ஐ. சாந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 58: வரிசை 58:
* ஒரே ஒரு ஊரிலே, இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.
* ஒரே ஒரு ஊரிலே, இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.
* இலங்கை-சோவியத் நட்புறவுக் கழக வெள்ளி விழாக் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு.
* இலங்கை-சோவியத் நட்புறவுக் கழக வெள்ளி விழாக் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு.
{{நூலகம்:எழுத்தாளர்|எழுத்தாளர்=சாந்தன்}}
{{நூலகம்:எழுத்தாளர்|எழுத்தாளர்=சாந்தன்,_ஐயாத்துரை}}


[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]

15:08, 9 ஆகத்து 2014 இல் நிலவும் திருத்தம்

ஐ. சாந்தன்
பிறப்புமானிப்பாய், சுதுமலை
தேசியம்இலங்கைத் தமிழர்
கல்வியாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர், ஆங்கிலமொழி ஆசிரியர், குடிசார் பொறியியலாளர், குடிசார் பொறியியல் விரிவுரையாளர்



ஐயாத்துரை சாந்தன் ஈழத்தின் முக்கியமான சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவர். மொழிபெயர்ப்பிலும் உலக எழுத்தாளர்களைத் தமிழில் அறிமுகம் செய்வதிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறார். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 20 நூல்களை எழுதியிருக்கிறார். இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு

யாழ்ப்பாண மாவட்டம், மானிப்பாய், சுதுமலை என்ற ஊரில் வசித்து வரும் சாந்தன் ஒரு மொறட்டுவை பல்கலைக்கழக குடிசார் பொறியியலாளர் ஆவார். இவர் ஆங்கிலமொழி புலமையுடையவர். ஒரு ஆங்கில இலக்கண முதுகலைமாணி பட்டதாரியும், சிறந்த ஆங்கில ஆசிரியரும் ஆவார்.

கலைப் பங்களிப்பு

இவரது முதலாவது சிறுகதை 1966 ஆம் ஆண்டு புரட்டாதி கலைச்செல்வி இதழில் வெளியானது. மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது இவரது "பார்வைகள்" என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியானது.

இவரது நூல்கள்

  • பார்வை - சிறுகதைகள்- யாழ் இலக்கிய நண்பர் கழக வெளியீடு - 1970
  • கடுகு - குறுங்கதைகள் - 1975
  • ஒரே ஒரு ஊரிலே - சிறு கதைகள் (சாகித்யமண்டலப் பரிசு பெற்றது) 1975
  • ஒட்டுமா - நாவல்- வாதர் வெளியீடு - 1978
  • முறைகள் - சிறுகதைகள் - 1982
  • கிருஷ்ணன் தூது - சிறுகதைகள் - பாளையங் கோட்டை 'இலக்கியத்தேடல்' வெளியீடு- 1982
  • ஒளி சிறந்த நாட்டிலே - சோவியத் பயணநூல் ஈழமுரசு வெளியீடு 1985
  • ஆரைகள் - இரு நெடுங்கதைகள் - ரஜனி பிரசும் 1985
  • இன்னொரு வெண்ணிரவு - சிறுகதைகள்- வெண்புறா வெளியீடு 1988
  • The Sparks - சிறுகதைகளின் தொகுப்பு - 1990
  • In Their Own Worlds
  • The Northern Front -
  • The Whirlwind - நாவல் 2010

விருதுகள்

  • ஒரே ஒரு ஊரிலே, இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.
  • இலங்கை-சோவியத் நட்புறவுக் கழக வெள்ளி விழாக் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு.
தளத்தில்
ஐ. சாந்தன் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ._சாந்தன்&oldid=1703956" இலிருந்து மீள்விக்கப்பட்டது