சுவர்ணலதா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎கதைச் சுருக்கம்: *விரிவாக்கம்*
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
வரிசை 4: வரிசை 4:
image_size = px |
image_size = px |
| caption =
| caption =
| director = [[வை. வி. ராவ்]]
| director = [[ஒய். வி. ராவ்]]
| producer = [[மகாலட்சுமி ஸ்டூடியோஸ்]]
[[ராஜேந்திரா பிலிம் கோ]]
| producer = [[மகாலட்சுமி ஸ்டூடியோஸ்]]
[[ராஜேந்திரா பிலிம் கோ]]
| writer =
| writer = ஏ. ஏ. சோமயாசுலு.பி.ஏ.
| starring = [[கே. அரங்கனாயகி]]
[[சுவர்ணாம்மாள்]]
[[சாரா நாயகி]]
[[நாகலட்சுமி]]
| starring = [[ஒய். வி. ராவ்]]
[[கே. அரங்கனாயகி]]
[[சுவர்ணாம்மாள்]]
[[சாரா நாயகி]]
[[நாகலட்சுமி]]
[[வித்வான் சீனிவாசன்]]
| music =
| music =
| cinematography =
| cinematography =
வரிசை 27: வரிசை 27:
| imdb_id =
| imdb_id =

'''சுவர்ணலதா''' [[1938]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[வை. வி. ராவ்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கே. அரங்கனாயகி]], [[சுவர்ணாம்மாள்]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
'''சுவர்ணலதா''' [[1938]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ஒய். வி. ராவ்]] இயக்கியும், கதாநாயகனாகவும் நடித்து வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கே. அரங்கனாயகி]], [[சுவர்ணாம்மாள்]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

==கதைச் சுருக்கம்==
==கதைச் சுருக்கம்==

17:34, 9 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

சுவர்ணலதா
இயக்கம்ஒய். வி. ராவ்
தயாரிப்புமகாலட்சுமி ஸ்டூடியோஸ்
ராஜேந்திரா பிலிம் கோ
கதைஏ. ஏ. சோமயாசுலு.பி.ஏ.
நடிப்புஒய். வி. ராவ்
கே. அரங்கனாயகி
சுவர்ணாம்மாள்
சாரா நாயகி
நாகலட்சுமி
வித்வான் சீனிவாசன்
வெளியீடுநவம்பர் 5, 1938
நீளம்16980 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சுவர்ணலதா 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஒய். வி. ராவ் இயக்கியும், கதாநாயகனாகவும் நடித்து வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. அரங்கனாயகி, சுவர்ணாம்மாள் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

கதைச் சுருக்கம்

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

சோளபுரம் மிராசுதார் (பெருஞ்செல்வர்) வயதானவர், அவரின் ஒரே மகன் சோமு சேலம் நகரத்திற்கு போனவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி பல வருடங்களாக ஊருக்குத் திரும்பவில்லை. மிட்டாதார் தனது வயது முதிர்வினால் இறந்துவிடுகிறார். அவரது ஆத்மார்த்த நண்பரும், முன்சீபுமான ராகவனிடம் தனது சொத்துக்களை ஒப்படைக்கிறார். மிட்டாதாரரான தனது தந்தை இறந்த்தை அறிந்த சோமு சோளபுரம் வருகிறான், ராகவனின் வீட்டில் தங்கி இருக்கும் போது சோமுவுக்கும், ராகவனின் மூத்த மகள் சுவர்ணலதாவுக்கும் காதல் ஏற்படுகிறது. ஆனால் ராகவனின் தனது இரண்டாவது மனைவி தனது மகளை சோமுவுக்கு முடிக்க திட்டமிட்டு சுவர்ணலதாவை கொடுமைப்படுத்துகிறாள். சித்தியின் கொடுமை தாளமுடியாமல் சுவர்ணலதா தற்கொலை செய்ய ஆற்றில் விழுகிறாள், அச்சமயம் அங்கு வந்த சோமு லதாவைத் தடுத்து சேலத்திற்கு அழைத்துச் சென்றுவிடுகிறான். ராகவன் சுவர்ணலதாவை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. சோமுவும், லதாவும் திருமணம் செய்துகொண்டு சில காலம் இன்ப வாழ்க்கையில் இருக்கும் காலத்தில் கோபாலன் என்பவனின் சேர்க்கையால் சோமு மீண்டும் குடியும், கோகிலம் என்பவளின் தொடர்பால் அனைத்து பணம், சொத்துக்களை இழந்துவிடுகிறான் சோமு. இந்நிலையில் கோகிலம் சோமுவை அடித்து விரட்டிவிடுகிறாள். சோமு கள்ளுக்கடைக்குச் சென்று பெரும் குடிகாரனாகிறான். சோமுவுக்கும், சுவர்ணலதாவுக்கும் குழந்தை பிறக்கிறது, அனாதையான சுவர்ணலதா குழந்தைக்குப் பால் வாங்கக் கூட காசில்லாத சுவர்ணலதா பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்து தெருவில் பிச்சை எடுத்துத் திரிகிறாள். சுவர்ணலதாவை தேடியலைந்த ராகவன் சுவர்ணலதாவை கண்டு தேற்றி விபரம் அறிந்து சோளபுரம் மிட்டாதார் தன்னிடம் கொடுத்துள்ள சொத்துவிபரத்தைத் தெரிவித்து இருவரும் ஆனாதைக் குழந்தைகள் இல்லம் தொடங்கி நடத்துகிறார்கள். சோமு ஒருநாள் அனாதை இல்லத்தின் முன் பசியால் மயங்கி விழுகிறான், அனாதை இல்ல வேலையாட்கள் சோமுவை உள்ளே தூக்கிப்போகிறார்கள். சுவர்ணலதாவை சோமு பார்த்து தனது குடிப்பழக்கத்திற்கு வருந்துகிறான். இனிமேல் குடிப்பதில்லை என சத்தியம் செய்கிறான், படத்தின் இடைஇடையே கதர்சட்டையும், கதர்குல்லாவும் அணிந்து காங்கிரசுகாரர் ஒருவர் குடிக்கு எதிராக பாட்டும், உபதேசமும் செய்து மதுவிலக்குப் பிரச்சாரம் செய்வார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவர்ணலதா_(திரைப்படம்)&oldid=1544250" இலிருந்து மீள்விக்கப்பட்டது