் 22, 1965
நீளம்4272 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சாந்தி 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தேவிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், தேவிகா, விஜயகுமாரி நடிக்க, ஏ.பீம்சிங் இயக்கத்தில் 1965-ல் ஏ.எல்.எஸ். தயாரித்த படம் 'சாந்தி.' இதில் சிவாஜியும், எஸ்.எஸ்.ராஜேந்திரனும் உயிர் நண்பர்கள். எஸ்.எஸ்.ராஜேந்திரன் வேட்டைக்கு செல்லும்போது இறந்துவிடுவார்.

எஸ்.எஸ்.ஆர். மனைவி விஜயகுமாரிக்கு கண் தெரியாது. கணவன் இறந்த செய்தி தெரிந்தால் அதிர்ச்சி தாங்காமல் விஜயகுமாரி இறந்து விடுவார் என்பதால், சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன்போல் நடிக்க நேரிடுகிறது. கடைசியில் விஜயகுமாரிக்கு கண் பார்வை திரும்பும். சிவாஜிகணேசனை துரோகி என்று நினைப்பார். ஆனால் அவர் உத்தமர் என்பதை பிறகு உணர்ந்து கொள்வார்.

கதையின் மையக்கருத்தை ஏற்க முடியாது என்று கூறி, படத்துக்கு அனுமதி அளிக்க தணிக்கைக் குழு மறுத்தது. படத்தை காமராஜருக்கு போட்டுக் காட்டினார், ஏ.எல்.எஸ். படம் முழுவதையும் பார்த்த காமராஜர், 'படம் நன்றாகதானே இருக்கிறது! இதற்கு ஏன் அனுமதி மறுக்கிறார்கள்?' என்று வியப்புடன் கூறினார். மறு தணிக்கையில், படத்துக்கு அனுமதி கிடைத்தது. படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.

இவற்றையும் பார்க்கவும்

தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1965

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தி_(திரைப்படம்)&oldid=1749153" இலிருந்து மீள்விக்கப்பட்டது