சிங்க்கோ டே மாயோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox holiday | holiday_name = Cinco de Mayo<br>சிங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

07:29, 5 மே 2014 இல் நிலவும் திருத்தம்

Cinco de Mayo
சிங்க்கோ டே மாயோ
கடைபிடிப்போர்மெக்சிக்கர்கள், அமெரிக்கர்கள்
முக்கியத்துவம்புவெப்லா சண்டையில் மெக்சிக்கோ படையினர்களின் வெற்றி; மெக்சிக்க பாரம்பரியத்தையும் பெருமையும் கொண்டாடுவது
அனுசரிப்புகள்மெக்சிக்கோவிலும் அமெரிக்காவிலும் மெக்சிக்க அமெரிக்கப் பண்பாட்டை கொண்டாடுவது
நாள்மே 5
நிகழ்வுஆண்டுதோறும்

சிங்க்கோ டே மாயோ (Cinco de Mayo, எசுப்பானிய மொழியில் "மே 5") அமெரிக்காவிலும் மெக்சிக்கோவிலும் கொண்டாடப்படுகிற விழா. மெக்சிக்கோவின் புவெப்லா மாநிலத்தில் "புவெப்லா சண்டை தினம்" என்று கொண்டாடப்படுகிறது.

1862வில் மே 5ஆம் தேதி அன்று, மெக்சிக்கோ படையினர்களுக்கும் பிரெஞ்சு படையினர்களுக்கும் இடையில் நடந்த புவெப்லா சண்டையை மெக்சிக்கோ வென்றதை நினைவுப்படுவதில் புவெப்லா மாநிலத்தில் சிங்க்கோ டே மாயோ தொடங்கியது. மெக்சிக்க-அமெரிக்கர்கள் தனது மெக்சிக்க பாரம்பரியமும் பெருமையும் சிங்க்கோ டே மாயோ அன்று கொண்டாடுகின்றனர். பல மெக்சிக்க-அமெரிக்கர் வாழிடமாக அமெரிக்காவின் மேற்கில் தொடங்கிய சிங்க்கோ டே மாயோ விழா இன்று அமெரிக்கா முழுவதிலும் கொண்டாடப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்க்கோ_டே_மாயோ&oldid=1655023" இலிருந்து மீள்விக்கப்பட்டது