சிரேயா கோசல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 135: வரிசை 135:
[[பகுப்பு: தமிழ்த் திரைப் பாடல்கள்]]
[[பகுப்பு: தமிழ்த் திரைப் பாடல்கள்]]
[[பகுப்பு:நா. முத்துக்குமார் எழுதிய பாடல்கள்]]
[[பகுப்பு:நா. முத்துக்குமார் எழுதிய பாடல்கள்]]
[[பகுப்பு:ஷ்ரேயா கோஷல்]]
[[பகுப்பு:சுரேயா கோசல் பாடிய பாடல்கள்]]

06:09, 11 மே 2014 இல் நிலவும் திருத்தம்


"நினைத்து நினைத்து பார்த்தால்"
பாட்டு by யுவன் சங்கர் ராஜா from the album 7ஜி ரெயின்போ காலனி
வெளியீடு2004
பதிவுசென்னை, இந்தியா
வகைதிரைப் பாடல்
எழுதியவர்நா. முத்துக்குமார்
7ஜி ரெயின்போ காலனி track listing
"நினைத்து நினைத்து பார்த்தால்" "கனா காணும் காலங்கள்"

நினைத்து நினைத்துப் பார்த்தால், என்று தொடங்கும் இந்த திரைப் பாடல், செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி என்ற திரைப்படத்தில் அமைய இருந்த சோகப்பாடல் ஆகும். நா. முத்துக்குமார் எழுதி யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்பாடலை ஷ்ரேயா கோஷல் பாடியுள்ளார்.

ஷ்ரேயா கோஷல்
ஷ்ரேயா கோஷல்

திரைப்படத்தில் பெண் குரலில் பாடும் பாடல் இடம்பெறவில்லை. சில வரிகள் மாற்றத்துடன் ஆண் குரலில் பாடப்பட்ட பாடல் மட்டும் திரைப்படத்தில் அமைந்துள்ளது.[1] பெண் குரலில் இடம்பெறும் பாடலின் வரிகளுக்கும் ஆண் குரலில் இடம்பெறும் பாடலின் வரிகளுக்கும் பெரிதான வித்தியாசம் தெரியாவண்ணமிருக்கும்; ஆனால் கூர்ந்து கவனித்தால் அதிலிருக்கும் முரணும் அழகும் தெரியவரும்.

முக்கியத்துவம்

அமேசான் தளத்தில் வெளியிடப்பட்ட பிரபலமான பாடல்கள்[2] வரிசையில் இப்பாடலும்[3] இடம்பெற்றுள்ளது.

இத்திரைப்படத்தின் பாடல்களுக்காக யுவன் சங்கர் ராஜாவுக்கு, சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம் பேர் விருது கிடைத்தது. மற்ற பாடல்களை விட இப்பாடலே அதிகமாக பிரபலமானது சுமாராக 15969 முறை கேட்கப்பட்டுள்ளது.[4] ஐஎம்டிபி தளத்தில் இத்திரைப்படப் பாடல்கள் வரிசைப்படுத்தியதில் இப்பாடல் முதலிடத்தில் உள்ளது.[5] யுவன் சங்கர் ராஜா ரசிகர்கள் தளத்தில் இப்பாடலுக்கு முதலிடம் கொடுத்துள்ளனர்.[6] இப்பாடல் சிறந்த பாடகியாக ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[7] 2004-ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப் பாடலுக்கு, 2006-ம் ஆண்டு வரை வெளிவந்த வலைத்தளங்களிலும் இப்பாடல் பற்றி நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது.[8]

பாடல் வரிகள்

ஆண் குரல் பெண் குரல்
நினைத்து நினைத்து பார்த்தேன்

நெருங்கி விலகி நடந்தேன்

நினைத்து நினைத்து பார்த்தால்

நெருங்கி அருகில் வருவேன்

உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ

உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்

உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ

உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்

எடுத்துப் படித்து முடிக்கும் முன்னே

எறியும் கடிதம் எதற்கு பெண்ணே

எடுத்துப் படித்து முடிக்கும் முன்னே

எறியும் கடிதம் உனக்குக் கண்ணே

உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ

உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்

உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ

உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்

உன்னைக் கேட்கும் எப்படிச் சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மௌனமா?

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்

நமது கதையை காலமும் சொல்லும்
உதிர்ந்து போன மலரின் வாசமாய்...

தூது பேசும் கொலுசின் ஒலியை

அறைகள் கேட்கும் எப்படிச் சொல்வேன்
உடைந்து போன வளையல் பேசுமா?

தூது பேசும் கொலுசின் ஒலியை

அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும்
உடைந்து போன வளையலின் வண்ணமாய்...

உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்

விரல்கள் இன்று எங்கே?

உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்

விரல்கள் உந்தன் கையில்

தோளில் சாய்ந்து கதைகள் பேச

முகமும் இல்லை இங்கே

தோளில் சாய்ந்து கதைகள் பேச

நமது விதியில் இல்லை

முதல் கனவு முடிந்திடும் முன்னமே

தூக்கம் கலைந்ததே

முதல் கனவு போதுமே காதலா

கண்கள் திறந்திடு

பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்

காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கறையும் வார்த்தை கறையுமா?

பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்

உனது பேச்சில் கலந்தே இருக்கும்
உலகம் அழியும் உருவம் அழியுமா?

பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்

பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா?

பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்

பகலும் இரவும் உன்னுடன் இருக்கும்
உனது விழிகள் என்னை மறக்குமா...

தொடர்ந்து வந்த நிழலும் இங்கே

தீயில் சேர்ந்து போகும்

தொடர்ந்து வந்த நிழலின் பிம்பம்

வந்து வந்து போகும்

திருட்டுப் போன தடயம் பார்த்தும்

நம்பவில்லை நானும்

திருட்டுப் போன தடயம் இருந்தும்

திரும்பி வருவேன் நானும்

ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்

என்றே வாழ்கிறேன்

ஒரு தருணம் என்னடா காதலா

உன்னுள் வாழ்கிறேன்

நினைத்து நினைத்து பார்த்தேன்

இப்பாடலின் முதல் வரியை, நினைத்து நினைத்துப் பார்த்தேன்[9][10] என்ற திரைப்படத்தின் பெயராய் இயக்குநர் மணிகன்டனால் வைக்கப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. Aparna Nath, IANS (June 09, 2004). "7G Rainbow Colony - A cut above other current albums". Indiaglitz. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 14, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "பாப்புலர் சாங்க்ஸ்". அமேசான். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 14, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "நினைத்து நினைத்து பார்த்தால்". அமேசான். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 14, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "ஹங்கமா தளத்தில் 7ஜி ரெயின்போ காலனி பாடல்கள்". பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 14, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "[[7ஜி ரெயின்போ காலனி]] பாடல்கள்". ஐ எம் டி பி. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 14, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help); URL–wikilink conflict (help)
  6. "180 அறிய பாடல்கள்". பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 14, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. "மையம் தளத்தில் [[ஷ்ரேயா கோஷல்]]". பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 14, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help); URL–wikilink conflict (help)
  8. "நினத்து நினைத்து பார்த்தால்". வலைத்தளம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 14, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. "நினைத்து நினைத்து பார்த்தேன்". பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 15, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  10. "Film Review - Ninaithu Ninaithu Parthen". பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 15, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரேயா_கோசல்&oldid=1658365" இலிருந்து மீள்விக்கப்பட்டது