இலங்கையின் நெடுஞ்சாலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி ஏ-7 பெருந்தெரு, இலங்கை இணைப்பு
சி இலங்கையின் பெருந்தெருக்கள், இலங்கையின் நெடுஞ்சாலைகள் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

05:18, 11 ஆகத்து 2007 இல் நிலவும் திருத்தம்

இலங்கையின் பெருந்தெருக்கள் பயணிகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்தில் முக்கிய இடம் வக்கிக்கிறது. இது "ஏ","பி","சி" (A,B,C) என்ற மூன்று தரங்களாக வகைப்படுத்தப்பட்டு பராமரிக்கப்படுகிறது. "ஏ" மற்றும் "பி" தரப் பாதைகளின் பராமரிப்பு இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபையாலும் "சி" தரப் பாதைகளின் பராமரிப்பு இலங்கையின் ஒன்பது மாகாண சபைகளாலும் மேற்கொள்ளப்படுகிறது. ஏ" மற்றும் "பி" தரப் பெருந்தெருக்கள் தேசிய பெருந்தெருக்கள் என அழைக்கப்படும். இலங்கை முழுவதும் 2004 ஆம் ஆண்டு கணகெடுப்பின் படி ஏ" மற்றும் "பி" தரப் பெருந்தெருக்கள் 11,716 கிலோ மீட்டரும் "சி" தரப் பெருந்தெருக்கள் 80,191 கிலோ மீட்டரும் காணப்படுகிறது. இலங்க்கையில் அதிவேக பெருந்தெருக்கள் ஒன்றும் இல்லை, ஆனாலும் பல புதிய அதிவேக பெருந்தேருக்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

வகைப்படுத்தல்

பெருந்தெரு ஒன்று ஆங்கில முதல் எழுத்து ஒன்றாலும் (A,B,C மட்டும்), ஒரு இந்து-அராபிய தொடர் இலக்கம் ஒன்றாலும் குறிக்கப்படுகிறது. பெருந்தெருக்கள் அவற்றின் முக்கியத்துவத்துக்கு ஏற்றபடி "ஏ","பி","சி" என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் முக்கியத்துவம் "ஏ" தொடங்கி குறைந்து கொண்டு செல்கிறது. "ஏ" வகை பெருந்தெருக்கள் இரண்டு மாகாணங்களை இணைக்கும் பெருந்தெருக்களாகும். "பி" தர பெருந்தெருக்கள் ஒன்று அல்லது இரண்டு பிரதான நகரங்களை "ஏ" தர பெருந்தெருவுடன் இணைக்கும் பெருந்தெருவாகும். இவற்றைத் தவிர முக்கியமானது என அடையாளம் காணப்பட்ட நுழைவு பெருந்தெருக்கள் "சி" தரத்தில் வகைப்படுத்த படுகிறது. பெருந்தெருவின் பெயரில் இரண்டாவது பகுதியான இந்து-அராபிய எண் வீதியின் முக்கியத்துவதை குறிக்க பயன்படாது. மாறாக அது ஒரு தொடர் இலக்கமாகவே பயன்படுத்தப்படுகிறது.

முகாமைத்துவம்

காலப்பகுதி முகாமை
1970 க்கு முன்னர் குடிசார் கட்டமைப்பு திணைக்களம்
1970 - 1976 பிரதேச குடிசார் பொறியியலாளர்
1977 - 1985 பெருந்தெருக்கள் திணைக்களம்
1986 - வீதி அபிவிருத்தி அதிகார சபை


ஏ தரப் பெருந்தெருக்களின் பட்டியல்

பெயர் ஆரம்பம் ஊடாக முடிவு
A1(விசேட) கொள்ளுப்பிட்டி ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை
A1 கொழும்பு கேகாலை கண்டி
A2 கொழும்பு அம்பாந்தோட்டை வெல்லவாய
A3 பேலிய கொடை (கொழும்பு) புத்தளம்
A4 கொழும்பு இரத்தினபுரி மட்டக்களப்பு
A5 பேராதனை பதுளை செங்களடி
A6 அம்பேபுஸ்ச திருகோணமலை
A7 அவிசாவளை அட்டன் நுவரெலியா
A8 பானதுறை இரத்தினபுரி
A9 கண்டி வவுனியா யாழ்ப்பாணம்
A10 கட்டுகஸ்தொட்டை (கண்டி) குருநாகல் புத்தளம்
A11 மரதங்கடவளை திருகோணமடு
A12 புத்தளம் திருகோணமலை
A13 கல்குளம் அனுராதபுரம்
A14 மதவாச்சி தலை மன்னார்
A15 மட்டக்களப்பு திருகோணமலை
A16 பெரகலை ஆலிஎலை
A17 காலி மாதம்பே
A18 பெல்மதுளை நோனாகமை
A19 பொல்காவளை கேகாலை
A20 அனுராதபுரம் ரும்பாவ
A21 கேகாலை கரவனல்லை
A22 பஸ்சரை மொனராகலை
A23 வெல்லவாய எல்லை கும்பல்வெள
A24 மாத்தறை அக்குரஸ்சை
A25 சியம்பலாண்டுவை அம்பாறை
A26 கண்டி பதியதலாவை
A27 அம்பாறை மகாஓயா
A28 அனுராதபுரம் பாதெனிய
A29 வவுனியா ஒரொவொபத்தானை
A30 வவுனியா பரயநாலன்குளம்
A31 காரைத்தீவு அம்பாரை
A32 நாவற்குழி மன்னார்
A33 ஜா-எலை கம்பஹா யக்கலை
A34 மாங்குளம் முல்லைத்தீவு
A35 பரந்தன் முல்லைத்தீவு


ஆதாரங்கள்