கோபம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4: வரிசை 4:
நவீன உளவியலாளர்கள் கோபம் என்பது முதன்மையான, இயற்கையான, முதிர்ந்ததான, அனைத்து மனிதனுக்கும் ஏற்படும் தொடர்ந்து வாழ்தலுக்கான் ஒரு அனுபவமாக கருதப்படுகிறது. கோபம் ஒரு மனிதனின் நடவடிக்கையை திருத்த உளவியல் வளங்களை திரட்டும்; ஆனால் கட்டுப்படுத்த முடியாத கோபம் ஒரு மனிதனின் தனிப்பட்ட அல்லது சமூக நலனில் எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்த கூடியது. பல ஞானிகள் கோபத்தின் விளைவுகளை பற்றி எச்சரித்தாலும் கோபத்தின் உள்ளார்ந்த மதிப்பின் மீது பல வேற்றுமைகள் இருந்த வண்ணமே உள்ளது. கோபத்தை கட்டுபடுத்தும் வழிமுறைகளை வழங்கிய ஞானிகள் அதனால் எற்படும் தீய விளைவுகளையும் எடுத்து கூறியுள்ளனர்.

==உளவியலும், சமூகவியளும்==
==உளவியலும், சமூகவியலும்==
உளவியலாளர்கள் மூன்று வகையான கோபத்தை கண்டறிந்துள்ளனர்; அதில் முதல் வடிவமான ''பதற்றத்துடன் கூடிய திடீர் கோபம்'' என்பதை ஜோசப் பட்லர் எனும் 18ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஆங்கில பாதிரியால் கண்டறியப்பட்டது. இது சுயப்பாதுகாப்பின் போது வெளிபடும். இரண்டாம் வடிவம் ''அமைதியான உள்நோக்கத்துடன்'' கூடியதாகும் இது ஒருவர் தன்னை நியாயமில்லாத வகையில் நடத்தும் போது உணரப்படும். இவை இரண்டும் வந்து செல்பவை மூன்றாவது வடிவ கோபம் தங்கள் இயற்கையான மனநிலையுடன் ஒன்றிபோவது எப்போதும் எரிச்சல் அல்லது கடுகடுப்பாக இருப்பது இந்த வகையின் வெளிப்பாடாகும்.

08:54, 28 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

கோபம் (Anger) என்பது மனிதர்களுக்கிடையே தோன்றும் கடுமையான உணர்ச்சியாகும். இது சிறிய எரிச்சல் அளவில் இருந்து கடுமையான வெறி கொண்டதாக இருக்கலாம். கோபம் ஏற்படும்போது உடலளவில் அதிக இரத்த அழுத்தம் வேகமான இதயத்துடிப்பு, அட்ரினலின் மற்றும் நோரட்ரினலின் (noradrenaline) அதிகம் சுரக்கலாம். யூ.ஸி. இர்வின்னை சேர்ந்த ரேமண்ட் நோவாகோ, 1975லிருந்து இது சம்மந்தமாக மிகுதியான இலக்கியங்களை அளித்து உள்ளார், அவர் கோபத்தை மூன்று விதமாக வகைப்படுத்தி உள்ளார்: அறிவை பாதிக்க கூடியது, உடலை பாதிக்ககூடியது, நடத்தையை பாதிக்கக்கூடியது. வில்லியம் டிஃபூர் எனும் கோப மேலாண்மை எழுத்தாளர், கோபத்தை உயர் அழுத்த சமையல் பாத்திரம் அதாவது பிரஷர் குக்கருடன் ஒப்பிடுகிறார்: நமது கோபத்தின் மீது நாம் அழுத்தம் கொடுக்கலாம், ஆனால் அது வெடிக்கும் வரையே. கோபம் என்பது ஒரு ஆக்கிரமிப்பு உணர்ச்சியாக நம் அறிவிலும், உடலிலும், நடத்தையிலும் மாற்றத்தை ஏற்படுத்த கூடியது. ஒரு மனிதன் தன்னை அச்சுறுத்தும் வேறு ஒரு வெளி சக்தியை எதிர்க்க எடுக்கும் முடிவே மூளையின் தேர்வான கோபம். கோபத்தின் வெளிப்பாடுகளை முக பாவனைகள், உடல் மொழி, மூர்க்கத்தனமான நடவடிக்கைகள் ஆகியவற்றால் கண்டறியலாம். மனிதர்களோ, மிருகங்களோ கோபத்தின் வெளிப்பாடுகளாக மிகுந்த சப்தம் எழுப்புவது, உடலை பெரிதாக்க முயற்ச்சிப்பது, பற்களை காட்டுவது, முறைப்பது முதலியவற்றை தங்கள் எதிரிகளின் அச்சுறுத்தலை நிறுத்த தரும் ஒரு எச்சரிக்கையாகும். நவீன உளவியலாளர்கள் கோபம் என்பது முதன்மையான, இயற்கையான, முதிர்ந்ததான, அனைத்து மனிதனுக்கும் ஏற்படும் தொடர்ந்து வாழ்தலுக்கான் ஒரு அனுபவமாக கருதப்படுகிறது. கோபம் ஒரு மனிதனின் நடவடிக்கையை திருத்த உளவியல் வளங்களை திரட்டும்; ஆனால் கட்டுப்படுத்த முடியாத கோபம் ஒரு மனிதனின் தனிப்பட்ட அல்லது சமூக நலனில் எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்த கூடியது. பல ஞானிகள் கோபத்தின் விளைவுகளை பற்றி எச்சரித்தாலும் கோபத்தின் உள்ளார்ந்த மதிப்பின் மீது பல வேற்றுமைகள் இருந்த வண்ணமே உள்ளது. கோபத்தை கட்டுபடுத்தும் வழிமுறைகளை வழங்கிய ஞானிகள் அதனால் எற்படும் தீய விளைவுகளையும் எடுத்து கூறியுள்ளனர்.

உளவியலும், சமூகவியலும்

உளவியலாளர்கள் மூன்று வகையான கோபத்தை கண்டறிந்துள்ளனர்; அதில் முதல் வடிவமான பதற்றத்துடன் கூடிய திடீர் கோபம் என்பதை ஜோசப் பட்லர் எனும் 18ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஆங்கில பாதிரியால் கண்டறியப்பட்டது. இது சுயப்பாதுகாப்பின் போது வெளிபடும். இரண்டாம் வடிவம் அமைதியான உள்நோக்கத்துடன் கூடியதாகும் இது ஒருவர் தன்னை நியாயமில்லாத வகையில் நடத்தும் போது உணரப்படும். இவை இரண்டும் வந்து செல்பவை மூன்றாவது வடிவ கோபம் தங்கள் இயற்கையான மனநிலையுடன் ஒன்றிபோவது எப்போதும் எரிச்சல் அல்லது கடுகடுப்பாக இருப்பது இந்த வகையின் வெளிப்பாடாகும்.

கோபம் உளவியல் வளங்களை திரட்ட, தவறான நடத்தைகளை திருத்தும் உறுதியை ஊக்குவிக்க, சமூக நீதியை உயர்த்த, எதிர்மறை உணர்வுகள் மற்றும் மனக்குறைகளை நிவர்த்தி செய்ய, நம்மை பொறுமையாக இருக்க வைக்க உதவக் கூடியது. ஆனால் அதுவே சரியான வடிகால் இல்லவிடில் அழிவைத் தர கூடியது. கோபம் தன் வலிமையான வடிவத்தில் மனிதனின் தகவல் செயல்ப்பாட்டுத் திறன், அறிவாற்றல், நடத்தை கட்டுப்பாடு முதலியவற்றை முடக்ககூடியது. மேலும் ஒரு கோபமான மனிதன் புற உண்மை, பச்சாத்தாபம், விவேகம் அல்லது சிந்தனைய இழந்து மற்றவர்க்கு தீங்கு விளைவிக்கலாம்.

காரணங்கள்

மனிதர்கள், தங்களை சார்ந்தவர்கள்/சார்ந்தவை அவமதிக்க பட்டாலோ, தாக்கப்பட்டலோ கோபமடைகின்றனர். உதாரணத்திர்க்கு ஒருவருடைய ஒரு சிற்றுந்து(கார்) சேதமடைந்து விட்டதென்றால், அந்த சேததிற்க்கு காரணம் வேறொருவர் என்பதை அறிந்தால் கோபமடைவார். அதுவே அவ்வண்டி இயற்க்கை சூழ்நிலையால் சேதமடைந்து விட்டதென்றால் வருத்தமடைவார். அல்லது தன்னால் அவ்வண்டி சேதப்படுத்த பட்டிருந்தால் அவர் வருத்தமடைவார். கோபத்தை அனுபவித்த ஒருவர் அது தனக்கு ஏற்பட்ட விடயங்களை கொண்டே கோபம் அடைகிறார்.

இணையான சொற்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபம்&oldid=1559442" இலிருந்து மீள்விக்கப்பட்டது