ஐரோ வலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 69 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 191: வரிசை 191:
|
|
|-
|-
| {{Flagicon|Latvia}}
| [[லாத்வியா]]
| சனவரி 1, 2014
|align="right"| {{Nts|2291000}}
|
|-

| [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐ. ஓ]]
| [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐ. ஓ]]
|colspan=2| '''மொத்தம்'''
|colspan=2| '''மொத்தம்'''
|align="right"| {{Nts|330,915,277}}<!--All population numbers are from Eurostat 2009 http://ec.europa.eu/economy_finance/the_euro/the_euro6482_en.htm-->
|align="right"| {{Nts|330915277}}<!--All population numbers are from Eurostat 2009 http://ec.europa.eu/economy_finance/the_euro/the_euro6482_en.htm-->
|
|
|}
|}

08:30, 3 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்

ஐரோ வலயம்
Eurozone
The eurozone as of 201
  2010ல் ஐரோ வலயம்
  ஐரோவை ஏற்றுக் கொண்ட ஆனால் ஐரோ வலயத்தில் இல்லாத நாடுகள்
  எஸ்டோனியா; 2011ல் ஐரோவை ஏற்றுக் கொண்டது[1]
நாணயம்ஐரோ
ஒன்றிய வகைபொருளியல் மற்றும் பணவியல் ஒன்றியம்
தோற்றம்1999
உறுப்பினர்கள்
ஆட்சி முறை
அரசியல் அமைப்புஐரோ குழுமம்
குழுமத் தலைவர்ஜான்-க்ளாட் ஜங்கர்
வழங்குரிமைஐரோப்பிய மத்திய வங்கி (ஈசிபி)
ஈசிபி தலைவர்ஜான்-க்ளாட் திரிஷே
சார்புஐரோப்பிய ஒன்றியம்
புள்ளி விவரம்
மக்கள் தொகை328,597,348
மொத்த உள்நாட்டு உற்பத்தி (பி. பி. பி)8.4 டிரில்லியன்[2]
வட்டி விகிதம்1%[3][4]
பணவீக்கம்0.3%[5]
வேலைவாய்ப்பின்மை10%[6]
வாணிப நிலை€22.3 பில்லியன் மிகை[7]

ஐரோ வலயம் (Eurozone; ஒலிப்பு, யூரோசோன்) ஐரோ நாணய முறையை மட்டும் தங்களின் தனி நாணய முறையாக ஏற்றுக் கொண்ட பதினாறு ஐரோப்பிய ஒன்றிய (ஐ. ஒ.) நாடுகளின் பொருளியல் மற்றும் நாணவியல் ஒன்றியமாகும். இது அதிகாரப்பூர்வமாக ”ஐரோ பகுதி” (ஆங்கிலம்: Euro Area) என்றழைக்கப்படுகிறது.

தோற்றம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் பல உறுப்பினர் நாடுகள் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே பொருளியல், வணிக நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்துள்ளன. ஐ. ஒ. நாடுகளுக்கு பொது நாணய முறை ஒன்றை உருவாக்க நீண்ட நாட்களாக முயன்று வந்தன. 1990களில் அதற்கான திட்ட அளவைகள் வரையறுக்கப்பட்டன. ”ஐரோ ஒன்றுசேர்தல் திட்ட அளவைகள்” (Euro Convergence Criteria) என்று பெயரிடப்பட்ட அந்த அளவைகள் 1992ல் கையெழுத்தான மாஸ்டிரிக்ட் ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருந்தன. இதனால் மாஸ்ட்ரிக்ட் அளவைகள் என்று வழங்கப்படுகின்றன. இவையாவன:

1. பணவீக்க விகிதம் ஒரு நாட்டின் பணவீக்கம், ஐ. ஒ. நாடுகளில் குறைந்த பணவீக்கத்தை கொண்டுள்ள மூன்று நாடுகளின் பணவீக்க விகிதங்களின் சராசரியை விட 1.5 சதவிகிதப் புள்ளிகள் வரை அதிகமாக இருக்கலாம். இந்த அளவைத் தாண்டக் கூடாது.

2. அரசின் நிதி நிலைமை

அ. ஆண்டுப் பற்றாக்குறை : ஒரு நாட்டின் ஆண்டுப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% மேலிருக்கக் கூடாது (முந்தைய நிதியாண்டில்).
ஆ. அரசின் கடன் சுமை: ஒரு நாட்டின் கடன் சுமை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60% மேலிருக்கக் கூடாது (முந்தைய நிதியாண்டில்).

3. நாணய மாற்று வீதம் ஐரோ நாணய ஒன்றியத்தில் சேர விரும்பும் நாடுகள், அதற்கு முன்னர் குறைந்த பட்சம் இரு ஆண்டுகளுக்காவது ஈ. ஆர். எம். II. என்றழைக்கப்படும் ஐரோப்பிய நாணயமாற்று இயங்கமைப்பில் உறுப்பினர்களாக இருந்திருக்க வேண்டும். அக்காலகட்டத்தில் அவை தமது நாணயங்களின் மதிப்பைக் குறைத்திருக்கக் கூடாது.

4. நீண்டகால வட்டி விகிதம் ஒரு நாட்டின் நீண்டகால வட்டிவிகிதம் ஐ. ஒ. நாடுகளில் குறைந்தபட்ச பணவீக்கமுடைய மூன்று நாடுகளின் வட்டி விகிதத்தை விட 2 விழுக்காட்டுப் புள்ளிகள் வரை அதிகமாக இருக்கலாம். இந்த அளவை தாண்டக் கூடாது.

1998இல் பதினோரு ஐ. ஒ. நாடுகள் இந்த அளவைகளின்படி தேர்ச்சி பெற்றிருந்தன. இவை சனவரி 1, 1999 முதல் ஐரோ பொது நாணயமுறைக்கு மாறின. இதன் மூலம் ஐரோ வலயம் உருவானது. பின்னர் கிரேக்கம் 2000லும் சுலோவீனியா 2007லும் சைப்பிரசு, மால்டா 2008லும் சுலொவாக்கியா 2009லும் தேர்ச்சிபெற்று ஐரோ வலயத்தில் இணைந்தன.

விரிவாக்கம்

en:Council of Europeஅல்பேனியாஆர்மீனியாஅசர்பைஜான்பொசுனியா எர்செகோவினாகுரோவாசியாஜோர்ஜியாமல்தோவாமொண்டெனேகுரோமாக்கடோனியாஉருசியாசெர்பியாஉக்ரைன்en:European Free Trade Associationசுவிட்சர்லாந்துலீக்டன்ஸ்டைன்ஐஸ்லாந்துநோர்வேen:European Union Customs Unionஅண்டோராதுருக்கிசான் மரீனோமொனாக்கோஐரோப்பிய ஒன்றியம்பல்கேரியாருமேனியாஐக்கிய இராச்சியம்செக் குடியரசுடென்மார்க்ஹங்கேரிலாத்வியாலித்துவேனியாபோலந்துசுவீடன்ஐரோ வலயம்சைப்ரசுஅயர்லாந்துஆத்திரியாபெல்சியம்எசுத்தோனியாபின்லாந்துபிரான்சுசெருமனிகிரேக்க நாடுஇத்தாலிலக்சம்பர்க்மால்டாநெதர்லாந்துபோர்த்துகல்சுலோவாக்கியாசுலோவீனியாஎசுப்பானியாen:European Economic Areaen:Schengen Areaen:International status and usage of the euro#States with issuing rightsவத்திக்கான் நகர்
வேறுபட்ட ஐரோப்பிய அமைப்பின் பல்தேசியங்களுக்கிடையிலான உறவுகளைக் காட்டும் சொடுகக்கூடிய வரைபடம்.vde

ஐரோ வலயத்தில் உள்ள நாடுகள் தவிர இன்னும் பல ஐ. ஒ. உறுப்பினர் நாடுகளும் ஐரோவைப் பயன்படுத்தி வருகின்றன. இவற்றுள் தங்கள் நாணய முறை புழக்கத்திலுள்ள போது ஐரோவையும் பயன்படுத்தும் நாடுகளும் அடக்கம். இன்னும் பல நாடுகள் ஐ. ஒ. உறுப்பினர்களாக இருப்பினும் ஐரோவைப் பயன்படுத்துவதில்லை. இத்தகைய நாடுகள் அனைத்தும் வருங்காலத்தில் ஐரோ வலயத்தில் இணைந்து விடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது எசுட்டோனியாவைத் தவிர எந்த நாடும் ஐரோ வலயத்தில் இணையும் தேதியைத் தெளிவாக அறிவிக்கவில்லை. எசுட்டோனியா 2011ல் ஐரோ வலயத்தில் இணைந்தது.

டென்மார்க், ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகள் ஐரோ வலயத்தில் இணைவதற்கான முழுத்தகுதி பெற்றிருந்தாலும் அரசியல் காரணங்களால் இன்னும் இணையவில்லை. இந்நாடுகளில் நிலவும் அரசியல் நிலவரம் காரணமாக பொதுக்கருத்து தேர்தல் நடத்தி, அதில் பெரும்பாலானோர் இசைந்தாலே அவை ஐரோ வலயத்தில் இணைய முடியும். 2008 பொருளியல் நெருக்கடி பல நாடுகளை ஐரோ வலயத்தில் இணையத் தூண்டியது. கடினமான பொருளியல் சூழ்நிலைகளில் ஐரோ நாணய முறை தரும் பாதுகாப்பே இதற்குக் காரணம். டென்மார்க், போலந்து, லாட்வியா ஆகிய நாடுகள் ஐரோ வலயத்தில் இணைய அப்போது ஆர்வம் காட்டின. ஆனால் இரு ஆண்டுகளில் பொருளியல் நிலை சற்று சீராகி உள்ளதால், அவை சேரும் முயற்சிகளில் முனைப்பு காட்டுவதை நிறுத்திக் கொண்டன. பொருளியல் வீழ்ச்சியால் பெரும் கடன்சுமைக்குள்ளாகி ஐரோ வலய நாடுகளிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்ட ஐசுலாந்து மட்டும் இன்னும் முயற்சி செய்து வருகிறது.

நிருவாகம்

ஈ. சி. பி தலைவர் ஜான்-க்ளாட் திரிஷே

ஐரோ வலயத்தின் பணவியல் கொள்கை, ஐரோப்பிய மத்திய வங்கி (ஈ. சி. பி) மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கிகள் அமைப்பு ஆகிய இரு அமைப்புகளால் நிருவகிக்கப்படுகிறது. இவற்றுள் பின்னது ஐரோ வலய உறுப்பினர் நாடுகளுடைய மத்திய வங்கிகளின் கூட்டமைப்பாகும். ஐரோவின் வடிவமைப்பு மற்றும் வழங்குரிமை, வங்கித்தாள் அச்சிடல் மற்றும் நாணய வார்ப்பு போன்ற பொறுப்புகள் ஐரோப்பிய மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வங்கியின் தற்போதைய தலைவர் ஜான்-க்ளாட் திரிஷே. இவ்வமைப்புகளைத் தவிர ஐரோ வலயத்தின் அரசியல் சார்பாளராகச் செயல்பட ஐரோ குழுமம் என்றொரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஐரோ வலய நாடுகளின் நிதி அமைச்சர்கள் இக்குழுவின் உறுப்பினர்களாவர். இதன் தற்போதைய தலைவர் ஜான்-க்ளாட் ஜங்கர்.




உறுப்பினர்கள் பட்டியல்

  தற்போதைய ஐரோ வலயம் (16)
  ஐரோ வலயத்தில் சேர கட்டாயம் இருக்கும் ஐ. ஒ. நாடுகள் (9)
   ஐரோ வலயத்தில் சேர கட்டாயமில்லாத ஐ. ஒ. நாடுகள் (1 - யூ.கே)
  ஐரோ வலயத்தில் சேர பொது வாக்கெடுப்பு நடத்தப் போகும் நாடுகள் (1 - டென்மார்க்)
  ஐரோப்பிய ஒன்றித்தில் இல்லாத ஆனால் ஐரோவை வழங்கும் உரிமை பெற்ற நாடுகள் (3)
  ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத ஆனால் ஐரோவைப் பயன்படுத்தும் நாடுகள் (4)
உறுப்பினர்கள் சேர்ந்த தேதி மக்கள் தொகை விதிவிலக்கு
ஆஸ்திரியா ஆத்திரியா சனவரி 1, 1999 83,56,707
பெல்ஜியம் பெல்சியம் சனவரி 1, 1999 1,07,41,048
சைப்பிரசு சைப்ரசு சனவரி 1, 2008 8,01,622 வட சைப்பிரசு[8]
பின்லாந்து பின்லாந்து சனவரி 1, 1999 53,25,115
பிரான்சு பிரான்சு சனவரி 1, 1999 6,41,05,125 நியூ கலிடோனியா[9]
 பிரெஞ்சு பொலினீசியா [9]
வலிசும் புட்டூனாவும்[9]
செருமனி செருமனி சனவரி 1, 1999 8,20,62,249
கிரேக்க நாடு கிரேக்க நாடு சனவரி 1, 2001 1,12,62,539
அயர்லாந்து குடியரசு அயர்லாந்து சனவரி 1, 1999 45,17,758
இத்தாலி இத்தாலி சனவரி 1, 1999 6,00,90,430 காம்பியோன் டி இடாலியா[10]
லக்சம்பர்க் லக்சம்பர்க் சனவரி 1, 1999 4,91,702
மால்ட்டா மால்டா சனவரி 1, 2008 4,12,614
நெதர்லாந்து நெதர்லாந்து சனவரி 1, 1999 1,64,81,139  அரூபா[11]
 நெதர்லாந்து அண்டிலிசு [12]
போர்த்துகல் போர்த்துகல் சனவரி 1, 1999 1,06,31,800
சிலோவாக்கியா சுலோவாக்கியா சனவரி 1, 2009 54,11,062
சுலோவீனியா சுலோவீனியா சனவரி 1, 2007 20,53,393
எசுப்பானியா எசுப்பானியா சனவரி 1, 1999 4,58,53,045
எசுத்தோனியா எசுத்தோனியா சனவரி 1, 1999 13,40,127
லாத்வியா லாத்வியா சனவரி 1, 2014 22,91,000
ஐ. ஓ மொத்தம் 33,09,15,277

மேற்கோள்கள்

ஐரோ வலயத்தின் பணவியல் கொள்கையை முடிவு செய்யும் ஐரோப்பிய மத்திய வங்கி, பிராங்க்ஃபுர்ட்
  1. http://www.france24.com/en/20100608-eu-ministers-offer-estonia-entry-eurozone-january-1-currency-europe
  2. The euro: An international currency, Europa (web portal)
  3. WORLD INTEREST RATES TABLE, FX street
  4. Key ECB interest rates, ECB
  5. HICP - all items - annual average inflation rate Eurostat
  6. Harmonised unemployment rate by gender - total - [teilm020]; Total % (SA) Eurostat
  7. For the whole of 2009. Euroindicators 17 February 2010, Eurostat
  8. The self-declared Turkish Republic of Northern Cyprus is not recognised by the EU and uses the Turkish lira. However the euro does circulate widely.
  9. 9.0 9.1 9.2 French Pacific territories use the CFP franc.
  10. Uses Swiss franc. However the euro is also accepted and circulate widely.
  11. Aruba uses the Aruban florin. It is part of the Kingdom of the Netherlands, but not EU.
  12. The Netherlands Antilles uses the Antillean guilder. It is part of the Kingdom of the Netherlands, but not the EU. The guilder typically followed the US dollar, but the Netherlands Antilles is to be dissolved with some islands becoming part of the EU. The future currency situation is unclear.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐரோ_வலயம்&oldid=1591211" இலிருந்து மீள்விக்கப்பட்டது