மகாபலி சக்கரவர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பயனரால் பலிச்சக்கரவர்த்தி, மகாபலி சக்கரவர்த்தி என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
வரிசை 19: வரிசை 19:
[[பகுப்பு:புராணக் கதைமாந்தர்]]
[[பகுப்பு:புராணக் கதைமாந்தர்]]
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
[[பகுப்பு:இந்து தொன்மவியல்]]
[[பகுப்பு:இந்து சமயம்]]
[[பகுப்பு:புராணங்கள்]]
[[பகுப்பு:புராணங்கள்]]
[[பகுப்பு:சமசுகிருத இலக்கியம்]]
[[பகுப்பு:சமசுகிருத இலக்கியம்]]

11:30, 19 சூன் 2014 இல் நிலவும் திருத்தம்

மகாபலிச் சக்கரவர்த்தியுடன் வாமனர்
வாமனர் மகாபலியின் தலையில் கால்வைத்து அமிழ்த்தும் காட்சியை விவரிக்கும் ஓவியம்

மகாபலி சக்கரவர்த்தி இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் ஓரு அரக்க அரசன். இவர் மாவலி என்றும் அறியப்படுகிறார். பிரகலாதனின் பேரனும், விரோசனனின் மகனும் ஆவான். அரக்க குலத்தில் பிறந்த பலிச்சக்கரவர்த்தியின் கதை வாமண புராணத்தில் அமைந்துள்ளது. பலி அரசனானவுடன் இந்திராதி தேவர்களை வென்று மூவுலகையும் கைப்பற்றினான். இந்திரன், பிரம்மா முதலான தேவர்கள், பலிச்சக்கரவர்த்தியை அடக்க விஷ்ணுவை வேண்டிதன் விளைவாக, விஷ்ணு வாமண அவதாரம் எடுத்து, பலிச்சக்கரவர்த்தியிடம் சென்று தனக்கு நித்திய அக்கினி ஹோத்திரம் செய்ய மூவடி நிலம் தானமாக கேட்டார்.

பலிச்சக்கரவர்த்தி மூவடி நிலத்தை வாமணனுக்கு தாரை வார்த்து தருகையில் அசுரகுல குருவான சுக்கிராச்சாரியார் நீரைத் தாரை வார்த்து தரும் சொம்பின் மூக்கில் வண்டு வடிவத்தில் அமர்ந்து சொம்புலிருந்து நீர் வராமல் தடை செய்தார். இதனை அறிந்த வாமணர் தருப்பைப் புல்லினால் தடையை நீக்கிட, சொம்புலிருந்து நீர் வர தானம் முடிந்தது.

வாமணன் ஓங்கி உயர்ந்து ஒரடியால் மண்ணையும், இரண்டாவது அடியால் விண்ணையும் அளந்தார். மூன்றாவது அடிக்கு நிலம் தருமாறு பலிச்சக்கரவர்த்தியிடம் கேட்க, மூன்றாவது அடியை தன் தலை மீது வைக்குமாறு வேண்டிட, அவ்வாறே செய்த வாமணன், பலிச்சக்கரவர்த்தியை பாதாள உலகத்திற்கு அனுப்பினர்.

மலையாள மண்ணில் மகாபலி

மகாபலி வாமனரிடம் தான் ஒவ்வொரு ஆண்டும் தன் நாட்டு (கேரளா) மக்களை காண வருவதற்கு அனுமதி தரவேண்டும் என்று வரம் கேட்டார், மகாவிஷ்ணுவும் அந்த வரத்தை மாவலிக்கு அளித்தார். இப்படி மகாபலி சக்கரவர்த்தி ஒவ்வொரு ஆண்டும் தன் நாட்டு மக்களை காண வரும் நாளே ஓணம் பண்டிகையாக கேரளா முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முக்கியமாக ஓணம் பண்டிகை மகாபலி வதம் நடந்த இடமான திருக்காட்கரை காட்கரையப்பன் கோயிலில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

கருவி நூல்

  • வாமன புராணம்

வெளி இணைப்புகள்

http://temple.dinamalar.com/news_detail.php?id=11017 வாமன புராணம் பகுதி 1 http://temple.dinamalar.com/news_detail.php?id=11018 வாமன புராணம் பகுதி 2

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாபலி_சக்கரவர்த்தி&oldid=1681095" இலிருந்து மீள்விக்கப்பட்டது