தொல்லியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
சி 117.221.211.33 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1528487 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 14: வரிசை 14:
இதன்பிறகு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய நாடுகளில் இத்துறை பெரும் வளர்ச்சி அடைந்தது. ஐரோப்பியர்கள் மறைந்து போனதாகக் கருதப்படும் ட்ராய் நிலத்தை பற்றி அறிவதற்கான முயற்சிகளும் சார்லசு டார்வினின் பரிணாமக் கொள்கையும் இத்துறை வளர்ந்ததற்கு முக்கியக் காரணிகளாக கருதப்படுகின்றன.
இதன்பிறகு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய நாடுகளில் இத்துறை பெரும் வளர்ச்சி அடைந்தது. ஐரோப்பியர்கள் மறைந்து போனதாகக் கருதப்படும் ட்ராய் நிலத்தை பற்றி அறிவதற்கான முயற்சிகளும் சார்லசு டார்வினின் பரிணாமக் கொள்கையும் இத்துறை வளர்ந்ததற்கு முக்கியக் காரணிகளாக கருதப்படுகின்றன.


ɣzd͡zn̩ʒ== கல்விசார் துணைத் துறைகள் ==
== கல்விசார் துணைத் துறைகள் ==


காலத்தினால் அல்லது பிரதேசத்தினால் வேறுபடுத்தப்படுகின்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட சில துணைத்துறைகளைக் கீழே காண்க.
காலத்தினால் அல்லது பிரதேசத்தினால் வேறுபடுத்தப்படுகின்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட சில துணைத்துறைகளைக் கீழே காண்க.

14:34, 24 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

இத்தாலியின், 2000 ஆண்டுக்காலப் பழமை வாய்ந்த பண்டைக்கால ரோமில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது.
ரோமன் அரங்கு, அலெக்சாந்திரியா, எகிப்து

தொல்பொருளியல் அல்லது தொல்லியல் (Archaeology) என்பது, கட்டிடக்கலை, தொல்பொருட்கள் (artifacts), தொல்லுயிர் எச்சம், மனித மிச்சங்கள், மற்றும் நிலத் தோற்றங்கள் என்பன உள்ளிட்ட எஞ்சிய பொருட்களைக் வெளிக்கொணர்ந்து, ஆவணப்படுத்தி, பகுப்பாய்வு செய்வதன் மூலம் செய்யப்படும் மனிதப் பண்பாடு பற்றிய படிப்பாகும்.

தொல்பொருளியலின் இலக்குகள் வேறுபடுவதுடன், இதன் நோக்கங்கள், பொறுப்புக்கள் தொடர்பான வாதங்களும் இருந்துவருகின்றன. சில இலக்குகள், வரலாற்றுக்கு முந்திய மற்றும் வரலாற்றுக் கால மனிதப் பண்பாட்டின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் ஆவணப்படுத்தல், அவற்றை விளக்குதல்; பண்பாட்டு வரலாற்றைப் புரிந்து கொள்ளுதல்; பண்பாட்டுப் படிமுறை வளர்ச்சியைக் கால வரிசைப்படுத்தல்; மனித நடத்தைகள் பற்றி ஆய்வு செய்தல் என்பவற்றை உள்ளடக்குகின்றன.

தொல்லியலாளர்கள், தங்கள் துறையில் பயன்படுத்தப்படும் முறைகள் பற்றி ஆய்வு செய்வதிலும் கவனம் செலுத்துகின்றனர். அத்துடன், கடந்தகாலம் பற்றிய அவர்களது கேள்விகளில் தொக்கி நிற்கும் கோட்பாட்டு மற்றும் தத்துவம் சார்ந்த அடிப்படைகள் தொடர்பான ஆய்வுகளிலும் அவர்களுக்கு ஆர்வம் உண்டு. புதிய தொல்லியற் களங்களைக் கண்டுபிடித்தல், அவற்றில் அகழ்வாய்வு செய்தல், வகைப்படுத்தல், பகுப்பாய்தல் பேணிக்காத்தல் என்பனவெல்லாம், தொல்லியல் சார்ந்த வழிமுறைகளின் பல்வேறு முக்கியமான கட்டங்கள் ஆகும். இவை ஒருபுறம் இருக்கத் தொல்லியலில் பெருமளவு பல்துறைசார் ஆய்வுகளும் நடைபெறுகின்றன. இதற்காக இது, வரலாறு, கலை வரலாறு, செந்நெறி இலக்கியம், புவியியல், நிலவியல், இயற்பியல், தகவல் அறிவியல், வேதியியல், புள்ளியியல், தொல்பழங்காலச்சூழலியல், தொல்விலங்கியல், தொல்தாவரவியல் போன்ற துறைகளில் தங்கியுள்ளது.

தொல்லியலின் வரலாறு

ஃபிளவியோ பியோன்டோ என்ற இத்தாலிய வரலாற்று அறிஞர் பண்டைய ரோமின் தொல்பொருட்களைக் கொண்டு ஒரு முறையான காலக்கணிப்பு முறையை உருவாக்கினார். அதனால் இவர் தொல்லியலைக் கண்டுபிடித்தவர் என்று போற்றப்படுகிறார். சிரியேக்கோ பிசிகோலி என்ற இத்தாலிய வணிகர் கிழக்கு மத்திய கடலில் உள்ள தொல்பொருள்களைக் கொண்டு கமான்டரியா என்ற ஆறு தொடர் புத்தகங்களை பதினான்காம் நூற்றாண்டில் எழுதினார். அதனால் இவர் தொல்லியலின் தந்தை என்று போற்றப்படுகிறார்.

இதன்பிறகு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய நாடுகளில் இத்துறை பெரும் வளர்ச்சி அடைந்தது. ஐரோப்பியர்கள் மறைந்து போனதாகக் கருதப்படும் ட்ராய் நிலத்தை பற்றி அறிவதற்கான முயற்சிகளும் சார்லசு டார்வினின் பரிணாமக் கொள்கையும் இத்துறை வளர்ந்ததற்கு முக்கியக் காரணிகளாக கருதப்படுகின்றன.

கல்விசார் துணைத் துறைகள்

காலத்தினால் அல்லது பிரதேசத்தினால் வேறுபடுத்தப்படுகின்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட சில துணைத்துறைகளைக் கீழே காண்க.

காலக்கணிப்பு முறைகள்

தொல்லியல் அகழாய்வுகளில் கிடைக்கும் பொருட்களை பல்வேறு முறைகளில் கிடைக்கும் பொருட்களின் தன்மைக்கு ஏற்ப அவற்றைக் காலக்கணிப்புக்கு உட்படுத்துகின்றனர். அவற்றை மூன்றாக வகைப்படுத்தி சார்பற்ற காலக்கணிப்பு முறைகள், சார்புடைய காலக்கணிப்பு முறைகள், சமான காலக்கணிப்பு முறைகள் அவற்றின் கீழ் பல்வேறு முறைகளை உள்ளடக்குகின்றனர்.

சார்பற்ற காலக்கணிப்பு முறைகள்

  1. கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு
  2. கால இடைவெளி அளவியல்
  3. வெப்பக்குழலாய்வுச் காலக்கணிப்பு
  4. ஒளிக்குழல் காலக்கணிப்பு
  5. நாணயவியல்
  6. பொட்டாசியம்-ஆர்கான் காலக்கணிப்பு
  7. ஈய அரிப்புச் காலக்கணிப்பு
  8. அமினோ அமிலக் காலக்கணிப்பு
  9. தொல்பொருளின் மேல் படிந்த எரிமலைக் குழம்புக் கட்டியின் மீது நீரை பாய்ச்சும் முறை

சார்புடைய காலக்கணிப்பு முறைகள்

சார்புடைய காலக்கணிப்பு முறைகளாக அதிகம் அறிய வருவது மண்ணடுக்காய்வாகும். இம்முறையின் படி அகழாய்வில் கிடைக்கும் பொருள் எத்தனை அளவு ஆழத்தில் கிடைக்கின்றன என்பதை பொறுத்து தோண்டி எடுக்கப்பட்ட தொல்பொருளின் காலம் கணிக்கப்படுகிறது.

சமான காலக்கணிப்பு முறைகள்

  1. தொல் புவிகாந்தவியல் - பூமியின் துருவங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் மாறிக்கொண்டே இருக்கும். அகழாய்வில் கிடைத்த தொல்பொருளின் பாலத்தில் உள்ளப்பாறைகளில் அக்காலத்தில் பாறையின் அச்சு எங்கிருந்தது என்பதை கணித்து அதை இப்போது பாறையின் அச்சு இருக்கும் இடத்தோடு தொடர்புப்படுத்தி அதில் வரும் கோண வித்யாசங்களைக் கொண்டு தொல்பொருளின் காலத்தை கணிக்கும் முறை.
  2. எரிமலைச்சாம்பல் காலக்கணிப்பு - அகழாய்வில் கிடைத்த தொல்பொருளின் பாலத்தில் ஏதேனும் எரிமலைக் குழம்பின் துணுக்குகள் காணப்பட்டால் அத்துணுக்கு எந்த எரிமலையில் வந்தது என்பதை கண்டறிந்து அந்த எரிமலை வெடித்ததன் காலத்தை தொடர்புப்படுத்தி தொல்பொருளின் காலத்தை கணிக்கும் முறை.
  3. உயிர்வளிம ஓரகத் தனிம மண்ணடுக்காய்வு - அகழாய்வில் கிடைத்த தொல்பொருளின் காலத்தில் இருந்த வானிலையைக் கொண்டு காலம் கணித்தல். (எ.கா. இடைப்பணியூழியின் பாலநிலையில் உள்ள பொருள் 1,15,000 ஆண்டுகள் பழமையானது என கணிக்கப்படும்.

தொடர்பானவை

இவற்றையும் பார்க்கவும்

வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொல்லியல்&oldid=1528496" இலிருந்து மீள்விக்கப்பட்டது