கனகசபை குணரத்தினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
{{தகவற்சட்டம் நபர்
|name = கே. குணரத்தினம்
|name = கே. குணரத்தினம்
|image =
|image = KGunaratnam1951August.jpg
|caption =
|caption = 1951 இல் கேஜி
|birth_name =
|birth_name =
|birth_date ={{birth date|df=yes|1917|7|30}}
|birth_date ={{birth date|df=yes|1917|7|30}}

08:30, 22 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்

கே. குணரத்தினம்
படிமம்:KGunaratnam1951August.jpg
1951 இல் கேஜி
பிறப்பு(1917-07-30)30 சூலை 1917
அரியாலை, யாழ்ப்பாணம்
இறப்புஆகத்து 9, 1989(1989-08-09) (அகவை 72)
கொழும்பு, இலங்கை
இறப்பிற்கான
காரணம்
படுகொலை
இருப்பிடம்கொழும்பு
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுதிரைப்படத் தயாரிப்பாளர், தொழிலதிபர்
சமயம்இந்து

கே. குணரத்தினம் (K. Gunaratnam, KG) ) என அழைக்கப்பட்ட கனகசபை குணரத்தினம் (சூலை 30, 1917 - ஆகத்து 9, 1989) இலங்கைத் திரைப்படத் தயாரிப்பாளரும், விநியோகத்தவரும், தொழிலதிபரும் ஆவார். பல சிங்களத் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.

வாழ்க்கைச் சுருக்கம்

யாழ்ப்பாணம், அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் குணரத்தினம். இவரது மூதாதையர் நல்லூரைச் சேர்ந்தவர்கள்.

திரைப்படத் துறையில்

பல இந்தியத் திரைப்படங்களை சிங்களத்துக்கு மொழிமாற்றம் செய்து வெளியிட்டு வந்த குணரத்தினம், இந்தியாவில் சிங்களத் திரைப்படங்கள் தயாரிப்பது நிறுத்தப்பட்டவுடன், 1953 ஆம் ஆண்டில் இலங்கையில் சொந்தமாக ஒரு திரைப்படக் கலையகம் ஒன்றைத் தொடங்கி சிங்களப் படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தார். சுஜாதா என்ற இவரது முதலாவது சிங்களத் திரைப்படம் பெரு வெற்றி பெற்றது. ஆரம்பித்த சில ஆண்டுகளுக்குள் 25 இற்கும் அதிகமான திரைப்படங்களைத் தயாரித்தார். சினிமாஸ் தியேட்டர்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து நாடு முழுவதும் பல திரையரங்குகளை நிறுவினார். இதனால் இவர் பிரபலமாக "சினிமாஸ் குணரத்தினம்" என அழைக்கப்பட்டார். 1983ம் ஆண்டில் நாட்டில் தமிழர்களுக்கெதிராக இடம்பெற்ற கறுப்பு யூலை வன்முறையின் போது, கொழும்பின் புறநகரான எந்தளையில் அமைந்திருந்த குணரத்தினத்தின் விஜயா ஸ்டூடியோவும் எரிக்கப்பட்டது. இங்கு ஏராளமான சிங்கள, தமிழ்ப் படங்களின் மூலப் பிரதிகள் வைக்கப்பட்டிருந்தன. அனைத்தும் எரிந்து சாம்பலாகியது.[1]

வேறு தொழிற் துறைகள்

திரைப்படத் தொழிலிடன், வேறு பல தொழிற்துறைகளிலும் குணரத்தினம் ஈடுபட்டார். குமிழ்முனை எழுதுகோல்களைத் தயாரித்தார். கேஜி ஃபௌண்டன் பென் அக்காலத்தில் பாடசாலை மாணவர்களிடையே பிரபலமானது. நெகிழிப் பொருட்கள், அஸ்பெஸ்டஸ் சிமெந்துப் பொருட்கள் தயாரிப்பு போன்ற பல தொழில்களை ஆரம்பித்து வெற்றி பெற்றார்.[2]

இவர் தலைவராக இருந்த நிறுவனங்கள்:

  • சினிமாஸ் லிமிட்டெட்
  • கேஜி கூட்டு நிறுவனங்கள்
  • ஃபூஜி கிராபிக்சு சிலோன் லிமிட்டெட்
  • ஃபோட்டோ கினா லிமிட்டெட்

மறைவு

கேஜி என அழைக்கப்பட்ட குணரத்தினம் 1989 ஆகத்து 9 இல் கொழும்பில் வைத்து இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.[2] 1989 ஆம் ஆண்டில் நாட்டில் இடம்பெற்ற சிங்கள இளைஞர்களுக்கு எதிரான அரசு வன்முறைகளின் போது இவர் ஜனதா விமுக்தி பெரமுன தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார் என நம்பப்படுகிறது.[3]

தயாரித்த சில சிங்களத் திரைப்படங்கள்

  • சுஜாதா (සුජාතා, 1953)
  • வரத கெகத (වරද කාගෙද?, 1954)
  • ரதல பிலிருவ (රදළ පිළිරුව, 1954)
  • தொஸ்தர (දොස්තර, 1956)
  • துப்பதாகே துக்க (දුප්පතාගේ දුක, 1956)
  • சுரயா (ශුරයා, 1957)
  • சந்தேசய (සංදේශය, 1960)
  • வீர விஜயா (වීර වීජය, 1960)
  • அதட்ட வெதிய ஹெட்ட ஒந்தாய் (අදට වැඩිය හෙට හොඳයි, 1963)
  • உடரட்ட மெனிக்கே (උඩරට මැණිකේ, 1963)
  • தீவரயோ (ධීවරයෝ, 1964)
  • சந்தியா (චණ්ඩියා, 1965)
  • அல்லப்பு கெதர (අල්ලපු ගෙදර, 1965)
  • ஒப துட்டு தா( ඔබ දුටු දා, 1966)
  • சூர சௌரயா (සූර චෞරයා, 1967)

மேற்கோள்கள்

  1. இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை, தம்பிஐயா தேவதாஸ்
  2. 2.0 2.1 சதாசிவம் ஆறுமுகம், Dictionary of biography of the Tamils of Ceylon, 1997
  3. The Indo-LTTE War (1987-90), An Anthology, Part 13, சச்சி சிறீ காந்தா, பெப்ரவரி 7, 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனகசபை_குணரத்தினம்&oldid=1604358" இலிருந்து மீள்விக்கப்பட்டது