இயற்கைத் தேர்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
எழுத்துப்பிழை திருத்தம், *உரை திருத்தம்*, விக்கியாக்கம்
எழுத்துப்பிழை திருத்தம், *உரை திருத்தம்*, விக்கியாக்கம்
வரிசை 2: வரிசை 2:
'''இயற்கைத் தேர்வு''' என்பது [[சுற்றுச்சூழல்|சுற்றுச்சூழலின்]] பண்புகளைப் பொறுத்து ஒரு [[சனத்தொகை]]யின் குறிப்பிட்ட [[உயிரியல்]] குணவகைகள், மற்றும் [[மரபியல்]] குணவகைகளை ஆதாரமாகக் கொண்டு, அந்தக் குறிப்பிட்ட சனத்தொகை பெரும்பான்மையாகவோ அல்லது சிறுபான்மையாகவோ மாறும் ஒரு இயற்கையான நிகழ்முறை. இது [[அறிவியல்]] சரித்திரத்தில் ஏதோ ஒரு வடிவத்தில் பல [[நூற்றாண்டு]]களாக புழக்கத்தில் இருந்திருந்தாலும், இதைச் சீராக எடுத்துக் கூறியவர் [[சார்லஸ் டார்வின்]] என்பவராகும். இயற்கைத் தேர்வு என்ற இந்தப் பெயரை அவர் பயன்படுத்தியதற்குக் காரணம் இதைச் செயற்கைத் தேர்வோடு, அல்லது தேர்ந்தெடுத்து வளர்ப்பதோடு, நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான். இயற்கைத் தேர்வே [[பரிணாம வளர்ச்சி|பரிணாம வளர்சி]]க்கான ஒரு மத்திய பொறிமுறை.
'''இயற்கைத் தேர்வு''' என்பது [[சுற்றுச்சூழல்|சுற்றுச்சூழலின்]] பண்புகளைப் பொறுத்து ஒரு [[சனத்தொகை]]யின் குறிப்பிட்ட [[உயிரியல்]] குணவகைகள், மற்றும் [[மரபியல்]] குணவகைகளை ஆதாரமாகக் கொண்டு, அந்தக் குறிப்பிட்ட சனத்தொகை பெரும்பான்மையாகவோ அல்லது சிறுபான்மையாகவோ மாறும் ஒரு இயற்கையான நிகழ்முறை. இது [[அறிவியல்]] சரித்திரத்தில் ஏதோ ஒரு வடிவத்தில் பல [[நூற்றாண்டு]]களாக புழக்கத்தில் இருந்திருந்தாலும், இதைச் சீராக எடுத்துக் கூறியவர் [[சார்லஸ் டார்வின்]] என்பவராகும். இயற்கைத் தேர்வு என்ற இந்தப் பெயரை அவர் பயன்படுத்தியதற்குக் காரணம் இதைச் செயற்கைத் தேர்வோடு, அல்லது தேர்ந்தெடுத்து வளர்ப்பதோடு, நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான். இயற்கைத் தேர்வே [[பரிணாம வளர்ச்சி|பரிணாம வளர்சி]]க்கான ஒரு மத்திய பொறிமுறை.


எல்லா ஜனத்தொகைகளிலும் மாறுபடுதல்களுள்ளன. இதற்கு முக்கியமான காரணம் மரபணுத் தகவலில் இயற்கையாக பல காரணங்களால் ஏற்படும் சீரற்ற பிறழ்வு. பிறழ்வுகள் அடுத்த தலைமுறைக்குத் கடத்தப்படுகின்றன. ஒரு விலங்கின் வாழ்னாளில், அதன் மரபணு இடைவிடாது சுற்றுச்சூழலுடன் செயலெதிர்ச்செயலில் ஈடுபட்டு பல மாறுபடுதல்களுக்கு உள்ளாகிறது. இந்த மூலகுழுவில் சுற்றுச்சுழல் என்றால் வெறும் வெளியில் காண்பவை மட்டுமல்ல - இதில் செல்லின் மூலக்கூறு உயிரியல், மற்ற செல்கள், உயிரினங்கள், ஜனத்தொகைகள், இனங்கள் மற்றும் உயிரற்ற சுற்றுச்சூழலும் அடங்கும். ஒரு தனிப்பட்ட விலங்கு அதன் தனிமுறன்பாட்டு மாறுபடுதல்களால் வேறு சில மாறுபடுதல்கள் கொண்ட விலங்குகளை விட சிறந்த முறையில் சுற்றுச்சூழலில் அந்த மாறுபடுதலுக்கு ஏதோ உகந்ததாக இருக்கும் காரணத்தினால் பிழைத்து பிரது உண்டாக்கலாம்.
எல்லா சனத்தொகைகளிலும் வேறுபாடுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இதற்கு முக்கியமான காரணம் [[மரபணு]]த் தகவலில் இயற்கையாக பல காரணங்களால் ஏற்படும் சீரற்ற பிறழ்வுகளாகும். இத்தகைய பிறழ்வுகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுமாயின் அவை தொடர்ந்த [[சந்ததி]]களூடாக எடுத்துச் செல்லப்படும். ஒரு [[உயிரினம்]] தனது வாழ்நாளில், அதன் சுற்றுச்சூழலுடன் இடைவிடாது செயலெதிர்ச்செயலில் ஈடுபடுவதால், பல மாறுதல்களுக்கு உள்ளாகிறது. இதில் சுற்றுச்சுழல் எனும்போது, அது குறிப்பிட்ட உயிரினத்திற்கு வெளியில் காண்பவை மட்டுமல்ல. இதில் [[உயிரணு]]க்களின் [[மூலக்கூற்று உயிரியல்]], ஏனைய உயிரணுக்களுடனான தொடர்புகள், வேறு உயிரினங்கள், வேறு சனத்தொகைகள், வேறு இனங்கள் போன்றவற்றுடன், உயிரற்ற சுற்றுச்சூழலும் அடங்கும். ஒரு தனிப்பட்ட உயிரினம் அதில் ஏற்படும் தனிமுரண்பாட்டு மாறுதல்களால், வேறு உயிரினங்களை விடச் சிறந்த முறையில் சுற்றுச்சூழலில் தன்னைத் தக்க வைத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். இதன் காரணத்தினால் பிழைத்து தொடர்ந்தும் தப்பி வாழக் கூடியதாக இருக்கும். இயற்கைத் தேர்வு நவீன உயிரியலின் முக்கிய பாகமாகும்.
இயற்கைத் தேர்வு நவீன உயிரியலின் முக்கிய பாகமாகும்.


==முக்கிய நியமங்கள்==
==முக்கிய நியமங்கள்==

11:19, 7 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

இயற்கைத் தேர்வு என்பது சுற்றுச்சூழலின் பண்புகளைப் பொறுத்து ஒரு சனத்தொகையின் குறிப்பிட்ட உயிரியல் குணவகைகள், மற்றும் மரபியல் குணவகைகளை ஆதாரமாகக் கொண்டு, அந்தக் குறிப்பிட்ட சனத்தொகை பெரும்பான்மையாகவோ அல்லது சிறுபான்மையாகவோ மாறும் ஒரு இயற்கையான நிகழ்முறை. இது அறிவியல் சரித்திரத்தில் ஏதோ ஒரு வடிவத்தில் பல நூற்றாண்டுகளாக புழக்கத்தில் இருந்திருந்தாலும், இதைச் சீராக எடுத்துக் கூறியவர் சார்லஸ் டார்வின் என்பவராகும். இயற்கைத் தேர்வு என்ற இந்தப் பெயரை அவர் பயன்படுத்தியதற்குக் காரணம் இதைச் செயற்கைத் தேர்வோடு, அல்லது தேர்ந்தெடுத்து வளர்ப்பதோடு, நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான். இயற்கைத் தேர்வே பரிணாம வளர்சிக்கான ஒரு மத்திய பொறிமுறை.

எல்லா சனத்தொகைகளிலும் வேறுபாடுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இதற்கு முக்கியமான காரணம் மரபணுத் தகவலில் இயற்கையாக பல காரணங்களால் ஏற்படும் சீரற்ற பிறழ்வுகளாகும். இத்தகைய பிறழ்வுகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுமாயின் அவை தொடர்ந்த சந்ததிகளூடாக எடுத்துச் செல்லப்படும். ஒரு உயிரினம் தனது வாழ்நாளில், அதன் சுற்றுச்சூழலுடன் இடைவிடாது செயலெதிர்ச்செயலில் ஈடுபடுவதால், பல மாறுதல்களுக்கு உள்ளாகிறது. இதில் சுற்றுச்சுழல் எனும்போது, அது குறிப்பிட்ட உயிரினத்திற்கு வெளியில் காண்பவை மட்டுமல்ல. இதில் உயிரணுக்களின் மூலக்கூற்று உயிரியல், ஏனைய உயிரணுக்களுடனான தொடர்புகள், வேறு உயிரினங்கள், வேறு சனத்தொகைகள், வேறு இனங்கள் போன்றவற்றுடன், உயிரற்ற சுற்றுச்சூழலும் அடங்கும். ஒரு தனிப்பட்ட உயிரினம் அதில் ஏற்படும் தனிமுரண்பாட்டு மாறுதல்களால், வேறு உயிரினங்களை விடச் சிறந்த முறையில் சுற்றுச்சூழலில் தன்னைத் தக்க வைத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். இதன் காரணத்தினால் பிழைத்து தொடர்ந்தும் தப்பி வாழக் கூடியதாக இருக்கும். இயற்கைத் தேர்வு நவீன உயிரியலின் முக்கிய பாகமாகும்.

முக்கிய நியமங்கள்

இயற்கைத் தேர்வானது இயற்கைச் சூழலிலுள்ள அனைத்து உயிரினங்களின் வாழ்க்கை வெற்றியை நிர்ணயிக்கும் செயற்பாடாகும். உதாரணமாக வேகமாக ஓடும் முயலால் இரைகௌவிகளிடமிருந்து தப்பி வாழ முடியும். காலப்போக்கில் வேகமாக ஓட முடியாத முயல்கள் இரைகௌவிகளிடம் பிடிபட்டு அழிய வேகமாக ஓடும் முயல்களின் இனப்பெருக்கத்தால் உருவாகும் முயல்களே தப்பும். எனவே முயல் கூட்டமொன்றில் வேகமாக ஓடும் முயல்களின் மரபணு நிலைத்திருத்தல் இயற்கைத் தேர்வுக்கு உதாரணமாகும்.

வெள்ளை நிற அந்துப்பூச்சி கண்ணுக்கு இலகுவில் புலப்படாத அதேவேளை கறுப்பு நிற அந்து தெளிவாகத் தெரிகின்றது. எனவே கறுப்பு நிற அந்துக்கள் பறவைகளுக்கு இலகு இரைகளாகக் காணப்பட்டன.

ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்வு இயற்கைத் தேர்வினை உறுதிப்படுத்தியது. Peppered moth எனப்படும் அந்துப்பூச்சி இனத்தில் typica எனப்படும் வெள்ளை நிற வகையும் carbonaria எனப்படும் கபில நிற வகையும் காணப்பட்டன. இவற்றில் வெள்ளை நிறமானவை மரத்தண்டின் நிறத்தோடு ஒத்திருந்ததால் பறவைகளால் இலகுவில் அடையாளம் காணப்படவில்லை. எனவே வெள்ளை நிற அந்துக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஐக்கிய இராச்சியத்தில் கைத்தொழில் புரல்சியின் பின் மரத்தண்டுகளில் கரி படிந்தமையால் கறுப்பி நிற அந்துக்களின் நிறம் மரத்தண்டினை ஒத்திருந்தது. இதனால் கறுப்பு அந்துக்களின் எண்ணிக்கை மாசடைந்த பிரதேசங்களில் அதிகமானமை இயற்கைத் தேர்வை உறிதிப்படுத்தும் நிகழ்வாகும்.

மேற்கூறிய நிகழ்விலிருந்து தக்கன பிழைத்தல் என்ற இயற்கைத் தேர்வின் முக்கிய நியமம் புலனாகின்றது. 'தக்கன' எனப்படுவது ஒரு உயிரினம் எவ்வளவு காலம் உயிர்வாழ்கின்றது என்பதல்ல, அது இனப்பெருக்கத்தில் எந்தளவுக்கு வெற்றியடைகின்றது என்பதேயாகும். உதாரணமாக் ஒரு உயிரினம் அதன் கூட்டத்தை விட குறுகிய காலம் வாழ்ந்தாலும் அதிக குட்டிகளை உருவாக்கினால் அதுவே 'தக்கன' எனப்படும். ஏனெனில் அதன் மரபணுப் பரம்பலின்அளவே அதிகமாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயற்கைத்_தேர்வு&oldid=1542294" இலிருந்து மீள்விக்கப்பட்டது