சகாரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 117: வரிசை 117:
அல்சீரியா, தோகோ, நைசர், மாலி முதலான பகுதிகளில் சகாரா சிறுத்தைகள் காணப்படுகின்றன. சிறு அளவிலான ஆப்பிரிக்கக் காட்டு நாய்களும் உள்ளன.
அல்சீரியா, தோகோ, நைசர், மாலி முதலான பகுதிகளில் சகாரா சிறுத்தைகள் காணப்படுகின்றன. சிறு அளவிலான ஆப்பிரிக்கக் காட்டு நாய்களும் உள்ளன.


பல்லிகள், மணல் விரியன், [[நெருப்புக் கோழி]] முதலியன இங்கு காணப்படும் மற்ற விலங்குகளாகும்.
பல்லிகள், [[மணல் விரியன்]], [[நெருப்புக் கோழி]] முதலியன இங்கு காணப்படும் மற்ற விலங்குகளாகும்.


[[பகுப்பு:பாலைவனங்கள்]]
[[பகுப்பு:பாலைவனங்கள்]]

12:14, 26 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

சகாரா (الصحراء الكبرى)
பெரும்பாலைவனம்
பாலைவனம்
நாசாவால் எடுக்கப்பட்ட சகாரா பாலைவனத்தின் தோற்றம்/
நாடுகள் அல்ஜீரியா, சாட், எகிப்து, எரித்ரியா, லிபியா, மாலி, மௌரிடானியா, மொரோகோ, நைகர், சூடான், துனிசியா, மேற்கு சகாரா
மிகவுயர் புள்ளி எமி கௌசி 11,204 அடி (3,415 m)
 - ஆள்கூறுகள் 19°47′36″N 18°33′6″E / 19.79333°N 18.55167°E / 19.79333; 18.55167
மிகத்தாழ் புள்ளி கட்டாரா தாழ்மையம் −436 அடி (−133 m)
 - ஆள்கூறு 30°0′0″N 27°5′0″E / 30.00000°N 27.08333°E / 30.00000; 27.08333
நீளம் 4,800 கிமீ (2,983 மைல்), E/W
அகலம் 1,800 கிமீ (1,118 மைல்), N/S
பரப்பு 94,00,000 கிமீ² (36,29,360 ச.மைல்)
Biome பாலைவனம்

சஃகாரா அல்லது சஹாரா பாலைவனம் ஆப்பிரிக்காவின் வடபகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய சுடு பாலைவனம் ஆகும். குளிர்பனிப் பாலை நிலமாக அண்டார்ட்டிக்காவைக் கொண்டால் சகாரா பாலைவனம் இரண்டாவது மிகப் பெரிய பாலை ஆகும். இதன் பரப்பளவு 9,000,000 சதுர கிலோமீட்டர்களாகும் (3,500,000 சதுர மைல்கள்). இப் பரப்பானது ஏறத்தாழ ஐக்கிய அமெரிக்க நாடுகள் அளவுக்கு பெரியதாகும். இப் பாலைவனம் ஏறத்தாழ 2.5 மில்லியன் ஆண்டுப் பழமை வாய்ந்தது. அதற்கு முன் இங்கே ஏரிகளும் ஆறுகளும் இருந்தன.

இங்குள்ள சில மணற்குன்றுகள் கிட்டத்தட்ட 180மீ (590 அடி) உயரம் வரை இருக்கும். சகாரா என்னும் பெயர் பொதுவாக வழங்கினாலும், இது அரபு மொழியிற் பாலைவனம் என்னும் சொல்லாகிய சஹ்றா (صحراء) என்பதில் இருந்து எழுந்ததாகும்.

தாவரங்களும் விலங்குகளும்

சாடு நாட்டின் வடகிழக்குப் பகுதியில் ஒட்டகக் கூட்டம்

இந்திய ஒட்டகங்களும் ஆடுகளுமே சகாராவில் அதிகளவு காணப்படும் விலங்குகளாகும். பாலை நிலத்தில் வாழத் தகவமைத்துக்கொண்டுள்ளபடியால் ஒட்டகங்கள் இங்குள்ள நாடோடிகளால் விரும்பி வளர்க்கப்படுகின்றன.

பாலத்தீன மஞ்சட் தேள் என்னும் தேள் இங்கு காணப்படுகிறது. இது 10 செ.மீ நீளம் வரை வளரும். இத்தேள் மிகவும் நச்சு வாய்ந்தது எனினும் இத்தேள் கொட்டுவதால் வளர்ந்த மனிதர்கள் இறப்பது அரிதே.

பல வகையான நரிகளும் இங்கு காணப்படுகின்றன. அடாக்சு எனப்படும் பெரிய வெண்ணிற இரலை இங்கு காணப்படுகிறது. இது நீண்ட நாட்கள் நீரில்லாமல் தாக்குப்பிடிக்க வல்லது. மேலும் தோர்க்காசு, ரிம், தாமா எனப்படும் சிறுமான்களும் காணப்படுகின்றன. இவையும் நீரில்லாமல் நீண்ட நாட்கள் வாழக்கூடியன.

அல்சீரியா, தோகோ, நைசர், மாலி முதலான பகுதிகளில் சகாரா சிறுத்தைகள் காணப்படுகின்றன. சிறு அளவிலான ஆப்பிரிக்கக் காட்டு நாய்களும் உள்ளன.

பல்லிகள், மணல் விரியன், நெருப்புக் கோழி முதலியன இங்கு காணப்படும் மற்ற விலங்குகளாகும்.

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=சகாரா&oldid=1530185" இலிருந்து மீள்விக்கப்பட்டது