தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
சி Replacing with SVG (File:Flag DMK.jpg → File:Flag DMK.svg) |
||
வரிசை 23: | வரிசை 23: | ||
| image2 = [[File:Flag DMK. |
| image2 = [[File:Flag DMK.svg|120px]] |
||
| leader2 = [[மு. கருணாநிதி]] |
| leader2 = [[மு. கருணாநிதி]] |
||
| leaders_seat2 = [[அண்ணா நகர் (சட்டமன்றத் தொகுதி)|அண்ணா நகர்]] |
| leaders_seat2 = [[அண்ணா நகர் (சட்டமன்றத் தொகுதி)|அண்ணா நகர்]] |
13:54, 17 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம்
| |||||||||||||||||||||||||||||||
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 234 இடங்கள் | |||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||
|
தமிழ்நாட்டின் ஏழாவது சட்டமன்றத் தேர்தல் 1980 ஆம் ஆண்டு மே மாதம் நடை பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, எம். ஜி. ராமச்சந்திரன் (எம். ஜி. ஆர்) இரண்டாம் முறையாக தமிழகத்தின் முதல்வரானார். 1987 வரை அவரே தமிழகத்தின் முதல்வராக தொடர்ந்து பதவி வகித்தார்.
தொகுதிகள்
1980 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 45 தனித் தொகுதிகளில் இருந்தும் (தாழ்த்தப்பட்டவருக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டவை) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1]
கட்சிகள்
1977 தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவின் ஆட்சி மூன்றாண்டுகளில் மத்திய அரசால் கலைக்கப்படடது. முந்தைய தேர்தலில் எதிரணியில் இருந்த திமுகவும் இந்திரா காங்கிரசும் இத்தேர்தலில் கூட்டணி அமைத்தன. 1977 நாடாளுமன்றத் தேர்தலில் தோற்ற பிறகு இந்திரா காங்கிரசு பிளவு பட்டது. அர்ஸ் காங்கிரசு, காந்தி காமராஜர் காங்கிரசு போன்ற கோஷ்டிகள் காங்கிரசில் இருந்து பிரிந்து தனிக்கட்சிகளாக இத்தேர்தலில் போட்டியிட்டன. 1977 இல் மத்தியில் ஆட்சியை பிடித்த ஜனதா பார்ட்டி இரண்டு மூன்று துண்டுகளாக பிரிந்திருந்தது. மொரார்ஜி தேசாயின் ஜனதா கட்சி, எஸ். ஆர். பொம்மையின் ஜனதா கட்சி, சரண் சிங்கின் ஜனதா கட்சி என மூன்று ஜனதா கட்சிப்பிரிவுகள் தமிழகத்தில் இருந்தன. மேற்குறிப்பிட்ட கட்சிகளைத் தவிர முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஃபார்வார்ட் ப்ளாக் போன்ற கட்சிகளும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டன.[2]
அரசியல் நிலவரம்
1980 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் மத்தியில் ஆண்ட சரண் சிங்கின் ஜனதா கட்சி ஆட்சி கவிழ்ந்து புதிய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடத்தப்பட்டது. ஜனதா கட்சித் தலைவர்களுள் ஒருவரான பிஜு பட்நாயக் அதிமுக-திமுக இடையே சமரசம் ஏற்பட முயற்சிகளை மேற்கொண்டார். இந்திரா காந்திக்கு எதிராக எம். ஜி. ஆரையும் கருணாநிதியையும் ஓரணியில் திரட்ட முயன்றார். ஆனால் அவரது முயற்சி தோல்வியடைந்தது. திமுக இந்திரா காங்கிரசுடனும் அதிமுக ஜனதாக் கட்சியுடனும் கூட்டணி அமைத்துக் கொண்டன. 1980 நாடாளுமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரசு-திமுக கூட்டணி அதிமுக-ஜனதா கட்சி கூட்டணியை வென்று பெருவாரியான நாடாளுமன்ற இடங்களை பிடித்தது. மக்களவையில் தனிப்பெரும்பானமை பெற்று இந்திரா காந்தி [[இந்தியப் பிரதமர்|இந்தியாவின் பிரதமரானார். நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியினால் உற்சாகம் கொண்ட இந்திரா காங்கிரசு-திமுக கூட்டணியினர் அதே போல சட்டமன்றத் தேர்தலிலும் எளிதில் வெல்லலாம் என்று கணக்கிட்டனர். இந்திரா காந்தியின் மத்திய அரசைக் கொண்டு அதிமுக ஆட்சியை கலைத்தனர். மே 1980 இல் புதிய சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்தப்பட்டது. அதிமுக தலைமை வகித்த கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காந்தி காமராஜ் காங்கிரசு, அர்ஸ் காங்கிரசு, ஃபார்வார்ட் ப்ளாக் ஆகிய கட்சிகள் அங்கம் வகித்தன. திமுகவும் இந்திரா காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஜனதா கட்சியின் பிரிவுகள் அனைத்தும் தனித்து போட்டியிட்டன.[3][4]
தேர்தல் முடிவுகள்
தேர்தல் தேதி – 28 மே 1980; மொத்தம் 61.58 % வாக்குகள் பதிவாகின.[5][6]
கூட்டணி | கட்சி | வாக்குகள் | வாக்கு % | போட்டியிட்ட இடங்கள் | வென்ற இடங்கள் | மாற்றம் |
---|---|---|---|---|---|---|
அதிமுக இடங்கள்: 162 மாற்றம்: +14 வாக்குகள்: 9,328,839 வாக்கு %: 48.92% |
அதிமுக | 7,303,010 | 38.75% | 177 | 129 | -1 |
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் | 596,406 | 3.16% | 16 | 11 | -1 | |
இந்திய கம்யூனிஸ்ட் | 501,032 | 2.66% | 15 | 9 | +4 | |
காந்தி காமராஜ் காங்கிரசு | 322,440 | 1.71% | 10 | 6 | +6 | |
ஃபார்வார்ட் ப்ளாக் | 65,536 | 0.35% | 2 | 1 | — | |
அர்ஸ் காங்கிரசு | 52,119 | 0.28% | 3 | 0 | — | |
சுயேட்சைகள் | 488,296 | 2.59% | 13 | 6 | +6 | |
திமுக இடங்கள்: 69 மாற்றம்: -6 வாக்குகள்: 8,371,718 வாக்கு %: 44.43% |
திமுக | 4,164,389 | 22.10% | 112 | 37 | -11 |
இந்திரா காங்கிரசு | 3,941,900 | 20.92% | 114 | 31 | +4 | |
சுயேட்சைகள் | 265,429 | 1.41% | 8 | 1 | +1 | |
மற்றவர்கள் இடங்கள்: 3 மாற்றம்: -8 |
ஜனதா கட்சி (ஜே.பி) | 522,641 | 2.77% | 95 | 2 | -8 |
சுயேட்சைகள் | 598,897 | 3.18% | 446 | 1 | — | |
ஜனதா கட்சி | 2,335 | 0.01% | 1 | 0 | — | |
ஜனதா கட்சி (பொம்மை) | 762 | 0.00% | 3 | 0 | — | |
மொத்தம் | 13 கட்சிகள் | 18,845,006 | 100% | — | 234 | — |
ஆட்சி அமைப்பு
அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. எம். ஜி. ஆர் மீண்டும் தமிழகத்தின் முதல்வரானார். 1987 வரை அவரே தமிழக முதல்வராகப் பணியாற்றினார்.
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ "The State Legislature - Origin and Evolution". Tamil Nadu Government. பார்க்கப்பட்ட நாள் 27 November 2009.
- ↑ "Moment of Truth for MGR". Economic and Political Weekly (Economic and Political Weekly) 15 (4): 141–142. 26 January 1980. http://www.jstor.org/pss/4368350. பார்த்த நாள்: 15 February 2010.
- ↑ G. Palanithurai (June 1991). Role Perception of the Legislators: A Case Study of Tamil Nadu. Stosius Inc/Advent Books Division. பக். 26–27. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8122002277.
- ↑ Attar Chand (1988). M G Ramachandran: My Blood Brother. Gian Publishing House. பக். 7.
- ↑ 1980 Tamil Nadu Election Results, Election Commission of India accessed April 19, 2009
- ↑ Keesing's report