பத்மினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎நடித்த திரைப்படங்கள்: *விரிவாக்கம்*
வரிசை 53: வரிசை 53:
* [[வியட்நாம் வீடு]]
* [[வியட்நாம் வீடு]]
* [[ஏழை படும் பாடு]]
* [[ஏழை படும் பாடு]]
* [[சம்பூர்ண ராமாயணம்]]
* [[செந்தாமரை (திரைப்படம்)|செந்தாமரை]]
* [[தூக்குத் தூக்கி (திரைப்படம், 1954)|தூக்குத் தூக்கி]]
* [[ராஜா ராணி (1956 திரைப்படம்)|ராஜா ராணி]]
* [[ராணி சம்யுக்தா]]
* [[வஞ்சிக்கோட்டை வாலிபன்]]
* [[வீரபாண்டிய கட்டபொம்மன் (திரைப்படம்)|வீரபாண்டிய கட்டபொம்மன்]]


==குறிப்புகளும் மேற்கோள்களும்==
==குறிப்புகளும் மேற்கோள்களும்==

07:38, 12 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்

பத்மினி ராமச்சந்திரன்
படிமம்:Padmini.jpg
பத்மினி
பிறப்புபத்மினி
(1932-06-12)சூன் 12, 1932 [1]
திருவனந்தபுரம், திருவிதாங்கூர்
இறப்புசெப்டம்பர் 24, 2006(2006-09-24) (அகவை 74)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்நாட்டியப்பேரொளி, பப்பிமா
சமயம்இந்து
பெற்றோர்கோபால பிள்ளை, சரசுவதியம்மாள்
வாழ்க்கைத்
துணை
ராமச்சந்திரன்


பத்மினி (ஜூன் 12, 1932 - செப்டம்பர் 24, 2006) பிரபல இந்திய நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்தும் நாட்டியமாடியும் புகழ் பெற்றவர். நாட்டியப் பேரொளி எனப் பெயர் எடுத்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

திருவனந்தபுரத்தில் பூஜாப்புர பகுதியில் பிறந்த பத்மினியின் பெற்றோர் தங்கப்பன் பிள்ளை, சரஸ்வதி அம்மா ஆவர். இவரது மூத்த சகோதரி லலிதா, இளையவர் ராகினி இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள். இவர்கள் திருவாங்கூர் சகோதரிகள் என அழைக்கப்பட்டனர். இவரது சகோதரர் பெயர் சந்திரசேகர் ஆகும். 1961 ஆம் ஆண்டு, டாக்டர் இராமச்சந்திரன் என்பவரை மணந்தார். பிறகு 1977ல் அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் குடியேறினார். அங்கு பத்மினி ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் என்ற அமைப்பை நிறுவி நாட்டியம் பயிற்றுவித்தார்.

கலையுலக வாழ்வு

பத்மினி, நான்கு வயதில் நாட்டியம் ஆடப்பயின்றார். பத்து வயதில் அரங்கேறி, ஏறக்குறைய 64 ஆண்டுகள் நாட்டிய உலகில் புகழோச்சி நாட்டியப் பேரொளி என அழைக்கப்பட்டார். குச்சிப்புடி, மோகினியாட்டத்திலும் வல்லவர். 17 வயதில் திரையுலகில் புகுந்தார். கல்பனா என்ற இந்தி மொழிப் படத்தில் முதலில் தோன்றிய[2] பத்மினி 250 படங்களுக்கு மேல் நடித்தார். தமிழில் முதன் முதலில் வேதாள உலகம் படத்தில் நாட்டியம் ஆடினார். என். எஸ். கிருஷ்ணன் தயாரித்த "மணமகள்" என்ற படம் தான் அவரது முதல் தமிழ்த் திரைப்படம். தமிழில் சிவாஜி கணேசன், எம். ஜி. இராமச்சந்திரன், ஜெமினி கணேசன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இவர் நடித்திருக்கிறார். சிவாஜியுடன் மட்டும் 59 படங்களில் நடித்துள்ளார். தில்லானா மோகனாம்பாள், இவரின் நடிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சொல்லத்தக்க திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் சிக்கல் சண்முகமாக சிவாஜி கணேசனும், மோகனாங்கியாக பத்மினியும் நடித்தனர். வஞ்சிக்கோட்டை வாலிபனில் பத்மினிக்கும், வைஜயந்திமாலாவிற்கும் நடக்கும் நாட்டியப்போட்டிக் காட்சி புகழ் பெற்றது.

விருதுகள்

இறப்பு

பத்மினி, செப்டம்பர் 24, 2006 அன்று இரவு மாரடைப்பால் சென்னையில் காலமானார்.

நடித்த திரைப்படங்கள்

குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. "Front Page : Queen of Tamil cinema no more". Chennai, India: The Hindu. 2006-09-26. http://www.hindu.com/2006/09/26/stories/2006092607872200.htm. பார்த்த நாள்: 2011-06-07. 
  2. "நாட்டியப் பேரொளி பத்மினி மறைவு" (in தமிழ்). பிபிசி. 26 செப்டம்பர், 2006. http://www.bbc.co.uk/tamil/highlights/story/2006/09/060926_padminiobituary.shtml. பார்த்த நாள்: 2006-11-08. 

வெளி இணைப்புக்கள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மினி&oldid=1705341" இலிருந்து மீள்விக்கப்பட்டது