பகலொளி சேமிப்பு நேரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 13: வரிசை 13:

== செயல்முறை ==
== செயல்முறை ==

{{multiple image|align=right|direction=vertical|width=150|image1=Begin CEST Transparent.png|alt1=கடிகாரப் படம்|caption1=பகலொளி சேமிப்பு நேரம் தொடங்கும் போது கடிகாரம் 02:00-ல் இருந்து 03:00-ஆக மாற்றப் படுகின்றது.|image2=End CEST Transparent.png|alt2=கடிகாரப் படம்|caption2=பகலொளி சேமிப்பு நேரம் முடியும் போது கடிகாரம் 03:00-ல் இருந்து 02:00-ஆக பின்னோக்கி மாற்றப் படுகின்றது.}}

வட அமெரிக்காவில் ஒரு மணி நேர மாற்றம் 02:00 மணிக்கு நடைபெறும் - இளவேனிற்காலத்தில் 01:59 மணிக்கான அடுத்த நிமிடத்தில் நேரம் 03:00 DST-ஆக மாற்றப் படும். அன்றைய நாளுக்கு 23 மணி நேரங்களே இருக்கும். அது போல இலையுதிர்காலத்தில் 01:59 DST-ல் நேரம் 01:00 மணியாக மாற்றப் படும். அன்றைய நாளுக்கு 25 மணி நேரம் உண்டு. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் மாற்றம் 01:00 UTC-ல் நடப்பதால், இலையுதிர்கால மாற்றம் இளவேனிற்கால மாற்றத்திற்கு 1-மணி நேரம் தாமதமாக நடக்கும்.

நேர மாற்றங்கள் பெரும்பாலாக வாரக் கடைசியின் நள்ளிரவிலேயே நடைபெறும். இதன் மூலம் வேலை நாட்களில் இடையூறுகள் தவிர்க்கப்படும்.

தொடக்க மற்றும் முடிவுத் தேதிகள் நாடு மற்றும் ஆண்டைக் கொண்டு மாறு படுகின்றன. 1996-ம் ஆண்டு முதலாக ஐரோப்பிய ஒன்றியத்தில் பகலொளி சேமிப்பு நேரம் மார்ச் மாத கடைசி ஞாயிறு முதல் அக்டோபர் மாத கடைசி ஞாயிறு வரை கடை பிடிக்கப் படுகின்றது. இதற்கு முன்னர் ஐரோப்பாவில் இந்த ஒற்றுமை இல்லை. 2007-ம் ஆண்டு முதலாக வட அமெரிக்கா மற்றும் கனடாவில் பகலொளி சேமிப்பு நேரம் மார்ச் மாத இரண்டாவது ஞாயிறு முதல் நவம்பர் மாத முதல் ஞாயிறு வரை கடை பிடிக்கப் படுகின்றது.

தென் துருவத்தில் சுமாராக இந்த நடைமுறை நேர்மாறாக கடை பிடிக்கப் படுகின்றது. உதாரணமாக [[:en:Chile|Chile]] நாட்டில் இந்த நடைமுறை அக்டோபர் மாத இரண்டாவது சனி முதல் மார்ச் மாத இரண்டாவது சனி வரை கடை பிடிக்கப் படுகின்றது. இதனால் பிரிட்டிஷ் நாட்டுக்கும் Chile நாட்டுக்கும் இடையே வேறுபாடு - வட துருவ கோடையில் 5 மணி நேரமாகவும், வட துருவ குளிரில் 3 மணி நேரமாகவும், இடைப்பட்ட குறுகிய காலத்தில் 4 மணி நேரமாகவும் இருக்கும்.

பகலொளி சேமிப்புத் திட்டம் பொதுவாக பூமத்திய ரேகைக்குப் பக்கத்தில் கடை பிடிக்கப் படுவதில்லை. சூரிய உதயம் மற்றும் அஸ்தமன நேரங்கள் வெகுவாக மாறு படாமல் இருப்பதே இதற்க்குக் காரணம். சில நாடுகள் இந்தத் திட்டத்தை சில பகுதிகளில் கடை பிடிக்கின்றன; உதாரணமாக Brazil நாட்டில் இது தெற்கில் மட்டும் கடை பிடிக்கப் படுகின்றது. ஆசியா மற்றும் ஆப்ரிக்காவில் பெரும்பாலாக கடை பிடிக்கப் படாததால் இந்தத் திட்டம் உலகின் சிறிதளவு மக்களாலேயே பயன் படுத்தப் படுகின்றது.

19:45, 9 பெப்பிரவரி 2014 இல் நிலவும் திருத்தம்

உலக வரைபடம். ஐரோப்பா, ருசியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் சில பகுதிகள், தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் வேறு சில நாடுகள் பகலொளி சேமிப்பு நேரத்தை நடைமுறையில் கொண்டுள்ளன.
உலகின் பல நாடுகளில் நடைமுறையில் இல்லா விட்டாலும், பகலொளி சேமிப்பு நேரம் மேற்கத்திய நாடுகளில் பொதுவாக நடைமுறையில் உள்ளது.
  பகலொளி சேமிப்பு நேரம் நடைமுறையில் உள்ளது.
  பகலொளி சேமிப்பு நேரம் இப்போது நடைமுறையில் இல்லை.
  பகலொளி சேமிப்பு நேரம் எப்பொழுதும் நடைமுறையில் இருந்தது இல்லை.

பகலொளி சேமிப்பு நேரம் (அ) கோடைக்கால நேர வலயம் என்பது சூரிய ஒளி அதிகமாக இருக்கக் கூடிய கோடைக்காலங்களில், கடிகார நேரத்தை முன்கொண்டு செல்லும் வழக்கத்தைக் குறிக்கும். இதன் மூலம் மாலை நேரங்களில் அதிக நேரம் வெளிச்சத்தையும், காலை நேரங்களில் குறைந்த நேரம் வெளிச்சத்தையும் பெறலாம்.

இளவேனிற்காலத்தின் தொடக்கத்தில் நேரத்தை ஒரு மணி நேரம் முன்கொண்டு செல்வதும், பின்பு இலையுதிர் காலத்தில் அந்த ஒரு மணி நேரத்தை பின்கொண்டு வருவதும் வழக்கம்.

பகலொளி சேமிப்பு திட்டம் முதலில் George Vernon Hudson என்பவரால் 1895-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. பின்பு 30 ஏப்ரல் 1916 அன்று இடாய்ச்சுலாந்து மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரி நாடுகளில் அமல் படுத்தப்பட்டது. 1970-களின் எரிபொருள் நெருக்கடியைத் தொடர்ந்து மேலும் பல நாடுகளும் இந்த திட்டத்தைப் பின்பற்றத் தொடங்கின.

செயல்முறை

கடிகாரப் படம்
பகலொளி சேமிப்பு நேரம் தொடங்கும் போது கடிகாரம் 02:00-ல் இருந்து 03:00-ஆக மாற்றப் படுகின்றது.
கடிகாரப் படம்
பகலொளி சேமிப்பு நேரம் முடியும் போது கடிகாரம் 03:00-ல் இருந்து 02:00-ஆக பின்னோக்கி மாற்றப் படுகின்றது.

வட அமெரிக்காவில் ஒரு மணி நேர மாற்றம் 02:00 மணிக்கு நடைபெறும் - இளவேனிற்காலத்தில் 01:59 மணிக்கான அடுத்த நிமிடத்தில் நேரம் 03:00 DST-ஆக மாற்றப் படும். அன்றைய நாளுக்கு 23 மணி நேரங்களே இருக்கும். அது போல இலையுதிர்காலத்தில் 01:59 DST-ல் நேரம் 01:00 மணியாக மாற்றப் படும். அன்றைய நாளுக்கு 25 மணி நேரம் உண்டு. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் மாற்றம் 01:00 UTC-ல் நடப்பதால், இலையுதிர்கால மாற்றம் இளவேனிற்கால மாற்றத்திற்கு 1-மணி நேரம் தாமதமாக நடக்கும்.

நேர மாற்றங்கள் பெரும்பாலாக வாரக் கடைசியின் நள்ளிரவிலேயே நடைபெறும். இதன் மூலம் வேலை நாட்களில் இடையூறுகள் தவிர்க்கப்படும்.

தொடக்க மற்றும் முடிவுத் தேதிகள் நாடு மற்றும் ஆண்டைக் கொண்டு மாறு படுகின்றன. 1996-ம் ஆண்டு முதலாக ஐரோப்பிய ஒன்றியத்தில் பகலொளி சேமிப்பு நேரம் மார்ச் மாத கடைசி ஞாயிறு முதல் அக்டோபர் மாத கடைசி ஞாயிறு வரை கடை பிடிக்கப் படுகின்றது. இதற்கு முன்னர் ஐரோப்பாவில் இந்த ஒற்றுமை இல்லை. 2007-ம் ஆண்டு முதலாக வட அமெரிக்கா மற்றும் கனடாவில் பகலொளி சேமிப்பு நேரம் மார்ச் மாத இரண்டாவது ஞாயிறு முதல் நவம்பர் மாத முதல் ஞாயிறு வரை கடை பிடிக்கப் படுகின்றது.

தென் துருவத்தில் சுமாராக இந்த நடைமுறை நேர்மாறாக கடை பிடிக்கப் படுகின்றது. உதாரணமாக Chile நாட்டில் இந்த நடைமுறை அக்டோபர் மாத இரண்டாவது சனி முதல் மார்ச் மாத இரண்டாவது சனி வரை கடை பிடிக்கப் படுகின்றது. இதனால் பிரிட்டிஷ் நாட்டுக்கும் Chile நாட்டுக்கும் இடையே வேறுபாடு - வட துருவ கோடையில் 5 மணி நேரமாகவும், வட துருவ குளிரில் 3 மணி நேரமாகவும், இடைப்பட்ட குறுகிய காலத்தில் 4 மணி நேரமாகவும் இருக்கும்.

பகலொளி சேமிப்புத் திட்டம் பொதுவாக பூமத்திய ரேகைக்குப் பக்கத்தில் கடை பிடிக்கப் படுவதில்லை. சூரிய உதயம் மற்றும் அஸ்தமன நேரங்கள் வெகுவாக மாறு படாமல் இருப்பதே இதற்க்குக் காரணம். சில நாடுகள் இந்தத் திட்டத்தை சில பகுதிகளில் கடை பிடிக்கின்றன; உதாரணமாக Brazil நாட்டில் இது தெற்கில் மட்டும் கடை பிடிக்கப் படுகின்றது. ஆசியா மற்றும் ஆப்ரிக்காவில் பெரும்பாலாக கடை பிடிக்கப் படாததால் இந்தத் திட்டம் உலகின் சிறிதளவு மக்களாலேயே பயன் படுத்தப் படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகலொளி_சேமிப்பு_நேரம்&oldid=1615721" இலிருந்து மீள்விக்கப்பட்டது