குக் நீரிணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 41°13′46″S 174°28′59″E / 41.22944°S 174.48306°E / -41.22944; 174.48306
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
வரிசை 38: வரிசை 38:
{{coord|41|13|46|S|174|28|59|E|region:NZ-MBH_type:waterbody_scale:1000000|display=title}}
{{coord|41|13|46|S|174|28|59|E|region:NZ-MBH_type:waterbody_scale:1000000|display=title}}


[[பகுப்பு:நியூசிலாந்தின் புவியியல்]]
[[பகுப்பு:நியூசிலாந்தின் நீரிணைகள்]]

11:08, 4 சூலை 2014 இல் நிலவும் திருத்தம்

குக் நீரிணையின் அமைவிடத்தைக் காட்டும் நியூசிலாந்து நிலவரை
குக் நீரிணையின் அமைவிடத்தைக் காட்டும் நியூசிலாந்து நிலவரை
குக் நீரிணை

குக் நீரிணை (Cook Strait) என்பது நியூசிலாந்தின் வடக்கு, மற்றும் தெற்குத் தீவுகளை இணைக்கும் ஒரு நீரிணை ஆகும். இது வடமேற்கே தாஸ்மான் கடலை தென்கிழக்கேயுள்ள அமைதிப் பெருங்கடலுடன் இணைக்கிறது. இது தலைநகர் வெலிங்டனிற்கு அருகில் அமைந்துள்ளது. இதன் குறுகிய முனையின் அகலம் 22 கிலோமீட்டர்கள் (14 மைல்கள்) ஆகும்.[1] இது உலகின் மிகவும் பாதுகாப்பற்றதும், முன்னறிந்து கூறமுடியாததுமான நீரிலை எனக் கருதப்படுகிறது.[2]

1770 ஆம் ஆண்டில் இங்கு வந்த முதலாவது ஐரோப்பியரான ஜேம்ஸ் குக்கின் நினைவாக இந்நீரிணைக்கு குக் நீரிணை எனப் பெயரிடப்பட்டது. உள்ளூர் மாவோரி மொழியில், ராவுக்காவா அல்லது ராவுக்காவா மோவானா என அழைக்கப்படுகிறது. ராவுக்காவா என்பது "கசப்பான இலைகள்" எனப் பொருள்.[3]

வரலாறு

மாவோரி தொன்மவியலின் படி, குக் நீரிணை குப்பே என்ற மாலுமியால் கண்டுபிடிக்கப்பட்டது. டச்சு நாடுகாண் பயணி ஏபெல் டாஸ்மான் 1642 இல் நியூசிலாந்தைக் கண்ட போது, குக் நீரிணையை அவர் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு பெருங்குடா எனக் கருதினார். இதற்கு அவர் தனது இரண்டு கப்பல்களில் ஒன்றின் நினைவாக சீகாயென் பெருங்குடா (Zeehaen's Bight) எனப் பெயரிட்டார். 1769 இல் ஜேம்சு குக் இதனை ஒரு நீரிணை என நிறுவினார்.

திமிங்கிலங்கள் இதனூடாக வலசை போகும் காரணத்தால் 19ம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் இந்நீரிணை பெருமளவு ஐரோப்பியக் குடியேறிகளைக் கவர்ந்தது.[4][5] 1820கள் முதல் 1960களின் நடுப்பகுதி வரை அரப்பாவா தீவு திமிங்கில வேட்டைக்கு முக்கியமான தளமாக இருந்துள்ளது.[6]

குறிப்புகள்

  1. McLintock, A H, Ed. (1966) Cook Strait from An Encyclopaedia of New Zealand, updated 18-Sep-2007.
  2. McLauchlan, Gordon (Ed.) (1987) New Zealand encyclopedia, Bateman, P. 121. ISBN 978-0-908610-21-1.
  3. ReedPlacenames2002 p 99.
  4. McNab, Robert (1913) A History of Southern New Zealand from 1830 to 1840 Whitcombe and Tombs. ASIN B000881KT4.
  5. Martin, Stephen (2001) The Whales' Journey: Chapter 4: The northerly migration Allen & Unwin. ISBN 978-1-86508-232-5
  6. Perano Homestead

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
குக் நீரிணை
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=குக்_நீரிணை&oldid=1688361" இலிருந்து மீள்விக்கப்பட்டது