விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பரிந்துரைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28: | வரிசை 28: | ||
== இயற்பியல் == |
== இயற்பியல் == |
||
* '''[[தாத்தா முரணிலை]]''' (Grandfather Paradox) என்பது, ஒரு காலப் பயணி காலத்தில் பின்னோக்கி சென்று அவருடைய தாத்தாவின் திருமணத்திற்கு முன்பாகவே தாத்தாவைக் கொலைசெய்ய முயற்சித்தல் என்ற அனுமான சூழ்நிலையாகும் |
|||
==வேதியியல்== |
==வேதியியல்== |
11:02, 22 செப்டெம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்
- பரிந்துரைகளுக்கான தகுதிகள்
- இங்கு பரிந்துரைக்கும் தகவல் தமிழ் விக்கிப்பீடியாவில் ஏதாவது ஒரு கட்டுரையில் இடம் பெற்றிருக்க வேண்டும். குறுங்கட்டுரையாக இருப்பினும் ஏற்றுக் கொள்ளப்படும்.
- பரிந்துரைக்கப்படும் தகவல் எந்தத் தலைப்புடன் (துறையுடன்) தொடர்புடையதோ அந்தத் தலைப்பின் (துறையின்) கீழாக இடம் பெறச் செய்ய வேண்டும்.
- தமிழ்/தமிழர் சார்ந்த தகவல் ஒன்று ஒவ்வொரு வாரமும் இடம் பெறுவதால் அது குறித்த பரிந்துரைக்கு ஒவ்வொரு வாரமும் முக்கியத்துவமளிக்கப்படுகிறது. பிற தலைப்புகளிலான தகவல்கள் காட்சிப்படுத்தப்படுவதில் சிறிது காலதாமதமாகலாம்.
- பரிந்துரைக்கும் தகவல் இதற்கு முன்பாகவே உங்களுக்குத் தெரியுமா? பகுதியில் இடம் பெற்றிருக்கக் கூடாது. எனவே, பரிந்துரைக்கும் தகவல் இதற்கு முன்பு இடம் பெறவில்லை என்பதை உங்களுக்குத் தெரியுமா? காப்பகம் மற்றும் அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தையும் பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.
- பரிந்துரைக்கும் தகவல்கள் மாறுபட்ட செய்திகளைக் கொண்டதாக இருப்பது விரும்பப்படுகிறது. ஒரே செய்தியை அடிப்படையாகக் கொண்டதாக பல்வேறு தகவல்கள் இருக்கும் நிலையில் அதிலிருந்து ஒரு தகவல் மட்டும் காட்சிப்படுத்தப்படும். தொடர்புடைய பிற தகவல்கள் காட்சிப்படுத்தப்படுவதில் அதிகமான காலதாமதம் ஏற்படலாம் அல்லது காட்சிப்படுத்தாமலே விடப்படலாம்.
- பரிந்துரைக்கும் தகவலுக்கான மேற்கோள் அக்கட்டுரையில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
- பரிந்துரைக்கும் தகவலுக்கான படம் முக்கியத்துவம் பெற்றிருப்பின் அதற்கான படத்தையும் பரிந்துரையில் இணைக்கலாம்.
தமிழர், தமிழ் சார்ந்தவை
- தமிழ்நாடு அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சார்பில் 12 மடலங்களில் அடங்கும் 31 தொகுதிகளும் 12000 பக்கங்கள் கொண்ட பேரகரமுதலியாக வெளியிடப் பெற்றுள்ளன. ஆயிற்று
- வலங்கைமான் சங்கரநாராயண சீனிவாச சாஸ்திரிக்கு பிரிட்டனில் 1916 - 1919ல் ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியால் பெருமைக்குரிய "ரைட் ஹானரபில்" என்ற பட்டம் வழங்கப்பட்டது.
சோழப் பேரரசில் புகழ் பெற்றிருந்த ஐந்நூற்றுவர் வணிகக் கழகம் கீழை நாடுகள் பலவற்றிலும் தடம் பதித்திருந்தது.- பெண் விடுதலைப்புலிப் போராளியின் வாழ்க்கை வரலாற்றை விபரிக்கும் முதலாவது ஆங்கிலப் புத்தகம் தமிழ்ப் பெண் புலி ஆகும்.
உயிரியல்/மருத்துவம்
- இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு, 2013: இந்தியாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் புலிகள் கணக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
கணினியியல்
- தடுமாற்றம் என்பது முறைமையொன்றில் ஏற்படும் குறுகிய காலத்திற்கு நீடிக்கும் தவறு ஆகும்.
- கணினியியலில் கரு என்பது இயங்குதளம் ஒன்றின் மிக அடிப்படையான ஒரு மென்பொருளாகும்.
- கணினியிலிருந்து ஓர் அந்துப்பூச்சி எடுக்கப்படுவதைக் கண்ட கிரேசு ஹாப்பர் அதனையொட்டி கணினி நிரல்களில் வழு நீக்கப்படுவதற்கு இன்று பரவலாக பயன்படுத்தப்படும் பூச்சி நீக்கம் எனப் பொருள்படும் டிபக்கிங் என்ற சொல்லை உருவாக்கினார்.
மின்னணுவியல்
- தடமறியும் கழுத்துப் பட்டை (Radio collar) விலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஆராய்ச்சி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
இயற்பியல்
- தாத்தா முரணிலை (Grandfather Paradox) என்பது, ஒரு காலப் பயணி காலத்தில் பின்னோக்கி சென்று அவருடைய தாத்தாவின் திருமணத்திற்கு முன்பாகவே தாத்தாவைக் கொலைசெய்ய முயற்சித்தல் என்ற அனுமான சூழ்நிலையாகும்
வேதியியல்
மொழியியல்
திரைத்துறை
- ஜானி ட்ரை ஙுயென் இசுபைடர் மேன் திரைப்படத்தில் வந்த கிரீன் காப்லின் கதாப்பாத்திரத்தின் மாற்று நடிகர்.
- தமிழ்த் திரையுலகின் முதல் பெண் பாடலாசிரியர் கவிஞர் தாமரை. [சான்று தேவை]
- முதன் முறையாக தமிழ் சினிமாவில் ஸ்டீரியோ முறையில் “ப்ரியா” திரைப்படத்திற்கு இசையமைத்தார் இசைஞானி இளையராஜா.
- இசைஞானி இளையராஜா, இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை நான்கு முறை பெற்றுள்ளார். அதில் சிந்து பைரவி மட்டுமே தமிழ் திரைப்படம்.
- நடிகர் திலிப் குமார் பிலிம்பேர் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற முதல் நடிகர், இவரே பிலிம்பேர் விருதுகள் அந்த வகையில் பன்முறை வாங்கிய சாதனையும் புரிந்துள்ளார்.
சமயம் / மெய்யியல்
- நவ பாசாணத்தினால் கட்டி உருவாக்கப்படும் தெய்வச்சிலைகள் நவக்கிரகத்தின் சக்திகளைப் பெற்றுவிடுகின்றன என்று சித்தர்கள் நம்பினார்கள்.
- பாற்கடலை கடையும் பொழுது தோன்றிய ஆலகால விடம் துரத்த தேவர்கள் கையிலாயத்தினை சுற்றிய விதத்தினை சோம சூக்தப் பிரதட்சணம் என்கின்றனர்.
- சிவபெருமானுடைய நூற்றியெட்டு பெயர்கள் சிவாஷ்டோத்தர சத நாமாவளி எனும் தொகுப்பாகவும், சிவபெருமானுடைய ஆயிரம் பெயர்களை கொண்டது சிவ சஹஸ்ரநாமம் எனும் தொகுப்பாகவும் அமைந்துள்ளது.
- மேற்படி செய்தியில் சிவப்பு இணைப்பு உள்ளது. சஹஸ்ரநாமம் என்பதை சகஸ்ரநாமம் என எழுதலாம். தேவையற்ற கிரந்த எழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 09:28, 16 அக்டோபர் 2013 (UTC)
- 1309 முதல் 1378 வரை கத்தோலிக்க திருச்சபையின் ஏழு திருத்தந்தையர்கள் உரோமையில் இல்லாமல், பிரான்சின் அவிஞ்ஞோனிலிருந்து ஆட்சி செய்தனர்.
- ஆசியா கண்டத்திலேயே அதிக கத்தோலிக்க பெருங்கோவில்களைக்கொண்ட நாடு இந்தியாவாகும்.
வானியல்
- செயற்கைக் கோள் தகர்ப்பு ஏவுகணைச் சோதனையை 2007 சனவரி 11 ஆம் நாள் சீனா நடத்தியது.
- பூமியின் தாழ் வட்டப்பாதை என்பது பூமியிலிருந்து மேலே 160 கிலோமீட்டர்கள் முதல் 2,000 கிலோமீட்டர்கள் வரை உள்ள வெளி ஆகும்.
செலுத்து வாகனம் (Launch vehicle) என்பது செயற்கைக் கோள்களை பூமியிலிருந்து எடுத்துச் செல்லும் வாகனம் ஆகும். ஆயிற்று- நெப்டியூன் (Neptune) எனும் கோளுடைய பெயரின் கருத்து கடல்களின் ரோமானியக் கடவுள் என்பதாகும்.
- போபொஸ் துணைக்கோள் ஆனது செவ்வாயின் இரு துணைக்கோள்களில் செவ்வாய்க் கோளுக்கு மிக அண்மித்ததும் மிகப் பெரியதுமான துணைக்கோளாகும்.
- ஒரியன் (விண்மீன் குழாம்) ஆனது வான் மத்திய ரேகையில் அமைந்துள்ளதும் கண்ணால் பார்க்கக்கூடியதுமான ஒரு உடுத்தொகுதி ஆகும். கிரேக்கப் புராணங்களில் கூறப்படும் வேட்டைக்காரனான ஒரியன் என்பவனின் பெயரில் இருந்தே இப்பெயர் இவ்வுடுத்தொகுதிக்கு இடப்பட்டது.
கடுங்குளிர் இயந்திரம் (cryogenic rocket engine) என்பது செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தப்படும் செலுத்து வாகனத்தில் பயன்படுத்தப்படும் இயந்திரம் ஆகும்.
விளையாட்டு
- சதுரங்கம் (Chess) 1500 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட விளையாட்டு ஆகும். இவ்விளையாட்டு ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னரே இந்தியாவில் விளையாடப்பட்டு வந்த சதுரங்கம் என்னும் விளையாட்டிலிருந்தே வளர்ச்சியடைந்தது என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து.
வரலாறு, நாடுகள், அரசியல்
- சில நாடுகளின் சுதந்திர தினம், தேசிய தினம், விடுதலை தினம் போன்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது.
- ஹிரூ ஒனோடா 1944 இல் சப்பானியர்கள் போரில் தோற்ற பின்னரும், அதைப்பற்றிய தகவல் அறியாமல் சுமார் மேலும் 30 ஆண்டுகள் பிலிப்பைன்ஸில் உள்ள காட்டில் ஒளிந்திருந்து சண்டையிட்டார்.
- வானொலியை வடிவமைத்த மார்க்கோனியால் 1931ம் ஆண்டு வத்திக்கான் நகரில் வானொலி நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது.
- 1799 அக்டோபர் 16ம் நாள், கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு, தமிழ்நாடு மாநிலம், மதுரை மாவட்டம் திருமங்கலத்திலுள்ள சார்நிலை நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
- சுடோமு யாமகுச்சி என்பவர் இரண்டாம் உலகப் போரின் போது இரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு வீச்சுகளில் இருந்து உயிர் பிழைத்த ஒரே மனிதர் ஆவார்.
கலைகள்
பரதநாட்டியம்
பறப்பியல்
பிற
- கின்னஸ் உலக சாதனைகள் உலகிலுள்ள பெரிய குழல் விட்டம் உடைய பீரங்கியாக சார் பீரங்கி என்ற பீரங்கியைப் பதிவு செய்துள்ளது.
- ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு வானூர்தி நிலையம் உலகிலுள்ள போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையமாக இருக்கிறது.
- பெல்மேஷ் முகங்கள் என்பது வீட்டின் சுவரிலும் தரையிலும் மனித முகங்கள் தானாகவே தோன்றி தானாகவே மறையும் இந்த நிகழ்வு ஸ்பெயின் நாட்டில் பெல்மேஷ் என்ற கிராமத்தில் நடந்துள்ளது.