திருவண்ணாமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 12°20′N 79°07′E / 12.33°N 79.11°E / 12.33; 79.11
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
வரிசை 6: வரிசை 6:
|locator position = right
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{திருவண்ணாமலை}}
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம்=திருவண்ணாமலை
|மாவட்டம்=திருவண்ணாமலை
|தலைவர் பதவிப்பெயர்=நகராட்சித் தலைவர்
|தலைவர் பதவிப்பெயர்=நகராட்சித் தலைவர்

00:57, 23 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

திருவண்ணாமலை
—  சிறப்பு நிலை நகராட்சி  —
படிமம்:இரவு நேர திருவண்ணாமலை.jpg
வரைபடம்:திருவண்ணாமலை, இந்தியா
திருவண்ணாமலை
இருப்பிடம்: திருவண்ணாமலை

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°20′N 79°07′E / 12.33°N 79.11°E / 12.33; 79.11
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி. முருகேஷ், இ. ஆ. ப [3]
நகராட்சித் தலைவர் என்.பாலச்சந்தர்
ஆணையர் ஆர். சேகர்
மக்களவைத் தொகுதி திருவண்ணாமலை
மக்களவை உறுப்பினர்

சி. என். அண்ணாத்துரை

சட்டமன்றத் தொகுதி திருவண்ணாமலை
சட்டமன்ற உறுப்பினர்

எ. வ. வேலு (திமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

3,80,301 (2001)

27,881/km2 (72,211/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

13.64 சதுர கிலோமீட்டர்கள் (5.27 sq mi)

171 மீட்டர்கள் (561 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.municipality.tn.gov.in/thiruvannamalai

திருவண்ணாமலை (ஆங்கிலம்:Tiruvannamalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பு நிலை நகராட்சி ஆகும். திருவண்ணாமலை மாவட்டத்தின் தலைநகரும் இதுவே ஆகும்.

படிமம்:திருவண்ணாமலை வழிகாட்டி.jpg

திருவண்ணாமலை நகரம் உருவாக்கம்

  • திருவண்ணாமலையில் மக்கள் கி.மு 1 ஆம் நூற்றண்டுக்கு முன்னரே நகரமைத்து வாழ்ந்து வருகின்றனர். இது "மதுரை" நகரினைவிட பழமையானது என்று சிலரால் கூறப்படுகிறது.
  • திருவண்ணாமலை நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஓன்றாகும். திருவண்ணாமலை நகரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் வருகின்றது. *சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன் திருவண்ணாமலை நகரத்தை ஆண்டதை பரிபாடல் மூலம் அரிய முடிகின்றது. *கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் திருவண்ணாமலை குறிப்பிடப் பெறுகிறது. கி.பி. 2ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது. கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் முக்கிய நகராக விளங்கிய திருவண்ணாமலை, கலை, மற்றும் தமிழ், சமஸ்கிருத மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது. *பல்லவர்கள் ஆட்சிக்கு முன் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய தற்கால மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தின் முக்கிய நகராக விளங்கியது.
திருவண்ணாமலை நகராட்சி முத்திரை
படிமம்:திருவண்ணாமலை நகர சாலை.jpg
பெரிய வீதி

திருவண்ணாமலை 1866 இல் "மூன்றாம் நிலை நகராட்சி"யாக உருவாக்கபெற்றது. *1946 இல் இரண்டாம் நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டு, 1971 இல் முதல் நிலை நகரட்சியாக உருவானது.

  • 1998 இல் தேர்வு நிலை நகராட்சியாக, 2003 இல் "சிறப்பு நிலை நகராட்சி"யாகவும் தரம் உயர்த்தப்பட்டது.
படிமம்:Night light arunai city.jpg
அண்ணாமலையார் நகரில் இருந்து விரியும் இரவு நேர மின்னொளி கட்சி ..........ஒளியில் மிதக்கும் அருணை நகரமும் புறநகரான தென்மத்தூரும்.

தக்காண பீடபூமி உருவாக்கம்

திருவண்ணாமலை மலை ஒரு இறந்த எரிமலையாகும். பல நூற்றாண்டுக்கு முன் இது வெடித்து இதன் தீ குழம்பு நீரில் தோய்ந்து உருவானதுதான் தக்காணம் என்றும் சிலர் கூறுவார்.

கோவில்நகரம்

சிவனின் பஞ்சபூத தலங்களில், திருவண்ணாமலை அக்னி தலமாகும். பிற தலங்களில், சிதம்பரம் ஆகாயத்தையும், காளஹஸ்தி காற்றையும், திருவானைக்கோவில் நீரையும், காஞ்சிபுரம் நிலத்தையும் குறிக்கும் தலங்கள் ஆகும்.

திருவண்ணாமலையில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடந்துகொண்டு இருக்கும். இது தவிர ஓரு வருடத்தில் நான்கு முறை கொண்டாடப்படும் பிரம்மோற்சவங்களில், தமிழ் மாதமாம் கார்த்திகையில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவமே மிக சிறப்பானதாகும். இது ஆங்கில மாதம் நவம்பர் (November) அல்லது டிசம்பர் (December) மாதம் வரும்.

இத்திருவிழா, பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் பத்தாம் நாள் திருவிழாவே கார்த்திகை தீபத்திருவிழா ஆகும். இந்த பத்தாம் நாளன்று காலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும். பின்னர் மாலை அண்ணாமலை என அழைக்கப்படும் மலையின் உச்சியில் நெய்யினால் தீபம் ஏற்றப்படும்[4]. இந்த தீபமானது தொடர்ந்து பதினோறு நாட்கள் எரியக்கூடியது.

இத்திருவிழா மட்டுமின்றி, ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பக்தர்கள் அண்ணாமலையை வலம் வருவார்கள். இது கிரிவலம் என அழைக்கப்படுகிறது. இம்மலையின் சுற்றளவு 14 கிமீ அகும். இத்தூரத்தை மக்கள், காலில் செருப்பு அணியாமல் சுற்றி வருவர்.

இங்கு பல சித்தர்களும் வேதாந்திகளும் வாழ்ந்துள்ளனர்/வாழ்கின்றனர். பகவான் இரமண மகரிஷி இறக்கும் வரை (1950) திருவண்ணாமலையில் வாழ்ந்தார்.

திருவண்ணாமலைத் திருத்தலம்
அண்ணாமலையார் மலைமும் அங்கிருந்து தெரியும் நகரின் காட்சியும்

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 12°13′N 79°04′E / 12.22°N 79.07°E / 12.22; 79.07 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 171 மீட்டர் (561 அடி) உயரத்தில் இருக்கின்றது.

தட்பவெப்ப நிலைத் தகவல், திருவண்ணாமலை (1951–1980)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 35.3
(95.5)
39.8
(103.6)
42.8
(109)
44.4
(111.9)
45.0
(113)
44.3
(111.7)
40.9
(105.6)
39.4
(102.9)
39.6
(103.3)
39.2
(102.6)
35.8
(96.4)
35.0
(95)
45.0
(113)
உயர் சராசரி °C (°F) 29.2
(84.6)
32.0
(89.6)
35.0
(95)
37.1
(98.8)
38.5
(101.3)
36.3
(97.3)
34.6
(94.3)
34.0
(93.2)
34.0
(93.2)
33.0
(91.4)
29.5
(85.1)
28.3
(82.9)
33.46
(92.23)
தாழ் சராசரி °C (°F) 18.2
(64.8)
19.2
(66.6)
21.3
(70.3)
24.8
(76.6)
26.3
(79.3)
26.0
(78.8)
25.1
(77.2)
24.6
(76.3)
24.1
(75.4)
22.9
(73.2)
20.8
(69.4)
19.2
(66.6)
22.71
(72.88)
பதியப்பட்ட தாழ் °C (°F) 10.2
(50.4)
12.0
(53.6)
12.1
(53.8)
13.8
(56.8)
18.1
(64.6)
19.6
(67.3)
18.8
(65.8)
18.7
(65.7)
18.7
(65.7)
15.6
(60.1)
12.1
(53.8)
9.3
(48.7)
9.3
(48.7)
பொழிவு mm (inches) 9.0
(0.354)
7.1
(0.28)
5.9
(0.232)
21.8
(0.858)
83.9
(3.303)
71.0
(2.795)
117.0
(4.606)
124.9
(4.917)
149.6
(5.89)
176.9
(6.965)
155.2
(6.11)
78.6
(3.094)
1,000.9
(39.406)
சராசரி பொழிவு நாட்கள் 0.8 0.5 0.4 1.3 4.7 5.3 6.6 7.8 7.6 9.4 7.7 3.9 56
ஆதாரம்: India Meteorological Department,[6]

மக்கள் வகைப்பாடு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 144,683 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[7] இவர்களில் 72,351 ஆண்கள், 72,332 பெண்கள் ஆவார்கள். நாகப்பட்டினம் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85.6%, பெண்களின் கல்வியறிவு 77.7% ஆகும். நாகப்பட்டினம் மக்கள் தொகையில் 14,530 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

அருணாசலேஸ்வரர் மலையிலிருந்து அருணாசலேஸ்வரர் கோயில் வளாகத் தோற்றம்

சிறப்புகள்

அண்ணாமலையார் ஆலயம் மிகவும் புகழ்வாய்ந்தது. இறைவன் பெயர் - அண்ணாமலையார் (அருணாசலேச்சுவரர்) இறைவி பெயர் - உண்ணாமுலை அம்மன் (அபீதகுஜலாம்பாள்) புகழ் பெற்ற விழா - திருகார்த்திகை தீபம் விழா காலம் - கார்த்திகை மாதம்

போக்குவரத்து

திருவண்ணாமலை தொடருந்து மற்றும் சாலை மூலமாக பெரு நகரங்களுடன் நன்கு இணைக்கபட்டுள்ளது.


தொடருந்துப் போக்குவரத்து

திருவண்ணாமலை ரயில் நிலையம்

தென்னக இரயில்வே யின் பழைய மெயின் லைன் எனப்படும் சித்தூர்,காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர், கடலூர் ரயில் பாதையில் திருவண்ணாமலை உள்ளது. இப்பாதை பயணிகள் போக்குவரத்துக்கு 1867 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. திருவண்ணாமலை சந்திப்பில் இருந்து சேலத்திற்கு ஒரு ரயில் பாதை உள்ளது.

திருவண்ணாமலை ரயில் பாதை மின்மயமாக்க பட்ட ரயில் பாதையாகும். திருவண்ணாமலைலிருந்து

  • பெங்களூர் - எஸ்வந்த்பூர்
  • கொல்கத்தா - ஹௌரா
  • ஷீரடி சாய்பாபா
  • திருப்பதி ஆகிய ஊர்களுக்கும்
  • கடலூர்
  • பாண்டிச்சேரி
  • மன்னார்குடி
  • மாயவரம்
  • கும்பகோணம்
  • தஞ்சாவூர்
  • திருச்சி
  • திண்டுக்கல்
  • மதுரை ஆகிய ஊர்களும் ரயில் சேவை உள்ளது.

6 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட

  • திருவண்ணாமலை - தாம்பரம் ரயில் ,
  • திருவண்ணமலை - காட்பாடி - சென்ட்ரல் ரயில் சேவைகள் தொடங்கப்பட உள்ளன.

மேலும்

  • காட்பாடி - விழுபுரம் பணிகள் ரயில்
  • காட்பாடி - திருவண்ணாமலை பயணிகள் ரயில்
  • கடலூர் - ஆரணி ரோடு பயணிகள் ரயில் தினம்தோறும் இயக்கபடுகின்றன.

இரயில் அட்டவணை

no.


train name


Trains from


Trains to


Trains via

service


1


காட்பாடி- திருவண்ணாமலை -விழுப்புரம் - கடலூர் பயனியர் ரயில்


காட்பாடி


கடலூர்


Vellore , kanamangalam , arni road , polur , Thurinjapuram , Thiruvannamalai , tandarai , arakandanallur , villupuram , panruti , thirupadripuliyur , cudalore N.T


daily twice


2


பெங்களூர் - திருவண்ணாமலை பயனியர் ரயில்


பெங்களூர் கண்டோன்மென்ட்


திருவண்ணாமலை


thurinjapuram , polur , arni road , vellore , katpadi , jolarpet , bangarupet , krishnarajapuram , bangalore cantonment - malleswaram - bangalore city daily



3


தாம்பரம் - திருவண்ணாமலை விரிவாக்கம் (EXTENSION .) பயணிகள் ரயில்


தாம்பரம்


தண்டரை


chinglepet , kanchipuram , arakkonam, vellore - katpadi , arni road , polur , thiruvanamalai


daily


சாலைப் போக்குவரத்து

திருவண்ணாமலை நல்ல ரயில் மற்றும் சாலை வலைப்பின்னல் மூலமாக இணைக்கப்பட்டிருக்கும் நகரமாகும். புதுச்சேரி , சிதம்பரம், மற்றும் விழுப்புரம் போன்ற திருவண்ணாமலை நகரங்களில் செல்ல அடிக்கடி பேருந்துகள். தமிழ்நாட்டில் சென்னை, திருச்சிராப்பள்ளி, போன்ற முக்கிய நகரங்கள செல்ல அடிக்கடி பேருந்துகள் சாலை வழியாக அனைத்து மாவட்டத்தின் பெரு நகரங்களுடன் இணைக்கபட்டுள்ளது. திருவண்ணாமலை இருந்து மூன்று நெடுஞ்சாலைகள் துவங்கி பிற நகரங்களை சென்று அடைகின்றன, அவை


  • தேசிய நெடுஞ்சாலை 234 - (மங்களூர் - பாண்டிச்சேரி சாலை ) மங்களூர் - பேலூர் - ஹுளியார் - குரிபிட்டனுர் - சிக்கு பல்லாபூர் - வேங்கடகிரிகொட்டா - பேர்ணாம்பட்டு - குடியாத்தம் - வேலூர் நகரம் - - போளுர் - திருவண்ணாமலை பேருந்து நிலையம் - திருவண்ணாமலை நகரம் - கண்டாச்சிபுரம் - வில்லியனூர் - புதுவை .


  • தேசிய நெடுஞ்சாலை 234 A (அ) எஸ்.எச்.9 சித்தூர் - கடலூர் சாலை (சித்தூர் - வேலூர் காட்பாடி - வேலூர் நகரம் - கண்ணமங்கலம் - போளூர் - கலசபாக்கம் - தி.மலை ஆட்சியரகம் - திருவண்ணாமலை நகரம் - தி.மலை சாரோன் - வேறையூர் - திருகோவிலூர் - மடப்பட்டு - பண்ரூட்டி - நெல்லிக்குப்பம் - செம்மண்டலம் - கடலூர் ).


  • தேசிய நெடுஞ்சாலை 66 - பெங்களூரு - ஓசூர் - கிருட்டிணகிரி - ஊத்தங்கரை - செங்கம் - தி.மலை இரமனாச்ரமம் - திருவண்ணாமலை நகரம் - தி.மலை நாவக்கரை - கீழ்பெண்ணாத்தூர் -செஞ்சி - திண்டிவனம் - பாண்டிச்சேரி.


  • தேசிய நெடுஞ்சாலை 269- SH 6- திருவண்ணாமலை நகரம்- திருவண்ணாமலை தேனி மலை - சங்கராபுரம் - கள்ளக்குறிச்சி - திருச்சி .

படிமம்:திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் .jpg படிமம்:நெரிசலான தி.மலை சாலை.jpg

பேருந்து சேவைகள்

  • திருவண்ணாமலை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களுடனும் இணைக்கப்பெற்ற ஒரு நகரம் ஆகும்.

வானூர்தி நிலையம்

திருவண்ணாமலையில் வானூர்தி நிலையம் ஏதும் இல்லை. எனினும், பௌர்ணமிக்கு வரும் பக்தர்களின் நிலையை கருத்தில் கொண்டு அரசு இன்னும் 5 வருடத்தில் வானூர்தி நிலையம் அமைக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு 2009 ஆம் ஆண்டு "கலைஞர்" ஆட்சியில் வெளியிடப்பட்டு திண்டிவனம் சாலையில் இடம் தேர்வு செய்யபட்டு வருகிறது. இங்கிருந்து பெங்களூர் மற்றும் சென்னைக்கு சேவைகள் இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

தமிழ் நாடு
திருவண்ணாமலை சிறப்பு நிலை நகராட்சி

இக்கட்டுரை
தமிழக உள்ளாட்சி அமைப்புகள்
என்ற தொடரில் ஒரு பகுதி


ஏனைய மாவட்ட்ங்கள் ·  அரசியல் நுழைவு
தமிழக உள்ளாட்சி நுழைவு

வெளி இணைப்புகள்

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. The Hindu: திருவண்ணாமலையில் 10 இலட்சம் பக்தர்கள் தீப தரிசனம்
  5. "Tiruvannamalai". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  6. "Climatological Information for arani,India". India Meteorological Department. பார்க்கப்பட்ட நாள் 2012-12-29.
  7. "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவண்ணாமலை&oldid=1527267" இலிருந்து மீள்விக்கப்பட்டது