அக்னி தேவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11: வரிசை 11:
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
<references/>
<references/>

[[பகுப்பு:இந்துக் கடவுள்கள்]]

08:26, 2 செப்டெம்பர் 2014 இல் நிலவும் திருத்தம்

அக்கினி வேதகாலத்தில் வழிபடப்பட்ட இந்துக் கடவுளர்களுள் ஒருவன். மண்ணுக்குரிய கடவுளாகப் போற்றப்பட்டான். .ருக்கு வேதத்தில் இந்திரனுக்கு அடுத்து அதிக பாடல்களில் போற்றப்படுபவன். வேதப்பாடல்களில் இருநூறு வரையான பாடல்கள் அக்கினியைப் போற்றுகின்றன. அரணிக்கட்டைகளே இவனது உறைவிடம் என்றும் பிறந்ததும் தனது தாய் தந்தையரை விட்டு நீங்கி விடுவான் என்றும் கூறப்படுகின்றான். ஆயிரம் நாக்குகள் கொண்டவன் என்றும் செந்நிற மேனி உடையவன் என்றும் வர்ணிக்கப்படுகின்றான். வேள்விகளின் போது இடப்படுகின்ற ஆகுதிப் பொருட்களை தேவர்களிடம் கொண்டு சேர்ப்பிப்பவனாக விளங்குவதால் இவன் புரோகிதன் என்றும் அழைக்கப்பட்டான்.

பதினெண் புராணங்களில் ஒன்றான அக்கினி புராணம் அக்கினி தெய்வத்திற்கு முதன்மையளிக்கின்றது. அட்டதிக்கு பாலகர்களில் தென்கிழக்குத் திசைக்கு உரியவனாக இடம்பெறுகின்றான்.

கதைகள்

இதிகாசங்களிலும், புராணங்களிலும் அக்கினியோடு தொடர்புடைய பல்வேறு கதைகள் இடம்பெறுகின்றன. கந்தப்பெருமானின் தோற்றம், தேவி பாகவதம் கூறும் 'மாயாசீதை' கதை முதலானவை குறிப்பிடத்தக்கன.

வர்ணனை

அக்கினி மூன்று தலை, நான்கு அல்லது ஏழு கை, ஏழு நாக்கு என்பன கொண்டவனாகவும், ஆட்டுக்கடா வாகனம் உடையவனாகவும், தீச்சுவாலையுடன் கூடிய வேலினை கொண்டவனாகவும் சித்தரிக்கப்படுகின்றான். பளபளப்பான குதிரைகள் பூட்டிய ஒளிமயமான தேரானது ஏழு காற்றுக்களான ஏழு சக்கரங்களுடன் அமைந்தது. பொன்மயமான கேசமும் சிவந்த உடலுறுப்புக்களையுமுடைய சாரதியால் செலுத்தப்படுகின்றது.[1]

மேற்கோள்கள்

  1. பேராசிரியர்.பொ.பூலோகசிங்கம். (1990). இந்துக் கலைக் களஞ்சியம் பகுதி - 1 (பக். 1). கொழும்பு: இந்து சமய இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்னி_தேவன்&oldid=1717015" இலிருந்து மீள்விக்கப்பட்டது