ஒப்பாரிப் பாடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 75: வரிசை 75:
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
<references />
<references />
thami thambi nee yurangu

[[படிமம்:Sathees|thumbnail|thoongum paadal]]
[[பகுப்பு:தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள்]]
[[பகுப்பு:தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள்]]

12:44, 18 செப்டெம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்


நாட்டுப்புற
பாடல் வகைகள்
தமிழ் நாட்டார் பாடல்கள்
தாலாட்டுப் பாடல்
கும்மிப் பாடல்
சோபனப் பாடல்
நழுங்குப் பாடல்
வாழ்த்துப் பாடல்
ஒப்பாரிப் பாடல்
விளையாட்டுப் பாடல்
நையாண்டிப் பாடல்
கதைப்பாடல்
காதல் பாடல்
தொழிற்பாடல்
மீனவர் பாடல்
நெற்குத்திப் பாடல்
ஏற்றப் பாடல்
நடவுப் பாடல்

தொகு

ஒப்பாரி தமிழ் நாட்டுப் பாடல் வகைகளில் ஒன்று. கிராமத்து மக்கள் வாழ்க்கையில் இசையானது பின்னிப் பிணைந்து காணப்படுகின்றது. தாய், தந்தை, கணவன், பிள்ளை, உற்றார், உறவினர் எவரேனும் இறந்து விட்டால் ஒருவருடைய உள்ளத்தில் எழுகின்ற துன்பஉணர்வை வெளிக்காட்ட ஒப்பாரி பாடப்படுகிறது. இறந்தவர்களின் வரலாறு பற்றித் தெரியாதவர்கள் அப்பாடல் மூலம் வரலாற்றினை அறிய முடியும். ஒப்பாரிப் பாடல்களின் இசை, விளம்பமும் மத்யமும் கலந்த ஒரு லய அமைப்பில் முகாரி, ஆகிரி முதலான இராகச் சாயலுடன் விளங்குகின்றது.

நாட்டுப்புறங்களில் இழவு வீடுகளில் உறுமி எனப்படும் ஒரு இசைக்கருவி இசைக்கப்படும். இன்னைக்கி உறுமிச் சத்தம் கேட்டதென்ன எனப் புலம்பும் ஒரு ஒப்பாரிப் பாடலில் இருந்து, உறுமி சில வட்டாரங்களில் இறப்புக்கான ஒரு குறியீட்டு இசைக்கருவியாக பயன்படுத்தபட்டமை தெரிய வருகின்றது.

மகனை பலிகொடுத்த தாய்

மகனை இழந்த தாயின் அரற்றல்

1980 பின்னர் ஈழப்போராட்டத்தில் பிள்ளைகளை பறிகொடுத்த தாய்களின் ஒப்பாரி.


நீ போருக்கு போனடத்தை 
போராடி மாண்டாய் ஐயா
மகனே
பாரத்துவக்கெடுத்தோ
உங்களுக்கு
பயந்தவெடி வச்சானோ
உங்களுக்கு பெரிய துவக்கொடுத்தோ
உங்கள பேசாமல் சுட்டெறிந்தான்
மகனார்
உன்ன சந்தியல கண்டடத்தை
உன்னைபெத்த கறுமி
தலைவெடித்துப் போறனையா
மகனார் நீகப்பலில வாராயெண்டோ
நாங்க கடலருகில் காத்திருந்தோம்

மகனே நீ 
இருந்த இடத்தைப் பார்தாலும்
இரு தணலாய் மூளுதையா
நீ படுத்த இடத்தை பார்தாலும் 
பயம் பயமாய் தோன்றுதடா
மகனே
உன்னைப் பெற்ற கறுமி நான்
இங்க உப்பலந்த நாழியைப்போல்
நீ இல்லாம
நாள்தோறும் உக்கிறனே

[1]

தாயாரின் ஒப்பாரி

பொன்னான மேனியிலே - ஒரு
பொல்லாத நோய் வந்ததென்ன
தங்கத் திருமேனியிலே - ஒரு
தகாத நோய் வந்ததென்ன...

மனைவியின் ஒப்பாரி

ஆலமரபோல அன்னாந்து நிப்பேனு 
நான் ஒய்யாரமா வந்தேனே 
இப்ப நீ பட்ட மரம்போல
பட்டு போயிட்டையே.

பொட்டு இல்ல பூவில்லை
பூச மஞ்சலும் இல்ல
நான் கட்டன ராசாவே 
என்ன விட்டுத்தான் போனிங்க.

பட்டு இல்லை தங்கம் இல்லை
பரிமார பந்தல் இல்ல
படையெடுது வந்த ராசா
பாதியியில போரிங்க்கலே

நான் முன்னே போரேன்
நீங்க பின்னே வாருங்கோ
என சொல்லிட்டு 
இடம்பிடிக்கப் போயிதங்களா.

நான் காக்காவாட்டும் கத்தரனே,
உங்க காதுக்கு கேக்கலையா
கொண்டுவந்த ராசாவே 
உங்களுக்கு காதும் கேக்கலையா.

மேற்கோள்கள்

  1. அம்மன்கிளி முருகதாஸ் (தொகுத்தது). 2007. இலங்கைத் தமிழிரிடையே வாய்மொழி இலக்கியம். கொழும்பு: குமரன் புத்தக இல்லம். பக்கங்கள் 51 - 52

thami thambi nee yurangu

படிமம்:Sathees
thoongum paadal
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒப்பாரிப்_பாடல்&oldid=1725191" இலிருந்து மீள்விக்கப்பட்டது