இயங்குபடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nandhinikandhasamyஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 49: வரிசை 49:




==மேலும் படிக்க==
*
* [http://www.uca.edu/org/ccsmi/ccsmi/classicwork/Myth%20Revisited.htm Anderson, Joseph and Barbara, "The Myth of Persistence of Vision Revisited", ''Journal of Film and Video''], Vol. 45, No. 1 (Spring 1993): 3-12
* Culhane, Shamus, ''Animation Script to Screen''
* Laybourne, Kit, ''The Animation Book''
* Ledoux, Trish, Ranney, Doug, & Patten, Fred (Ed.), ''Complete Anime Guide: Japanese Animation Film Directory and Resource Guide'', Tiger Mountain Press 1997
* Lowe, Richard & Schnotz, Wolfgang (Eds) ''Learning with Animation. Research implications for design'' Cambridge University Press, 2008
* [[Terrence Masson|Masson, Terrence]], [http://www.cg101.com/ ''CG101: A Computer Graphics Industry Reference''] Unique and personal histories of early computer animation production, plus a comprehensive foundation of the industry for all reading levels. ISBN 978-0-9778710-0-1
* Serenko, Alexander, [http://www.aserenko.com/papers/Serenko_Animation_Scale.pdf The development of an instrument to measure the degree of animation predisposition of agent users], Computers in Human Behavior Vol. 23, No. 1 (2007): 478-495.
* [[Frank Thomas (animator)|Thomas, Frank]] and [[Ollie Johnston|Johnston, Ollie]], ''[[Disney Animation: The Illusion of Life]]'', Abbeville 1981
* Walters, Faber and Helen (Ed.), ''Animation Unlimited: Innovative Short Films Since 1940'', HarperCollins Publishers, 2004
* [[Richard Williams (animator)|Williams, Richard]], ''[[The Animator's Survival Kit]]'' ISBN 978-0-571-20228-7
* Bob Godfrey and Anna Jackson, 'The Do-It-Yourself Film Animation Book' BBC Publications 1974 ISBN 978-0-563-10829-0 Now out of print but available s/hand through a range of sources such as Amazon Uk.
* Lawson, Tim and Alisa Persons. ''[[The Magic Behind the Voices]]'': A Who's Who of Cartoon Voice Actors. University Press of Mississippi. 2004. (A history of cartoon voice-overs and biographies and photographs of many prominent animation voice actors.)
* Ball, R., Beck, J., DeMott R., Deneroff, H., Gerstein, D., Gladstone, F., Knott, T., Leal, A., Maestri, G., Mallory, M., Mayerson, M., McCracken, H., McGuire, D., Nagel, J., Pattern, F., Pointer, R., Webb, P., Robinson, C., Ryan, W., Scott, K., Snyder, A. & Webb, G. (2004) ''Animation Art: From Pencil to Pixel, the History of Cartoon, Anime & CGI''. Fulhamm London.: Flame Tree Publishing. ISBN 978-1-84451-140-2
* Crafton, Donald (1982). ''Before Mickey''. Cambridge, Massachusetts.: The MIT Press. ISBN 978-0-262-03083-0
* Solomon, Charles (1989). ''Enchanted Drawings: The History of Animation''. New York.: Random House, Inc. ISBN 978-0-394-54684-1

==வெளியிணைப்புகள்==
* {{dmoz|Arts/Animation}}
{{Library resources box
|by=no
|onlinebooks=no
|others=no
|about=yes
|label=Animation }}
* [http://web.archive.org/web/20080307025951/http://academic.evergreen.edu/curricular/eat/handouts/Pictures/CutSandPaintRules.pdf Experimental Animation Techniques]
* [http://www.sparetimelabs.com/animato/animato/cartoon/cartoon.html The making of an 8-minute cartoon short]
* [http://www.vidaao.com/learn/intro-to-animation-production Introduction to animation video production]
* [http://www.nfb.ca/film/animando_english/ "Animando"], a 12-minute film demonstrating 10 different animation techniques (and teaching how to use them).





13:40, 4 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

இயங்குபடம் என்பது சிறு சிறு வேறுபாடுகள் கொண்ட பல படங்களை வேகமாக இயக்கப்படுவதன் மூலமாக உருவாக்கப்படுவதாகும்.இயக்கமூட்டல் (Animation) என்பது நிலையான படிமங்களை அடுத்தடுத்துக் காட்சியளிக்க வைப்பதன் மூலம் படத்திலுள்ள பொருள் இயங்குவது போன்ற மாயத் தோற்றத்தை உருவாகுவதாகும்.இப்படிப்பட்ட படங்களை உருவாக்கவே ஜிஃப்(gif),பிளாஸ்(flash) போன்றவை உதவுகின்றன.இதனைக் காட்சிப்படுத்த நவீன புகைப்படக்கருவிகளும்,புரொஜெக்டர்களும் உருவாக்கப்படுகின்றன. திரைப்படங்கள் மற்றும் வீடியோத் தயாரிப்புகளில், இது திரைப்படம் அல்லது கணினியிலும், இணையத்திலும் பார்ப்பதற்கு வழி சமைத்துள்ளன.

இந்த ஆறு சட்டங்களை கொண்டது தான் கீழே இருக்கும் இயங்குப்படம்.

இந்த இயங்குப்படம் ஒரு வினாடிக்கு ஆறு சட்டங்கள் வீதம் நகருகிறது.

அசையும் படத்திலுள்ள ஒவ்வொரு சட்டத்தையும் தனித்தனி உருவாக்க உதவும் தொழில் நுட்பத்தைக் குறிக்கிறது. இச் சட்டங்கள் கணினியின் உதவியுடனும் உருவாக்கப்படலாம், அல்லது கையால் வரையப்பட்ட படங்களைப் படம் பிடிக்கலாம், அல்லது ஒரு மாதிரிக் கூறு ஒன்றுக்கு அடுத்தடுத்துச் சிறிய மாற்றங்களைச் செய்து அதனைச் சிறப்பு இயக்கமூட்டல் நிழற்படக் கருவி மூலம் படம் பிடிக்கலாம். இவ்வாறு உருவாக்கப்பட்ட படங்களைத் தொடராக அடுக்கி ஓடவிடுவதன் மூலம், persistence of vision எனப்படும் தோற்றப்பாடு காரணமாக படம் தொடர்ச்சியாக இயங்குவது போன்ற மாயத்தோற்றம் ஏற்படும். இவ்வாறு படங்களை உருவாக்குவது அதிக உழைப்பை வேண்டி நிற்பது மட்டுமன்றி மனச் சோர்வை ஏற்படுத்துவதுமாகும். கணனிகள் மூலமான இயக்கமூட்டல் இவ்வேலையைத் துரிதமாக்க உதவியுள்ளது. GIF, MNG, SVG மற்றும் பிளாஷ் (Flash) போன்ற Graphics கோப்பு வடிவங்கள் இயக்கமூட்டல்களைக்

இயக்கமூட்டலின் முதன்மையான பயன்பாடு எப்பொழுதும் பொழுதுபோக்காகவே இருந்து வந்துள்ளது. இருந்தாலும், கல்விசார் இயக்கமூட்டல் மற்றும் அறிவுறுத்தல் இயக்கமூட்டல் போன்றவைகளின் பயன்பாடுகளும் அதிகரித்து வருகின்றன.

1900 களின் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டு வால்ட் டிஸ்னி மற்றும் வேறு பலரால் திருத்தமாக்கப்பட்ட இயக்கமூட்டலின் "செந்நெறி" (classic) வடிவமான இயக்கமூட்டிய கேலிச் சித்திரப் படங்களின் ஒரு செக்கனுக்கு 24 வேறுபட்ட வரைபடங்கள் தேவைப்பட்டன.

மரபார்ந்த இயக்கமூட்டலுக்கான ஓர் எடுத்துக்காட்டு. எட்வார்ட் முய்பிரிட்ஜ் என்பவரால் 19 ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட படங்களைப் பயன்படுத்தி ரொட்டோஸ்கோப் முறையால் இயக்கமூட்டப்பட்டது.

இயக்கமூட்டல் என்பது அதிக நேரம் எடுப்பதாகவும், செலவு பிடிப்பதாகவும் இருப்பதால், தொலைக் காட்சி மற்றும் திரைப்படங்களுக்கான பெரும்பாலான இயக்கமூட்டல்கள் தொழில்முறை இயக்கமூட்டல் கலையகங்களினாலேயே தயாரிக்கப்படுகின்றன. ஆனாலும், சுதந்திரமான கலையகங்களையும், சில தனிப்பட்டவர்களையும் கொண்ட சுதந்திரமான இயக்கமூட்டல் துறை 1950 களிலிருந்தாவது இருந்துள்ளது. பல சுதந்திர இயக்கமூட்டல் தயாரிப்பாளர்கள் பின்னர் தொழில்முறைத் தயாரிப்பாளராக ஆனார்கள்.

சொற்பிறப்பியல்

இயங்குபடத்திற்குண்டான ஆங்கிலச் சொல் (Animation),அனிமேட்டோ(animātiō, "the act of bringing to life") எனும் லத்தின் மொழியிலிருந்து வந்ததாகும்.


இயங்குபடத்தின் வரலாறு

முதன் முதலில் இயங்குபடங்களை உருவாக்க ஓவியங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன.பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இயங்குபட தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுவந்துள்ளன.அவற்றை குகைகளிலும்,பலங்கால தொல்லியல் பொருட்களிலும் கண்டுபிடித்துள்ளனர்.

பழயகற்கால குகை ஓவிங்களில் மிருகங்கள் சீரான இயக்கத்தை வெளிப்படுத்துபவையாக வரையபட்டிருந்த்தை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சீனர்கள் ’’’ஜோட்ரோப்’’’ எனும் சாதனத்தைப் கி.பி 180-இல் கண்டுபிடித்துள்ளனர்[1].
1404-1438-களில் வாய்னிச் கையெழுத்துப் பிரதிகளில் பந்து போன்ற ஒரே மாதிரியான உருவங்கள் வரையப்பட்டுள்ளன.அதனை நடுவிலிருந்து சுழற்றிவிட்டால் பந்து ஓடுவது போன்ற மாயயை உருவாக்குவது போல் அமைத்துள்ளனர்[2].

இவை அனைத்தும் முழுமை பெறாத இயங்குபடங்களாகும்.இயங்குபடங்களின் வளர்ச்சி திரைப்படவியல் வந்த பின்பே தொடங்கியது.இவை எளிமையானதும் திரைப்படவியலின் முன்னேற்மே காரணம்.

திரைப்படக்கருவி என்பது ஒளிப்படக்காட்டி(Projector),அச்சுப்பொறி(Printer),புகைப்படக்கருவி(Camera) ஆகியன அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற கருவியாகும்.இதனை உருவாக்கியவர்கள் ஆரம்பகால சினிமா தயாரிப்பாளர்களான லூமியர் சகோதர்ர்கள் ஆவர்.உருவாக்கப்பட்ட ஆண்டு 1894 ஆகும்[3] .ஆரம்ப காலங்களில் பெனகிஸ்டோஸ்கோப்(1832),ஜோட்ரோப்(1834),பிராக்ஸினோ ஸ்கோப்(1877) முதலிய சாதனங்கள் வேறுபாடுகள் கொண்ட ஓவிய சட்டங்களை இயக்க உதவியவையாகும்.


முதல் இயக்கத்திரைப்படம்

பிராக்ஸினோ ஸ்கோபி மூலம் திரையிடப்படும் காட்சி


பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அறிவியல் ஆசிரியரான சார்லஸ் எமிலி என்பவரே முதன் முதலில் இயங்குபடத்தை தயாரித்து திரையிட்டவர் ஆவார்.இவர் பிராக்ஸினோ ஸ்கோபியை 1877-இல் கண்டுபிடித்தார். இதில் புகைப்பட சுருளில் துளையிடப்பட்டு ஒன்றன் பின் ஒன்று வருமாறு செய்யப்பட்டிருந்தது. பின் திரையிடும் கருவியை (Theatre Optique) 1888-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் கண்டுபிடித்தார்.1892-ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் திகதி முதல் இயங்குபடமான ’’’பாவ்ரே பைட்’’’, பாரிஸில் உள்ள முசி கிரேவின் என்னும் திரையரங்கில் திரையிடப்பட்டது. இத்திரைப்படம் ஒளி ஊடுருவக்கூடிய பட்டைகளில் வரையப்பட்ட படங்களினால் உருவாக்கப்பட்டதாகும்.தனித்தனியாக வரையப்பட்ட 500 படங்களினால் பதினைந்து நிமிடங்கள் ஓடும்படி இப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது. 1900-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இத்திரைப்படத்தினை கண்டுகளித்திருந்தனர்.

மேற்கோள்கள்

  1. Ronan, Colin A; Joseph Needham (1985). The Shorter Science and Civilisation in China: Volume 2. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-521-31536-4. 
  2. http://www.youtube.com/watch?v=JgALlSPlZC8
  3. McLaughlin, Dan. "A RATHER INCOMPLETE BUT STILL FASCINATING". Film Tv. UCLA. பார்க்கப்பட்ட நாள் 12 பெப்பிரவரி 2013.


மேலும் படிக்க

வெளியிணைப்புகள்


இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயங்குபடம்&oldid=1565222" இலிருந்து மீள்விக்கப்பட்டது