கே. பாலாஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
வரிசை 2: வரிசை 2:


==வாழ்க்கைக் குறிப்பு==
==வாழ்க்கைக் குறிப்பு==
பாலாஜியின் பூர்வீகம் [[கேரளா]]. தொடக்க காலத்தில் அவர் [[சென்னை]] [[கிண்டி]]யில் இருந்த நரசுஸ் ஸ்டூடியோவில், தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றினார். [[1953]] ஆம் ஆண்டில் வெளிவந்த [[அவ்வையார் (திரைப்படம்)|அவ்வையார்]] என்ற படத்தில் முதன் முதலாக நடித்தார். அதைத்தொடர்ந்து, [[சகோதரி]], [[பலே பாண்டியா]], [[படித்தால் மட்டும் போதுமா]] ஆகிய படங்களில் துணை நடிகராக நடித்துப் பிரபலமானார். [[மனமுள்ள மறுதாரம்]] ([[1958]]) படத்தில் கதைத் தலைவனாக நடித்தார்.
பாலாஜியின் பூர்வீகம் [[கேரளா]]. தொடக்க காலத்தில் அவர் [[சென்னை]] [[கிண்டி]]யில் இருந்த நரசுஸ் ஸ்டூடியோவில், தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றினார். [[1953]] ஆம் ஆண்டில் வெளிவந்த [[அவ்வையார் (திரைப்படம்)|ஔவையார்]] என்ற படத்தில் முதன் முதலாக நடித்தார். அதைத்தொடர்ந்து, [[சகோதரி]], [[பலே பாண்டியா]], [[படித்தால் மட்டும் போதுமா]] ஆகிய படங்களில் துணை நடிகராக நடித்துப் பிரபலமானார். [[மனமுள்ள மறுதாரம்]] ([[1958]]) படத்தில் கதைத் தலைவனாக நடித்தார்.


==படத் தயாரிப்பு==
==படத் தயாரிப்பு==

16:29, 17 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

கே. பாலாஜி (இறப்பு: மே 2, 2009) பழம்பெரும் திரைப்பட நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். கதைத் தலைவனாக, எதிரியாக, குணச்சித்திர நடிகராக தமிழ் திரையுலகில் கால் நூற்றாண்டுக்கு மேலாக நடித்து வந்தவர். படித்தால் மட்டும் போதுமா, பலே பாண்டியா உட்பட ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்தவர். பல திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

பாலாஜியின் பூர்வீகம் கேரளா. தொடக்க காலத்தில் அவர் சென்னை கிண்டியில் இருந்த நரசுஸ் ஸ்டூடியோவில், தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றினார். 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த ஔவையார் என்ற படத்தில் முதன் முதலாக நடித்தார். அதைத்தொடர்ந்து, சகோதரி, பலே பாண்டியா, படித்தால் மட்டும் போதுமா ஆகிய படங்களில் துணை நடிகராக நடித்துப் பிரபலமானார். மனமுள்ள மறுதாரம் (1958) படத்தில் கதைத் தலைவனாக நடித்தார்.

படத் தயாரிப்பு

பாலாஜி தனது சுஜாதா சினி ஆர்ட்ஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களைத் தயாரித்தார். ஜெமினி கணேசன் கதைத் தலைவனாக நடித்த அண்ணாவின் ஆசை என்ற படத்தை முதன் முதலாக சொந்தமாக தயாரித்தார். அதன்பிறகு சிவாஜி கணேசனை வைத்து, ராஜா, நீதி உள்பட 17 திரைப்படங்களை தயாரித்தார். சிவாஜியை வைத்து தொடர்ந்து அதிக படங்கள் தயாரித்த பட அதிபர் இவர்தான். இந்தி, தெலுங்கு, மலையாள படங்களை இவர் மறு தயாரிப்பு செய்து பல வெற்றிப் படங்களைக் கண்டவர். கமல், ரஜினிகாந்த் ஆகியோரை நடிக்க வைத்தும் வெற்றிப் படங்களை அளித்துள்ளார் பாலாஜி. மிகச் சிறந்த வகையில் குறித்த காலத்தில் படத்தை எடுத்து வெளியிடும் திறன் கொண்ட படத் தயாரிப்பாளராகவும் பாலாஜி திகழ்ந்தார்

பாலாஜியின் மனைவி பெயர் ஆனந்தவல்லி. இவர்களுக்கு சுரேஷ் பாலாஜி (கிரீடம் திரைப்படத்தைத் தயாரித்தவர்) என்ற மகனும், சுஜாதா, சுசித்ரா என்ற 2 மகள்களும் இருக்கிறார்கள். சுசித்ராவை பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மணந்து இருக்கிறார்.

மறைவு

2009, மே 2 மாலை 5 மணிக்கு உடல்நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் பாலாஜி இறந்தார். இறக்கும் போது அவருக்கு வயது 74.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._பாலாஜி&oldid=1576015" இலிருந்து மீள்விக்கப்பட்டது