மூறூனீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎புவியியல்: *விரிவாக்கம்*
→‎பொருளாதாரம்: *விரிவாக்கம்*
வரிசை 46: வரிசை 46:


== பொருளாதாரம் ==
== பொருளாதாரம் ==
மொரோனியில் வனிலா, கொக்கோ, கோப்பி, மென்பானங்கள், பதப்படுத்தப்பட்ட எண்ணெய்கள், உலோக மற்றும் மர உற்பத்திகள் மற்றும் சிமெந்து என்பன உற்பத்தி செய்யப்பட்டு துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

08:34, 17 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

மொரோனி
அரபு மொழி: مورونيMūrūnī
Skyline of மொரோனி
நாடு கொமொரோசு
தீவுபெரிய கொமோரி
தலைநகரம்1962
பரப்பளவு
 • மொத்தம்30 km2 (10 sq mi)
ஏற்றம்29 m (95 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்54,000
 • அடர்த்தி1,800/km2 (4,700/sq mi)
நேர வலயம்கிழக்கு ஆபிரிக்க நேரம் (ஒசநே+3)
தொலைபேசி குறியீடு269

மொரோனி, கொமொரோசு நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகரிலேயே கொமொரோசு நாட்டின் அரசபீடம் அமைந்துள்ளது. மேலும், கொமொரோசு நாட்டின் மூன்று முக்கிய தீவுகளில் பெரியதான பெரிய கொமோரி தீவின் தலைநகரமும் ஆகும். கொமோரிய மொழியில் மொரோனி என்பது 'நெருப்பின் மத்தியிலே' என பொருள்படும். இந்நகரம் கர்த்தாலா எரிமலையின் அடிவாரத்திலே அமைந்துள்ளது. இது ஒரு துறைமுக நகரமாகும்.

வரலாறு

பத்தாம் நூற்றாண்டில் அரேபியக் குடியேறிகளால் தன்சானியாவின் சன்சிபாருடன் வர்த்தகத் தொடர்புடைய ஒரு சுல்த்தானகத்தின் தலைநகரமாக மொரோனி நகரம் தோற்றுவிக்கப்பட்டது. கொமொரோசு ஒன்றியத்தின் ஒரு தீவாகிய அஞ்சோவன் தீவின் பிரதிநிதிகளால் அதிகாரம் பரவலாக்கப்படும் உடன்படிக்கை நிராகரிக்கப்பட்டதையடுத்து 1999 ஏப்ரலில் இங்கு குழப்பமும் வன்முறையும் வெடித்தது.

புவியியல்

இந்நகரம் பெரிய கொமோரி தீவின் மேற்குக்கரையில் அமைந்துள்ளது. நகரின் கடற்கரையின் பெரும்பகுதி எரிமலைப்பாறைகள் நிறைந்தாகக் காணப்படுகின்றது. நகரின் வடக்கே இற்சந்திரா எனுமிடத்தில் கடற்கரைப்பகுதியில் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சுல்த்தான் கோட்டை மற்றும் அரண்மனையின் அழிந்த சுவடுகள் காணப்படுகின்றன.

சுமார் ஒரு மைல் விட்டமும் 2,361 மீட்டர் (7,746 அடி) உயரமும் கொண்ட, உலகில் செயற்படு நிலையிலுள்ள பெரிய எரிமலைகளில் ஒன்றான கர்த்தாலா மலையடிவாரத்தில், எரிமலை மத்தியிலிருந்து வடகிழக்காக சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் மொரோனி நகரம் அமைந்துள்ளது. இவ்வெரிமலை கடந்த 200 ஆண்டுகளாக ஏறத்தாழ பதினொரு ஆண்டுகளுக்கொருமுறை எரிமலைக் குழம்பைக் கக்குகின்றது. கடைசியாக 2005 இல் ஏற்பட்ட எரிமலைப் புகை காரணமாகப் பெருமளவு மக்கள் இடம்பெயர நேரிட்டது.

பொருளாதாரம்

மொரோனியில் வனிலா, கொக்கோ, கோப்பி, மென்பானங்கள், பதப்படுத்தப்பட்ட எண்ணெய்கள், உலோக மற்றும் மர உற்பத்திகள் மற்றும் சிமெந்து என்பன உற்பத்தி செய்யப்பட்டு துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூறூனீ&oldid=1550631" இலிருந்து மீள்விக்கப்பட்டது