ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 87: வரிசை 87:
* [[மெக்கின்சி ஆறு]] – கனடாவின் நீளமான ஆறு
* [[மெக்கின்சி ஆறு]] – கனடாவின் நீளமான ஆறு
* [[மேக்தலீனா ஆறு]] – கொலம்பியாவின் முதன்மையான ஆறு
* [[மேக்தலீனா ஆறு]] – கொலம்பியாவின் முதன்மையான ஆறு
* [[மைன்]] – செர்மனியில் பாயும் ஓர் ஆறு. which runs through [[Frankfurt am Main]]
* [[மைன்]] – செர்மனியில் பாயும் ஓர் ஆறு. [[பிராங்க்ஃபுர்ட்]] நகரத்தினுள் புகுந்து செல்கிறது
* [[மேக்காங்]] – தென்கிழக்கு ஆசியாவின் முதன்மையான ஆறு
* [[மேக்காங்]] – தென்கிழக்கு ஆசியாவின் முதன்மையான ஆறு
* [[மெர்சி ஆறு]] – லிவர்பூல் அருகில் உள்ளது.
* [[மெர்சி ஆறு]] – லிவர்பூல் அருகில் உள்ளது.
வரிசை 95: வரிசை 95:
* [[Monongahela River|Monongahela]] - one of the three rivers connected in Pittsburgh, PA
* [[Monongahela River|Monongahela]] - one of the three rivers connected in Pittsburgh, PA
* [[முர்ரே ஆறு]] – தென்கிழக்கு ஆஸ்திரேலியாவின் முதன்மையான ஆறு.
* [[முர்ரே ஆறு]] – தென்கிழக்கு ஆஸ்திரேலியாவின் முதன்மையான ஆறு.
* [[நயாகரா ஆறு]] – between [[Lake Erie]] and [[Lake Ontario]], and which flows over the [[Niagara Escarpment]] (better known as [[Niagara Falls]])
* [[நயாகரா ஆறு]] – between [[ஈரீ ஏரி]] and [[ஒண்டாரியோ ஏரி]], and which flows over the [[Niagara Escarpment]] (better known as [[நயாகரா அருவி]])
* [[நைஜர் ஆறு]] – மேற்கு ஆப்பிரிக்காவின் முதன்மை ஆறு.
* [[நைஜர் ஆறு]] – மேற்கு ஆப்பிரிக்காவின் முதன்மை ஆறு.
* [[நைல்]] – principal river of [[Egypt]] and northeastern Africa
* [[நைல்]] – principal river of [[எகிப்து]] and northeastern Africa
* [[Ob River|Ob]] – சைபீரியாவின் மிகப்பெரிய ஆறு.
* [[Ob River|Ob]] – சைபீரியாவின் மிகப்பெரிய ஆறு.
* [[Oder River|Oder]] – நடு ஐரோப்பாவில் உள்ள பெரிய ஆறு.
* [[Oder River|Oder]] – நடு ஐரோப்பாவில் உள்ள பெரிய ஆறு.
* [[ஓகியோ ஆறு]] – largest river between [[Mississippi River]] and [[Appalachian Mountains]]
* [[ஓகியோ ஆறு]] – largest river between [[மிசிசிப்பி ஆறு]] and [[ஆப்பலேச்சிய மலைத்தொடர்]]
* [[Orinoco]] – வெனிசுவேலாவின் முதன்மை ஆறு.
* [[Orinoco]] – வெனிசுவேலாவின் முதன்மை ஆறு.
* [[Paraná River|Paraná]] – one of the longest and most important rivers in [[South America]], running through [[Brazil]], [[Paraguay]] and [[Argentina]]
* [[பரனா ஆறு|Paraná]] – one of the longest and most important rivers in [[தென் அமெரிக்கா]], running through [[பிரேசில்]], [[பரகுவை]] and [[அர்கெந்தீனா]]
* [[போ ஆறு]] - இத்தாலி்யின் முக்கிய ஆறு.
* [[போ ஆறு]] - இத்தாலி்யின் முக்கிய ஆறு.
* [[ரைன்]] – one of the longest and most important navigatable rivers in western [[Europe]], flowing from [[Switzerland]] to the [[Netherlands]], and a natural border with [[Liechtenstein]], [[Austria]], [[Germany]], and [[France]].
* [[ரைன்]] – one of the longest and most important navigatable rivers in western [[ஐரோப்பா]], flowing from [[சுவிட்சர்லாந்து]] to the [[நெதர்லாந்து]], and a natural border with [[லீக்டன்ஸ்டைன்]], [[ஆசுதிரியா]], [[செருமனி]], and [[பிரான்சு]].
* [[Rhône River|Rhône]] – one of the most important navigatable rivers of Western [[Europe]], going from [[Switzerland]] to [[France]]
* [[ரோன்|Rhône]] – one of the most important navigatable rivers of Western [[ஐரோப்பா]], going from [[சுவிட்சர்லாந்து]] to [[பிரான்சு]]
* [[Río de la Plata]] – உலகின் மிக அகலமான அறு.
* [[Río de la Plata]] – உலகின் மிக அகலமான அறு.
* [[ரியோ கிராண்டே]] – [[மெக்சிகோ]]வுக்கும் [[டெக்சஸ்]]-க்கும் எல்லை
* [[ரியோ கிராண்டே]] – [[மெக்சிகோ]]வுக்கும் [[டெக்சஸ்]]-க்கும் எல்லை
* [[சபர்மதி ஆறு]] – இந்தியாவின் அகமதாபாத் வழியாக ஓடும் ஆறு.
* [[சபர்மதி ஆறு]] – இந்தியாவின் அகமதாபாத் வழியாக ஓடும் ஆறு.
* [[Saint Lawrence River|Saint Lawrence]] – drains the [[Great Lakes (North America)|Great Lakes]]
* [[Saint Lawrence River|Saint Lawrence]] – drains the [[அமெரிக்கப் பேரேரிகள்|Great Lakes]]
* [[St. Marys River (Michigan-Ontario)|Saint Mary's]] - acts as a brief boarder of the [[USA]] and [[Canada]], conects [[Lake Superior]] to [[Lake Huron]], and contains the world's busiest [[Lock (water transport)|Lock]] the [[Soo Locks]]
* [[St. Marys River (Michigan-Ontario)|Saint Mary's]] - acts as a brief boarder of the [[அமெரிக்க ஐக்கிய நாடு]] and [[கனடா]], conects [[சுப்பீரியர் ஏரி]] to [[Lake Huron]], and contains the world's busiest [[Lock (water transport)|Lock]] the [[Soo Locks]]
* [[São Francisco River]] – longest river wholly within [[Brazil]]
* [[São Francisco River]] – longest river wholly within [[பிரேசில்]]
* [[சவா ஆறு]] – flows through four countries—[[Slovenia]], [[Croatia]], [[Bosnia and Herzegovina]] (making its northern border) and [[Serbia]]—and was therefore one of the symbols of former [[Yugoslavia]]
* [[சவா ஆறு]] – flows through four countries—[[சுலோவீனியா]], [[குரோவாசியா]], [[பொசுனியா எர்செகோவினா]] (making its northern border) and [[செர்பியா]]—and was therefore one of the symbols of former [[யுகோசுலாவியா]]
* [[சவான்னா ஆறு]] – a major river in the southeastern ஐக்கிய அமெரிக்கா, forming most of the border between [[Georgia (U.S. state)|Georgia]] and [[South Carolina]]
* [[சவான்னா ஆறு]] – a major river in the southeastern ஐக்கிய அமெரிக்கா, forming most of the border between [[ஜோர்ஜியா (மாநிலம்)|Georgia]] and [[தென் கரொலைனா]]
* [[சீன்]] – பிரான்சின் பாரிசு நகர் வழியே ஓடும் ஆறு.
* [[சீன்]] – பிரான்சின் பாரிசு நகர் வழியே ஓடும் ஆறு.
* [[செகுரா]] (''Segura'') – தென்கிழக்கு ஸ்பெயினில் உள்ள ஓர் ஆறு.
* [[செகுரா]] (''Segura'') – தென்கிழக்கு ஸ்பெயினில் உள்ள ஓர் ஆறு.
* [[சேத்தி ஆறு|சேத்தி]] (''Seti'') – [[நேபாளம்|நேபாளத்தில்]] உள்ள ஆறு.
* [[சேத்தி ஆறு|சேத்தி]] (''Seti'') – [[நேபாளம்|நேபாளத்தில்]] உள்ள ஆறு.
* [[செவர்ன் ஆறு]] – longest river in [[Great Britain]]
* [[செவர்ன் ஆறு]] – longest river in [[பெரிய பிரித்தானியா]]
* [[ஷன்னன் ஆறு]] (''Shannon'') - அயர்லாந்தில் உள்ள நீளமான ஆறு.
* [[ஷன்னன் ஆறு]] (''Shannon'') - அயர்லாந்தில் உள்ள நீளமான ஆறு.
* [[Shatt al-Arab]] – the river that borders [[Iran]] and [[Iraq]]
* [[Shatt al-Arab]] – the river that borders [[ஈரான்]] and [[ஈராக்]]
* [[சினானோ காவா]] – ஜப்பானில் உள்ள நீளமான ஆறு.
* [[சினானோ காவா]] – ஜப்பானில் உள்ள நீளமான ஆறு.
* [[பாம்பா ஆறு]] – கொலம்பியா ஆற்றின் முக்கியமான துணையாறுகளுள் ஒன்று.
* [[பாம்பா ஆறு]] – கொலம்பியா ஆற்றின் முக்கியமான துணையாறுகளுள் ஒன்று.
* [[Susquehanna River]] – [[பென்சில்வேனியா]] மற்றும் [[செசாபீக் பே]]வின் முதன்மை நதி.
* [[Susquehanna River]] – principal river of [[Pennsylvania]] and the [[Chesapeake Bay]]
* [[தாகுஸ்]] – [[ஐபீரிய மூவலந்தீவு|ஐபீரிய மூவலந்தீவில்]] உள்ள நீளமான நதி.
* [[தாகுஸ்]] – longest river in the [[Iberian Peninsula]]
* [[டே ஆறு]] (Tay) – ஸ்காட்லாந்தின் மிகப்பெரிய ஆறு.
* [[டே ஆறு]] (Tay) – ஸ்காட்லாந்தின் மிகப்பெரிய ஆறு.
* [[டென்னெசி ஆறு|டென்னெசி]] – an important tributary of the Mississippi that flows through Eastern/Western [[Tennessee]], [[North Alabama|Northern Alabama]], and [[Kentucky]]
* [[டென்னெசி ஆறு|டென்னெசி]] – an important tributary of the Mississippi that flows through Eastern/Western [[டென்னிசி]], [[North Alabama|Northern Alabama]], and [[கென்டக்கி]]
* [[தேம்ஸ் ஆறு]] – லண்டன் நகரத்தின் ஊடாக ஓடும் இங்கிலாந்தின் தலையாய ஆறு.
* [[தேம்ஸ் ஆறு]] – லண்டன் நகரத்தின் ஊடாக ஓடும் இங்கிலாந்தின் தலையாய ஆறு.
* [[டைபெர்]] (''Tiber'') – ரோமின் ஊடாகப் பாயும் ஆறு.
* [[டைபெர்]] (''Tiber'') – ரோமின் ஊடாகப் பாயும் ஆறு.
* [[தியெத் ஆறு|தியெத்]] (Tietê) – river that runs through [[São Paulo]] towards the centre of the continent
* [[தியெத் ஆறு|தியெத்]] (Tietê) – river that runs through [[சாவோ பாவுலோ]] towards the centre of the continent
* [[டைகிரிஸ்]] – one of the twin principal rivers of [[Anatolia]] ([[Turkey]]) and [[Mesopotamia]] ([[Iraq]])
* [[டைகிரிஸ்]] – one of the twin principal rivers of [[அனத்தோலியா]] ([[துருக்கி]]) and [[மெசொப்பொத்தேமியா]] ([[ஈராக்]])
* [[டோன் ஆறு|டோன்]] (''Tone'') – சப்பானின் நீளமான ஆறுகளில் ஒன்று.
* [[டோன் ஆறு|டோன்]] (''Tone'') – சப்பானின் நீளமான ஆறுகளில் ஒன்று.
* [[விஸ்துலா]] – [[போலந்து|போலந்தின்]] முதன்மையான ஆறு.
* [[விஸ்துலா]] – [[போலந்து|போலந்தின்]] முதன்மையான ஆறு.
* [[Vltava]] – [[Prague]] வழியாகப் பாயும் ஆறு.
* [[Vltava]] – [[பிராகா]] வழியாகப் பாயும் ஆறு.
* [[வோல்கா ஆறு|வொல்கா]] – ரசியாவின் முதன்மையானதும் ஐரோப்பாவின் நீளமானதுமான ஆறு.
* [[வோல்கா ஆறு|வொல்கா]] – ரசியாவின் முதன்மையானதும் ஐரோப்பாவின் நீளமானதுமான ஆறு.
* [[வோல்ட்டா ஆறு|வோல்ட்டா]] – மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பெரிய ஆறு.
* [[வோல்ட்டா ஆறு|வோல்ட்டா]] – மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பெரிய ஆறு.

11:45, 28 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

ஆர்க்கான்சாஸ் ஆறு

ஆறு என்பது இயற்கையாகச் செல்லும் நன்னீரைக் கொண்ட ஒரு பெரிய நீரோட்டம் ஆகும். ஆறுகள் பொதுவாக மலைப் பகுதிகளில் தொடங்குகின்றன. ஆற்றின் இருபுறமும் உள்ள நிலப்பகுதி கரை என அழைக்கப்படுகிறது. ஆறுகள் பொதுவாக மற்றொரு ஆற்றிலோ, ஏரிகளிலோ அல்லது கடலிலோ இணைகின்றன. ஆற்றில் நீரோட்டமானது புவியீர்ப்பு விசையின் காரணமாக ஏற்படுகிறது. சில வேளைகளில் ஆறுகள் இன்னொரு நீர் நிலையை அடைய முன்பே நிலத்துக்குள் உறிஞ்சப்படுவதோ அல்லது வரண்டு விடுவதோ உண்டு. பெரிய நீரோட்டங்கள் ஆறுகள் என்று சிறையவை சிற்றாறுகள் என்று அழைக்கப்படுகின்றன. எனினும் எதனை ஆறு என்று அழைக்கலாம் என்பதற்கான பொது விதி எதுவும் கிடையாது.

ஆறு நீர் வட்டத்தின் ஒரு கூறு ஆகும். ஆற்றில் இருக்கும் நீர் பொதுவாக மழை வீழ்ச்சி போன்றவற்றிலிருந்து பெறப்படுகிறது. புவி மேற்பரப்பில் வழிந்து ஓடுவதன் மூலமும், நிலத்தடி நீரை மீள்விப்பதன் மூலமும், இயற்கையான நீர் நிலைகள் நிரம்புவதன் மூலமும் மழை நீர் ஆற்றை அடைகின்றது.

தோற்றம்

ஊற்றுக்களில் இருந்தோ, ஏரிகளில் இருந்தோ, பனியாறுகள் உருவதன் மூலமோ, மழை நீர் வழிந்தோடுவதனாலோ அல்லது வேறு பல வழிகளிலோ ஆறுகள் உருவாகக் கூடும். பொதுவாக ஆறுகளுடன் வேறு ஆறுகள் வந்து இணைவது உண்டு. இத்தகைய ஆறுகள் கிளையாறுகள் அல்லது துணையாறுகள் என அழைக்கப்படுகின்றன. ஆற்றில் கொண்டு செல்லப்படும் நீரின் அளவு. ஆற்றில் மேற்பரப்பில் செல்லும் நீரும், கண்ணுக்குத் தெரியாமல் நிலத்துக்குக் கீழ் செல்லும் நீரும் சேர்ந்தது ஆகும். பெரிய பள்ளத்தாக்குகளில் ஓடும் ஆறுகளில் இவ்வாறான கண்ணுக்குத் தெரியாத நீரோட்டத்தின் கூறு மேலே தெரியக்கூடிய நீரின் அளவை விடப் பெருமளவு அதிகமாக இருக்கக்கூடும்.

ஆற்றின் மூலத்தில் இருந்து பள்ளத்தை நோக்கி ஓடும் ஆறுகள் பொதுவாகக் கடலிலோ அல்லது பெரிய ஏரிகளைப் போன்ற நீர் நிலைகளிலோ கலக்கின்றன. வரண்ட பகுதிகளில் ஆற்று நீர் ஆவியாவதன் மூலம் இவ்வாறான நீர் நிலைகளை அடையு முன்னரே வரண்டு விடுவது உண்டு. சில ஆறுகள் மண்ணுக்கு ஊடாகவோ, ஊடுசெல்லவிடும் பாறைகளூடாகவோ நிலத்துக்குள் உறிஞ்சப்படுவது உண்டு. இது நிலத்தடி நீராகத் தங்கிவிடுகிறது. தொழிற்சாலைகளுக்கும், நீர்ப்பாசனத் தேவைகளுக்கும் பெருமளவில் நீரை எடுப்பதனாலும் அதன் இயற்கையான முடிவிடத்தை அடையுமுன்பே ஆறு வற்றிவிடுவதையும் காணலாம். ஆற்றுக்கு நீரை வழங்கும் பகுதி அல்லது ஆற்றினால் வடியச் செய்யப்படும் நிலப்பகுதி வடிநிலம் அல்லது நீரேந்து பகுதி எனப்படுகின்றது.

நில அமைப்பு

ஆற்றில் செல்லும் நீர் பொதுவாக அதன் கால்வாய்ப் பகுதியூடாகவே செல்கிறது. இது இரண்டு கரைகளுக்கு இடைப்பட்ட ஆற்றுப்படுகையினால் ஆனது. பெரிய ஆறுகளில் இந்த வாய்க்கால் பகுதிக்கு வெளியே வெள்ளப்பெருக்குச் சமதளம் (Flood plains) இருப்பதுண்டு. இது வெள்ளப்பெருக்குக் காலங்களில் ஆற்றுநீர் வாய்க்கால் பகுதிக்கு வெளியே செல்லும்போது உருவாவது. வெள்ளப்பெருக்குச் சமதளங்கள் ஆற்றின் கால்வாய் அளவிலும் மிகப் பெரிதாக இருப்பதும் உண்டு.

பெரும்பாலும் ஆறுகள் ஒரு வழியிலேயே செல்லுகின்றன. ஆனால் சில ஆறுகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட பல வழிகளில் சென்று பின்னல் ஆறுகளாக அமைவதும் உண்டு. பெரிய அளவிலான இவ்வாறான ஆறுகள், நியூசிலாந்தின் தெற்குத் தீவு போன்ற, உலகின் சில பகுதிகளிலேயே காணப்படுகின்றன. பின்னல் ஆறுகள், அரிப்புச் சமவெளிகளிலும், சில ஆற்றுக் கழிமுகங்களிலும் அமைவதுண்டு.

பாயும் ஆறு ஒரு ஆற்றல் மூலமாகும். இதனால் இவ்வாற்றல் ஆற்றின் வாய்க்கால் மீது தாக்கி அதன் அடிவத்தை மாற்றுகிறது. பிராமின் விதிப்படி (Brahm's law) ஆற்றினால் அடித்துச் செல்லப்பக்கூடிய பொருளொன்றின் திணிவு ஆற்றின் வேகத்தின் ஆறாம் அடுக்குக்கு விகிதசமம் ஆகும். இதனால், ஆற்றின் ஓட்ட வேகம் இரண்டு மடங்காக அதிகரிக்கும்போது, 64 மடங்கு அதிக திணிவுள்ள பொருளை அடித்துச் செல்லக்கூடிய ஆற்றலைப் பெறுகிறது. மலைப்பாங்கான கடினப்பாறை வலயங்களில் இதன் காரணமாக கடினப் பாறைகள் ஊடாக அரிப்பு வாய்க்கால்கள் (erosion channel) ஏற்படுவதோடு, பெரிய பாறைகள் உடைந்து மணலும், சிறு கற்களும் உருவாவதைக் காணலாம். ஆறுகள் ஓடும் பாதையின் இடைப் பகுதிகளில் அது சமதளங்களில் ஓடும்போது, கரைகள் அரிக்கப்படுவதனால் வளைவுகள் ஏற்படுவதுடன், இத்தகைய உட்புற வளைவுகளில் படிவுகளும் ஏற்படுகின்றது. ஆற்றுப் பாதைகள் தடம் (loop) போல் அமையும் இடங்களில் சில வேளைகளில் ஆறு குறுக்கே ஓடி இணைந்து ஆற்றுப் பாதையின் நீளத்தைக் குறைப்பதுடன் இலாட வடிவ ஏரியையும் உருவாக்கும்.

வகைப்பாடு

ஆறுகளைக் கற்பனை செய்து பார்ப்பதற்குக் கீழ் காட்டப்படும் வகைப்பாடு உதவும் எனினும், வேறு பல காரணிகளையும் கருத்தில் கொள்ளவேண்டும். ஓட்டப்பாதையின் சரிவு புவிமேலோட்டு அசைவுகளில் தங்கியுள்ளது எனினும் ஓடும் நீரின் அளவு, காலநிலையிலும், படிவின் அளவு காலநிலை, நிலவியல் அமைப்பு, சரிவு என்பவற்றிலும் தங்கியுள்ளன.

இளமை ஆறு
இது கூடிய சரிவைக் கொண்டதும், குறைந்த அளவு துணையாறுகளைக் கொண்டதும், வேகமாக ஓடுவதுமான ஆறு ஆகும். இத்தகைய ஆறுகள் அகலமாக அரிப்பதிலும் ஆழமாக அரிக்கின்றன. (எகா: பிராசோஸ் ஆறு, டிரினிட்டி ஆறு, எப்ரோ ஆறு)
முதிர்ந்த ஆறு
இளமை ஆறுகளிலும் குறைந்த சரிவு கொண்ட இது குறைவான வேகத்தில் ஓடுவது. இதன் வாய்க்கால்கள் அகலமாக அரிக்கப்படுகின்றன. இவை அதிகமான துணையாறுகளைக் கொண்டிருப்பதுடன் இளம் ஆறுகளைவிடக் கூடிய நீர் வரத்தைக் கொண்டிருக்கும். (எகா: மிசிசிப்பி ஆறு, சென். லாரன்ஸ் ஆறு, தனூப் ஆறு, ஓகியோ ஆறு, தேம்ஸ் ஆறு)
பழைய ஆறு
குறைந்த சரிவைக் கொண்டிருப்பதுடன், குறைவான அரிப்பு ஆற்றலையும் கொண்டிருக்கும். வெள்ளச் சமவெளிகளைக் கொண்டிருப்பது இவற்றின் சிறப்பு இயல்பாகும். (எகா: ஹுவாங் ஹே ஆறு, கங்கை ஆறு, டைகிரிஸ் ஆறு, இயுபிரட்டீஸ் ஆறு, சிந்து நதி, நைல் ஆறு)
புத்திளமை ஆறு
புவிமேலோட்டு அசைவினால் சரிவு கூடுதலான ஆறு.

ஆறுகளின் இன்றியமையாமை

உலகின் பெரும் நாகரிகங்கள் ஆறுகளின் கரைகளிலேயே அமைந்துள்ளன. ஆறுகள் மனிதர்களுக்கு குடிநீர்த் தேவையை மட்டுமன்றி அவர்களது வாழ்வியல் தேவைகளையும் நிறைவு செய்கின்றன. வேளாண்மை, பல வகையான தொழிற்சாலைகள் (எ.கா: காகித ஆலை) ஆற்று நீரையே நம்பியிருக்கின்றன. தற்காலத்தில் ஆற்றோட்டத்தைப் பயன்படுத்தி மின்சாரமும் உருவாக்கப்படுகிறது.

ஆறுகளின் பட்டியல்

உலகின் பத்து நீளமான ஆறுகளின் பட்டியல்

  1. நைல் (6,690 கி.மீ)
  2. அமேசான் (6,452 கி.மீ)
  3. யாங்சே (சாங்-சியாங்) (6,380 மி.மீ)
  4. மிசிசிப்பி-மிசூரி (6,270 கி.மீ)
  5. யெனிசே-அங்காரா (5,550 கி.மீ)
  6. ஓப்-இர்டிஷ் (5,410 கி.மீ)
  7. ஹுவாங்-ஹ (மஞ்சள் ஆறு) (5,464 கி.மீ)
  8. ஆமுர் (4,410 கி.மீ)
  9. காங்கோ (4,380 அல்லது 4,670 கி.மீ)
  10. லெனா (4,260 கி.மீ)

புகழ்பெற்ற ஆறுகள்

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. http://news.bbc.co.uk/1/hi/world/americas/6759291.stm

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறு&oldid=1559583" இலிருந்து மீள்விக்கப்பட்டது