உத்தர தினஜ்பூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 39: வரிசை 39:
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{reflist}}
{{reflist}}

[[பகுப்பு:மேற்கு வங்காள மாவட்டங்கள்]]

08:35, 22 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

உத்தர தினஜ்பூர் மாவட்டம் மாவட்டம்
উত্তর দিনাজপুর জেলা
உத்தர தினஜ்பூர் மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு மேற்கு வங்காளம்
மாநிலம்மேற்கு வங்காளம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்ஜல்பாய்குரி
தலைமையகம்ராய்காஞ்ச்
பரப்பு3,142 km2 (1,213 sq mi)
மக்கட்தொகை3,000,849 (2011)
படிப்பறிவு60.13%
பாலின விகிதம்936
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

உத்தர தினஜ்பூர் அல்லது வடக்கு தினஜ்பூர் (Uttar Dinajpur அல்லது North Dinajpur) மாவட்டம் இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் நாள் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டம் ராய்காஞ்ச் மற்றும் இஸ்லாம்பூர் என இரு உபபிரிவகளாகப் (subdivisions)பிரிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் 10 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளன.

புவியியல் அமைவு

இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 3142 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். நிலப்பரப்பு சமதளமாக இருந்தாலும் தென் திசையை நோக்கி சாய்வாகவே உள்ளது. தென்திசையில் குலிக், நாகர், மஹாநந்தா ஆகிய ஆறுகள் ஓடுகின்றன. இம்மாவட்டத்தின் அமைவு 25°22′N 88°04′E / 25.37°N 88.07°E / 25.37; 88.07 ஆகும். ஆசியாவின் இரண்டாவது பெரிய சரணாலயாமான ராய்காஞ்ச் பறவைகள் சரணாலயம் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]

நிர்வாகப் பிரிவுகள்

1577 கிராமங்களைக் கொண்ட இம்மாவட்டம்,

  • 4 நகராட்சிகள்
  • 9 வட்டங்கள்
  • 99 பஞ்சாயத்துகள்

என பிரிக்கப்பட்டுள்ளது.

மக்கட்தொகை

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தில் 30,00,849 பேர் வசிக்கின்றனர்.[2] இது அல்பேனியா நாட்டின் மக்கட்தொகைக்குச் சமமாகும்.[3] மக்கட்தொகைப் பெருக்க சதவீதம் 22.9 ஆகும். [2]1000 ஆண்களுக்கு 936 பெண்கள் என்ற வீதத்தில் உள்ளனர்.[2] கல்வியறிவு 60.13% ஆகும்.[2]

சமயம்

இம்மாவட்டத்தில் இந்து மற்றும் இஸ்லாமியர் பெரும்பான்மையாக உள்ளனர்.[4]

  • இந்து - 51.47%
  • முஸ்லீம் - 47.36%

மொழி

இம்மாவட்டத்தில் வங்காள மொழி முக்கிய மொழியாகும். இந்தி மற்றும் உருது மொழி பேசுவோர் இஸ்லாம்பூர் பகுதியில் உள்ளனர்.

மேற்கோள்கள்

  1. http://www.hoparoundindia.com/west-bengal/raiganj-attractions/raiganj-wildlife-sanctuary.aspx
  2. 2.0 2.1 2.2 2.3 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  3. US Directorate of Intelligence. "Country Comparison:Population". பார்க்கப்பட்ட நாள் 2011-10-01. Albania 2,994,667 July 2011 est. {{cite web}}: line feed character in |quote= at position 8 (help)
  4. http://www.censusindia.gov.in/Tables_Published/Basic_Data_Sheet.aspx