தொம்மாசோ கம்பனெல்லா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19: வரிசை 19:
==ஆக்கங்கள்==
==ஆக்கங்கள்==
27 ஆண்டுகள், பெரும்பாலும் மோசமான சூழ்நிலைகளில் அவர் சிறையில் இருந்தார். எனினும் இக்காலத்திலேயே அவரது முக்கியமான ஆக்கங்கள் பலவற்றைச் சிறையில் இருந்தபடியே எழுதினார். ''இசுப்பெயினின் முடியாட்சி'' (1600), ''அரசியல் சூத்திரங்கள்'' (1601), ''நாத்திகம் வெல்லப்பட்டது'' (1605-1607), ''மெட்டாபிசிக்கா''
27 ஆண்டுகள், பெரும்பாலும் மோசமான சூழ்நிலைகளில் அவர் சிறையில் இருந்தார். எனினும் இக்காலத்திலேயே அவரது முக்கியமான ஆக்கங்கள் பலவற்றைச் சிறையில் இருந்தபடியே எழுதினார். ''இசுப்பெயினின் முடியாட்சி'' (1600), ''அரசியல் சூத்திரங்கள்'' (1601), ''நாத்திகம் வெல்லப்பட்டது'' (1605-1607), ''மெட்டாபிசிக்கா''
(1609-1623), ''தியோலொஜியா'' (1613-1624) என்பவை இவற்றுள் அடங்கும். இவரது மிகப் புகழ்பெற்ற ஆக்கமான ''சூரியனின் நகரம்'' முதலில் 1602ல் இத்தாலிய மொழியிலும், 1623ல் இலத்தீனிலும், 1638ல் பாரிசிலும் வெளியாகியது.
(1609-1623), ''தியோலொஜியா'' (1613-1624) என்பவை இவற்றுள் அடங்கும். இவரது மிகப் புகழ்பெற்ற ஆக்கமான ''[[சூரியனின் நகரம்]]'' முதலில் 1602ல் இத்தாலிய மொழியிலும், 1623ல் இலத்தீனிலும், 1638ல் பாரிசிலும் வெளியாகியது.


== குறிப்புகள் ==
== குறிப்புகள் ==

18:03, 19 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம்

பிரான்சிசுக்கோ கோசா என்பவர் வரைந்த தொம்மாசோ கம்பனல்லாவின் ஓவியம்
இசுட்டிலோவில் தொம்மாசோ கம்பனெல்லாவின் வீடு.
பிளக்கானிக்காவில் உள்ள முன்னாள் டொமினிக்கன் துறவி மடம்.

தொம்மாசோ கம்பனெல்லா (Tommaso Campanella – 5 செப் 1568 – 21 மே 1639), ஒரு இத்தாலிய மெய்யியலாளரும், இறையியலாளரும், சோதிடரும், கவிஞரும் ஆவார். இவருக்கு ஞானஸ்நானத்தின்போது இட்ட பெயர் சியோவன்னி டொமெனிக்கோ கம்பனெல்லா ஆகும்.

வரலாறு

தொடக்க காலம்

இவர், தெற்கு இத்தாலியின் ரெசியோ டி கலபிரியா மாகாணத்தில் உள்ள இசுட்டிக்னானோ என்னும் இடத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே மிகத் திறமை உள்ளவராக விளங்கினார். இவரது தந்தை காலணி தைப்பவர். எழுத்தறிவற்ற ஒரு ஏழை மனிதர். 15 வயதிலேயே கம்பனெல்லா டொமினிக்கன் சபையில் சேர்ந்தார். அப்போது, தாமசு அக்குவைனசின் பெயரைத் தழுவித் தொம்மாசோ என்னும் பெயரை ஏற்றுக்கொண்டார். பின்னர், பல புலமையாளர்களிடம் இறையியல், மெய்யியல் ஆகியவற்றைக் கற்றார்.

பழமைவாத எதிர்ப்பு

தொடக்கத்திலேயே அரிசுட்டாட்டலியப் பழமைவாதத்தில் நம்பிக்கை இழந்த கம்பனல்லா, பெர்னாடினோ தெலெசியோவின் (1509–1588) பட்டறிவியத்தின்பால் கவரப்பட்டார். தெலெசியோ அறிவு என்பது புலன் உணர்வினால் வருவது என்றும் உலகிலுள்ள அனைத்தும் புலன் உணர்வு கொண்டவை என்றும் கற்பித்தார். கம்பனல்லா தனது முதல் ஆக்கமான புலன்கள் விளக்கும் மெய்யியல் (Philosophia sensibus demonstrata) என்னும் நூலை 1592 ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்நூல் தெலெசியோவின் கருத்துக்களை ஆதரித்து எழுதப்பட்டது.

அதிகாரத்தினருடனான முரண்பாடுகள்

நேப்பிள்சில் இவர் சோதிடத்திலும் ஈடுபாடு காட்டினார். சோதிட ஊகங்கள் இவரது எழுத்துக்களில் ஒரு நிலையான அம்சமாகக் காணப்பட்டது. கம்பனெல்லாவின் வழமைக்கு மாறான புறக்கோட்பாட்டு நோக்குகள், குறிப்பாக அரிசுட்டாட்டிலுக்கு எதிரான நோக்கு சமயத் தலைமைகளுடன் இவருக்கு முரண்பாடுகளைத் தோற்றுவித்தது. இவர் 1597 வரை ஒரு துறவி மடத்துக்குள்ளேயே அடைக்கப்பட்டிருந்தார்.

சிறைத் தண்டனை

அங்கிருந்து விடுதலையான பின்னர் கலபிரியாவுக்குத் திரும்பிய அவர்மீது, தனது சொந்த ஊரில் இசுப்பானிய ஆட்சிக்கு எதிராகச் சதி செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டது. இவரது இரண்டு கூட்டாளிகள் இவரைக் காட்டிக்கொடுத்ததன் பேரில் இவரைக் கைது செய்து நேப்பிள்சில் சிறையில் அடைத்தனர். அங்கு அவர் மிகுந்த துன்புறுத்தல்களுக்கு உள்ளானார்.[1] முழுமையாகக் குற்றத்தை ஒப்புக்கொண்டதனால் இவருக்கு மரண தண்டனை கிடைத்திருக்கும். ஆனால் பைத்தியம் போல் நடித்து அதிலிருந்து தப்பினார். ஆனாலும், இவர் மேலும் துன்புறுத்தப்பட்டார். ஊனமுற்று, நோயுற்ற அவருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கினர்.[2][3]

ஆக்கங்கள்

27 ஆண்டுகள், பெரும்பாலும் மோசமான சூழ்நிலைகளில் அவர் சிறையில் இருந்தார். எனினும் இக்காலத்திலேயே அவரது முக்கியமான ஆக்கங்கள் பலவற்றைச் சிறையில் இருந்தபடியே எழுதினார். இசுப்பெயினின் முடியாட்சி (1600), அரசியல் சூத்திரங்கள் (1601), நாத்திகம் வெல்லப்பட்டது (1605-1607), மெட்டாபிசிக்கா (1609-1623), தியோலொஜியா (1613-1624) என்பவை இவற்றுள் அடங்கும். இவரது மிகப் புகழ்பெற்ற ஆக்கமான சூரியனின் நகரம் முதலில் 1602ல் இத்தாலிய மொழியிலும், 1623ல் இலத்தீனிலும், 1638ல் பாரிசிலும் வெளியாகியது.

குறிப்புகள்

  1. C. Dentice di Accadia, Tommaso Campanella, 1921, pp. 43-44 (in Italian)
  2. Tommaso Campanella Biography
  3. Norman Douglas, The Death of Western Culture
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொம்மாசோ_கம்பனெல்லா&oldid=1742752" இலிருந்து மீள்விக்கப்பட்டது